Tag Archive: கலாசாரம்

’தீட்டு ’

    கனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை”. இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். – ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். ஆழ்ந்த முழுமைத்தேடலால், மெய்மைநோக்கிய பயணத்தால் அவ்விடைகள் கண்டடையப்படுகின்றன. அவ்வாறு கண்டடைபவர்களைத் தொடர்பவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127

நாராயண குரு எனும் இயக்கம்-2

தொடர்ச்சி நடராஜகுரு   நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7524

நாராயண குரு எனும் இயக்கம் -1

  நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7522

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ”என் பெண் வருகிறாள்” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில், ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த, குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/199

தேர்வு – ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் தளத்தில் தேர்வு கட்டுரை படித்தேன், மிகவும் சரியான விதத்தில் உங்கள் மகனுக்கு இருந்த பிரச்சினையை புரிந்துகொண்டு அவரை சரியான பாதையில் திருப்பிவிட்டீர்கள். ஆனால் நம் சராசரி தமிழ் குடும்பச்சூழலிலும், கல்விச்சூழலிலும் இத்தகைய புரிதல் கொண்ட சுற்றம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. நானும் இடது கை பழக்கமுள்ளவன் தான், எழுதுவதைத் தவிர பல் துலக்குவது, கணினியின் மௌஸ் எல்லாவற்றையும் இடது கையில் எளிதாக பயன்படுத்த முடிகிறது. ஆனால் நான் சிறுவயதில் படித்த பள்ளியில் இடது கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58744

கழிப்பறைகள்- கடிதங்கள்

“இந்த அத்தனை கிராமங்களிலும் சுலப் அமைப்பு கட்டிக்கொடுத்த நவீனக் கழிப்பறைகள் இருந்தன. எந்தக்கழிபப்றையையும் நெருங்கமுடியாது. அப்பகுதி முழுக்க மலக்குவியல் கழிப்பறையை சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டு அதைச்சுற்றியே கழித்து வைத்திருந்தனர். ‘இதைச் சுத்தமாக வைத்திருக்கக்கூடாதா?’ என பலரிடம் கேட்டோம். ‘ஆமா அதுதான் சோலி…’ என்றார்கள். கட்டப்பட்ட ஒருமாதம்கூட அவை பயன்பாட்டில் இல்லை” அன்பின் ஜெ.. உங்கள் கட்டுரையின் மிக முக்கியமான வார்த்தைகள் இவைதான். நோய் முதல் நாடி நோக்கினால் வரும் உண்மை. 1970களில், என் கிராமத்தில் பொதுக்கழிவறைகள் கட்டப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56603

கதிர்காமம்- ஒரு பாடல்

எமது நாட்டுப் பக்திப்பாடல் ஒன்று.பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளரும் எனது தங்கை (அம்மாவின் தங்கையின் மகள்) எனக்கு புத்தாண்டுப்பரிசாக YouTube இல் பதிவேற்றி அனுப்பி வைத்த பாடல். http://www.youtube.com/watch?v=bzeIKxwJC24&feature=youtu.be கதிர்காமம் மிகவும் புராதனமான முருகன் கோவில்.இலங்கையின் தூர தெற்கில் அமைந்துள்ளது.கிழக்கு மாகாணத்தின் முடிவில் உள்ள யால காட்டினையடுத்து அமைந்துள்ள இக்கோயில் மிகவும் சிறியது.கருவறையில் விக்கிரகம் எதுவும் இல்லை.ஒரு பெட்டி மாத்திரம் உண்டு.கப்புறாளைகள் எனப்படுவோர் வாயைத் துணியால் கட்டிப் பூசை செய்கிறார்கள்.இவர்கள் வேடுவர்களின் வழி வந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. முன்னைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36011

நீர் பங்கீடு

‘வெள்ளிமலை மக்கள் அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் விண்ணப்பம்’ என்று ஒரு செய்தி படித்தேன். வெள்ளிமலை ஊரைச்சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். ”அந்த பணி போய் பள்ளீல சொல்லணும்…நடக்கப்பட்ட காரியமில்லை” என்றார் அவர் ஆவேசமாக”…எங்க வெள்ளத்தை எடுத்து அப்பிடி அவனுக குடிக்க வேண்டாம்… வெளையாடுதானுகவளா…?” நான் சமாதானமாக ”குடிவெள்ளம்தானே…” என்றேன். ”அப்டி அவனுக எங்க வெள்ளத்த எடுத்து குடிச்ச வேண்டாம்…” என்று இறுதியாகச் சொல்லிவிட்டார். பிரச்சினை இதுதான். குமரிமாவட்டத்தில் குடிநீர்பிரச்சினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/489

சிற்பப் படுகொலைகள்…

‘சுத்திகரிப்பு’ என்பதற்கு ‘அழித்தொழிப்பு’ என்று பெயர் உண்டு என்று · பாஸிஸம் கற்பித்தது. சமீபத்தில் கவிஞர் சேரனுடன் திருவட்டாறு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அதை நினைவுகூர்ந்தேன். திருவட்டாறு கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. மகாகும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. அதன் பொருட்டு கோயிலில் உள்ள சிற்பங்களையெல்லாம் மணல்வீச்சு முறையில் சுத்தம் செய்திருக்கிறார்கள். விளைவாக சிறுவயது முதலே என் மனதைக் கவர்ந்த சிற்பங்கள் அனைத்தும் கல்பிண்டங்களாக மாற்றப்பட்டுவிட்டிருக்கின்றன. சிற்பங்களில் காலப்போக்கில் படியும் அழுக்கையும் எண்ணைப்பூச்சையும் களைவதற்காக இம்முறை கையாளப்படுவதாகச் சொல்கிறார்கள். நுண்ணிய மணலானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/327

ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…

தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார். தற்செயலாக சில கவிதைகளுடன் தமிழினி வசந்தகுமாரை அவர் காணவந்தார். கவிதைகள் நவீனக் கவிதையின் மாற்றங்களை உணராதவையாக இருந்தன. வசந்தகுமார் அவரிடம் அவற்றை அச்சிடுவது உகந்தது அல்ல என்று சொல்லிவிட்டு பொதுவாகப்பேசிக் கொண்டிருந்தபோதுதான் அவரது மகத்தான அனுபவச்சொத்தும் கூர்மதிமூலம் தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/59