மணியை கதாநாயகனாக வைத்து ஒரு சினிமா எடுக்க லோகி எண்ணியிருந்தார். பெரெச்சன் என்பது அதன் பெயர். காணாமல்போன எருமையைத்தேடி ஒரு கிராமத்திற்கு வரும் பெரெச்சன் என்னும் அயலவனின் கதை. அவன் ஒருவகை ஞானி. ஒருவகை மூடன். மணி அதைநடிக்க மிகவும் விரும்பினார். கஸ்தூரிமானுக்குப்பின் லோகி பொருளியல் சிக்கலில் இருந்தபோது இலவசமாக நடிக்கவும் முன்வந்தார். அன்று அவரது இடம் உச்சத்தில் இருந்தது. ஆனால் லோகி அவர் செய்தவற்றுக்கு மறுஉதவியாக அதைப்பெற தயங்கினார். ”அவன் என் தம்பி.. …
Tag Archive: கலாபவன் மணி
Permanent link to this article: https://www.jeyamohan.in/85471
மணி -2
[ தொடர்ச்சி ] மிகச்சிறந்த நகைச்சுவையுணர்ச்சி கொண்டவர் மணி. படப்பிடிப்பரங்கில் சில நடிகர்களைச் சுற்றித்தான் கூட்டம் இருக்கும். முக்கியமானவர் கமல்ஹாசன். இன்னொருவர் மோகன்லால். பெரும்பாலான கதாநாயகர்கள் தனிமையை விரும்புபவர்கள். அது அவர்களின் உயரமான இடத்தைத் தக்கவைக்க உதவும். கமல் இருக்குமிடம் நகைச்சுவையால் வெடித்துக்கொண்டே இருக்கும். அவரது நண்பர்கள் அனைவருமே அவரது நகைச்சுவைக்கூற்றுக்களைத்தான் அவர் இல்லாதபோதும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வகைமையில் ஒருவர் மணி. படப்பிடிப்புக்கு மணி வருகிறார் என்பதே ஒரு பெரிய கொண்டாட்டம். பாபநாசம் படத்தின் ’பிரமோ’வில் மணி எனக்காக …
Permanent link to this article: https://www.jeyamohan.in/85462
மணி-1
கலாபவன் மணியை நான் முதலில் கண்டது ஒரு தங்கும்விடுதியின் மின்தூக்கிக்குள். அதன் கதவுகள் மூடப்போகும்கணத்தில் உள்ளே நெடுக்குவாட்டில் கால்பங்கு தெரிந்த லோகிததாஸ் என்னிடம் “வா வா, கேறு” என்றார். நான் காலைவைத்து அது மூடுவதைத் தடுத்து உள்ளே சென்றேன். லோகி என் தோளைத் தொட்டு “மெலிந்துவிட்டாயே” என்றார். அது அவர் எப்போதும் சொல்வது. குண்டாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் என நம்புபவர் அவர் .குண்டாக ஆவதற்காக வாழ்க்கைமுழுக்க முயன்றவர்.. அருகே நின்றவர் கலாபவன் மணி. நான் ஓரிரு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/85453