Tag Archive: கலிகர்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11

[ 12  ] யக்‌ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன் “என்ன செய்கிறீர்? நீர் என்னை அறியமாட்டீரா?” என்றான். “எவராயினும் நிறுத்துக என்று எனக்கு ஆணை, பாண்டவரே” என விழிதிருப்பி சதமன் சொன்னான். சினத்தை அடக்கியபடி  “நான் இளைய யாதவரை பார்த்தாகவேண்டும், இப்போதே” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் எவரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91746

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10

[ 9 ] இளைய யாதவரைப் பார்ப்பதற்காக தன் பன்னிரு மாணவர்களுடன் காலவர் காட்டிலிருந்து கிளம்பினார். உசிநாரத்தைக் கடந்து திரிகர்த்தத்துக்குள் நுழைந்து வாரணவதம் சென்று ஏழு சிந்துப்பெருக்குகளைத் தாண்டி யாதவ நிலத்திற்குள் நுழைந்தார். சப்தஃபலம் என்னும் யாதவச் சிற்றூரில் இளைய யாதவர் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார். செல்லும் வழியிலேயே இளைய யாதவரைப் பற்றிய செய்திகளை கேட்டறிந்தார். தமையனுடன் கொண்ட பூசலாலும் யாதவ குடிப்போர்கள் அளித்த கசப்பாலும்  உளம் நைந்த இளைய யாதவர் அங்கு கராளசிவத்தை பூசனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91737

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 69

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 4 அவை நிறைவுற்று ஜராசந்தர் அரண்மனைக்குத் திரும்பியபின் நெருப்பு எரியும் உடலுடன் மகளிர் மாளிகையில் அரசியின் மஞ்சத்தறைக்குச் சென்று அங்கே அணி களைந்துகொண்டிருந்த மிலிந்தையிடம் பிருஹத்சேனர் கூவினார் “இழிமகளே, நீ எண்ணியிருப்பதென்ன? ஜராசந்தன் நம் மகளுக்கு தந்தைக்கு நிகரான வயதுடையவன். இழிபண்பின் உறைவிடம் அவன். ஆசுரநாட்டு இழிமகள் ஜரையின் மைந்தன். அவன் அரண்மனையில் அவன் அரசியருக்கு தொழும்புப் பணி செய்ய அனுப்பவா நம் மகளை நேர்ந்து பெற்றோம்? மடியிலிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77626

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 68

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 3 ”பிருஹத்சேனர் மண்ணாளும் விழைவு கொண்டிருந்தாலும் மன்னருக்குரிய எவ்வியல்பும் கொண்டவரல்ல. முடிசூடிய மறுநாள் அவர் வீணையுடன் மகளிர் அறையில் புகுந்தார் என்றும் பின்னர் மகதத்தின் நிலைப்படைத் தலைவரிடமே செங்கோலையும் மணிமுடியையும் அளித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்” என்றான் சாத்யகி. “விழவு நாட்களில் அரியணை அமர்ந்து முடிசூடி முறைமைகளைக் கொள்வதன்றி மன்னரென அவர் ஆற்றியது ஏதுமில்லை. மகதம் தன் காலடியில் அவரை வைத்திருந்தது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மகதத்துக்குச் சென்று சிற்றரசர்களுக்குரிய நிரையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77617

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3

பகுதி ஒன்று : மாமதுரை [ 3 ] “விரிகடல் சூழ்ந்த தென்னிலமாளும் நிகரில் கொற்றத்து நிலைபுகழ் செழியனே கேள்! இமயப்பனிமலை முதல் தென்திசை விரிநீர் வெளிவரை பரந்துள்ள பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் நகரமான அஸ்தினபுரியின் கதையைச் சொல்கிறேன்” என்று சொல்லி லோமச கலிகர் தலைவணங்கினார். அவருக்குப்பின் அமர்ந்திருந்த பிற சூதர்கள் தங்கள் இசைக்கருவிகளிலிருந்து கை தூக்கி அரசனை வணங்கினர். தென்மதுரை மூதூர் நடுவே அமைந்த வெண்மாடமெழுந்த அரண்மனையின் செவ்வெழினி சூழ்ந்த பேரவையில் தன் அரியணையில் பாண்டியன் ஒள்வாள் கருந்தோட் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55655

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 2

பகுதி ஒன்று : மாமதுரை [ 2 ] மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் “மேலும்” என்று கேட்டபோது எதிரே இருந்த கற்சிலை புன்னகைத்தது. ஈதென்ன கற்சிலைக்கு வண்ண உடை என கலுழ்ந்து மூக்கைச் சிந்தியபின் அதை தொட்டுப்பார்க்க முன்னகர்ந்தபோது தரை பின்னோக்கிச்சென்றது. ஆகவே இன்னொரு தூணைப்பற்றிக்கொண்டு கால்தளர்ந்து அமர்ந்துகொண்டான். அந்தக் கற்தூணிலிருந்த சிலையின் கை நீண்டு அவனைப்பற்றி மெல்ல அமரச்செய்தது. அது வியர்வையும் ஈரமுமாக இருந்த முதிய கை. சிலையின் கையைப்பற்றியபடி இளநாகன் “மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55620