Tag Archive: கலாச்சாரம்.

ஆண்களின் கண்கள்…

அன்புள்ள … எண்பதுகளில் நானும் சில மாதங்கள் மும்பையில் இருந்திருக்கிறேன். அப்போது மிக நெரிசலான, ஆனால் மிக நட்பார்ந்த, தங்குமிடம் தவிர எல்லாமே மலிவான, ஊராக இருந்தது அது. நான் தாராவியில் இருந்தேன்– வேலை ஏதும் இல்லாமல்.  திரும்பத்திரும்ப முகங்களைப் பார்த்துக்கொண்டு ஊரைச்சுற்றிவருவதே அன்றெல்லாம் வாழ்க்கையாக இருந்தது. பொதுவாக நகரங்களை நாம் விரும்பவேண்டுமென்றால் மனிதர்களை விரும்பவேண்டும். சென்னையில் அதன் தூசியும் இரைச்சலும் பலருக்குப் பிடிக்காமல் ஆகும்போதே அங்கே கொப்பளிக்கும் வாழ்க்கை பெரும் மோகத்தை உருவாக்குவதையும் கண்டிருக்கிறேன். குறிப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1668

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்

  பண்படும் தருணங்கள்… கல்ச்சர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர் எவரெனத்தெரியவில்லை. ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நவீன அர்த்தத்தில் அது பொருந்தாத ஒன்று. ஆகவேதான் ஆயுதப்பண்பாடு வன்முறைப்பண்பாடு என்றெல்லாம் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் என் நோக்கில் அச்சொல்லாட்சியில் உள்ள நுட்பமான நம்பிக்கைநோக்கு மிகமிக உவப்பானதாக உள்ளது. மானுட இனம் மேலும் மேலும் பண்பட்டபடித்தான் வருகிறது என நான் நம்புகிறேன். கடந்த நூறாண்டுகளில் மனிதகுலத்தில் உருவாகிவந்த கருத்துக்களை வைத்தே இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5486

தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், காந்தி காமம் – எனும் தொடர் படித்தேன் அருமையாக உள்ளது. இது தொடர்புடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேற்கின் தாந்தீரிக முறைகள் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து இது வரை சரியான ஆராய்ச்சி எதுவுமே செய்யப்படவில்லை. இந்தியா ஒரு காலனியாதிக்க சக்தியாக மேற்குக்கு சென்றிருந்ததென வைத்துக்கொள்வோம். ஒரு இந்திய  ஆராய்ச்சியாளன் ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை எப்படி புரிந்து கொள்வான் என சிந்திக்க முயன்றிருக்கிறேன். அதில் உருவாகும் மேற்கின் ஆன்மிகம் குறித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5259

ஆஸ்திரேலியாவில் இனவெறித்தாக்குதல்

அன்புள்ள ஜெயமோகன், ஆஸ்திரேலியாவில் இப்போது இந்தியர்கள்மேல் நடக்கும் இனவெறித்தாக்குதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜாஸ் டயஸ் ஆஸ்திரேலியாவின் தாக்குதல்களைப் பற்றி இம்மாத சண்டே இண்டியன் இதழில் மிண்டு பிரார் என்ற ஆஸ்திரேலிய சீக்கியர் எழுதிய கடிதம் உள்ளது. ”ஆஸ்திரெலியர்கள் மேல்தான் குற்றமா?” என்ற அக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில் அவர் அங்கே படிக்கச் சென்றிருக்கும், குடியேறியிருக்கும் இந்தியர்களின் நடத்தை பற்றிச் சொல்லி அது அங்குள்ள மக்களிடம் உருவாக்கியிருக்கும் ஆழமான மனக்கசப்பை பற்றிச் சொல்லியிருக்கிறார். நூற்றுக்கு நூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3120

சாருவின் அவதூறு

அன்புள்ள ஜேஎம், நீங்கள் சினிமா கம்பெனிகளில் அவமானப்படுவதாக ஒருவர் சாரு ஆன்லைன் இணையதளத்தில் எழுதியதை வாசித்தேன். மொத்தமாக அந்தக்கடிதமே ஒரு பினாமி ஏற்பாடு என்று தெரிந்தது. ஆனால் அந்த ஒருவரி மட்டும் எனக்கு கொஞ்சம் மனக்கஷ்டத்தைக் கொடுத்தது. அப்படி இருந்தால் அது எவ்வளவு துரதிருஷ்டவசமானது என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் கருத்து என்ன? பரணி செல்வம் அன்புள்ள பரணிசெல்வம், இன்னும் கொஞ்சநாளுக்கு சாரு இந்த வகையில் பிஸியாக இருப்பார். இதைவைத்து வண்டியை ஓட்டுவார்.  அவருக்கு மனநிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3211

விளிம்புக்கும் கீழே சில குரல்கள்

சிலமாதங்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டுக்குவந்திருந்தார். இலக்கியவாசிப்பு உள்ளவர். கேரள அரசுத்துறை ஊழியர்.  மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிதீவிர உறுப்பினர். தமிழிலக்கிய உலகம்பற்றி ஒரு குத்துமதிப்பான புரிதல்தான். கருத்துக்கள் சற்றே மையம் விலகிச் சென்று விழும். எல்லா தளங்களிலும் அவருக்கே உரித்தான ஒரு புரிதல் உண்டு. பேச்சுவாக்கில் நான் தலித்இலக்கியம் என்று ஏதோ சொன்னேன். அவர் சட்டென்று அதைப்பிடித்துக் கொண்டார். தலித் என்றாலே ஒரு ஆதிக்கமோசடிச் சொல், தலித்துக்கள் எல்லாரும் வன்முறையாளர்கள், அவர்கள் எழுதுவதெல்லாம் மானுடமறுப்பு என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/551

தீண்டாமைக்கு உரிமை கோரி

1992ல் தருமபுரியில் ஒருமுறை ஒரு டீக்கடைக்குப்போய் டீ கேட்டேன். என்னை உற்று நோக்கியபின்னர் ‘பால் இல்லை’ என்றார் டீக்கடைக்காரர். இன்னொருநாள் போனபோது ‘சீனி இல்லை’ என்றார். பிறர் டீ குடிப்பதை நான் கவனித்தேன். ‘ஏன் டீ இல்லை என்கிறீர்கள்?’ என்றேன். ‘இங்கே வேற சமூகத்து ஆட்கள் சாப்பிடமாட்டார்கள். நாங்கள் தீண்டாச்சாதி’ என்றார் கடைககரர் மிகவும் தயங்கியபடி. ‘நான் சாப்பிடுவேன்’ என்றேன். அவர்கள் நம்பவில்லை. பிடிவாதமாக டீ வாங்கி சாப்பிட்டேன். அடிக்கடி நடைபோகும்போது அங்கே போய் அமர்ந்து டீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/337