Tag Archive: கலங்கியநதி

பி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனுடன் வார இறுதி (25-05-2012) இனிமையாகக் கழிந்தது. கேஷவ், பிரபு, சிவா என நாங்கள் ஒரு குழுவாக பி.ஏ.கிருஷ்ணனை ஞாயிறு காலை அவர் தங்கியிருந்த Indian YMCA ஹோட்டலில் சந்தித்தோம். அவரது துணைவியார் ரேவதி கிருஷ்ணனும் வந்திருந்தார்கள். ஞாயிறு மாலை லண்டன் தமிழ்ச் சங்கம் பத்மனாப ஐயர், நா.கண்ணன் தலைமையில் பி.ஏ.கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை எங்களுடன் லண்டன் சுற்றிப்பார்ப்பதாகத் திட்டம். பல முறை லண்டன் வந்திருப்பதாகவும் தனக்கு லண்டன் ஓரளவு தெரியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27698/

கலங்கியநதி – கடிதங்கள்

அன்புள்ள சார், “இன்னொருவகையில்கூடப் பார்க்கலாம். ரமேஷ் அவனுடைய தந்தையிடம்தான் தொடங்குகிறான். அவர் தன் காலகட்டத்து இலட்சியவாதமான காந்தியத்தால் ஈர்க்கப்பட்டது போல அவன் தன் காலகட்டத்து இலட்சியவாதமான மார்க்ஸியத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அவரைப்போலவே அவனும் நதியில் இறங்காமல் கரையில் கால்நடுங்கக் காத்து நிற்கிறான். அந்தக் கலக்கம்தான் இந்நாவல் முழுக்கப் பலகோணங்களில் விவரிக்கப்படுகிறது. ஆர்வமும் விரக்தியும் எழுச்சியும் கசப்பும் மாறி மாறி வரும் அவன் மனநிலை அதையே காட்டுகிறது. நேர்மாறானவர் ராஜவன்ஷி. அவர் நதியில் குதித்து நீந்துபவர். கடைசிக் கணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25825/

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] – 3

கலங்கிய நதி நாவலில் அழகிய குறியீட்டுத்தன்மையுடன் ஒரு சித்தரிப்பு வருகிறது. கலங்கியநதி என்பது நேரடியாகப் பெருவெள்ளம் சுழித்தோடும் பிரம்மபுத்திராவைக் குறிக்கிறது. ‘அழகிய நதி, பார்த்தால் சலிக்காதது’ என்று சொல்லும் டெல்லி வருகையாளனுக்கு உள்ளூர்க்காரன் ‘அதன் கரையில் வெள்ளத்தை பயந்து வாழ்ந்தால் தெரியும்’ என பதில் அளிக்கிறான். அஸ்ஸாமின் பிரச்சினையை பிரம்மபுத்ரா நதியுடன் பலகோணங்களில் நாவல் ஒப்பிட்டுச் செல்கிறது. அதில் ஒன்று இந்த விவரிப்பு. வெளியே இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பெருக்குள்ள நதி கொப்பளித்து ஓடும்போது விடுதிக்குள் கொஞ்சம் பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25641/

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2

இந்திய அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, மக்களின் எரியும் வாழ்க்கைப்பிரச்சினையை எப்படிக் கையாளும் என்பதை சென்ற கால்நூற்றாண்டாகக் கண்கூடாகக் கண்ட அனுபவம் தமிழர்களுக்குண்டு. இலங்கைத்தமிழர் பிரச்சினை இந்திய அதிகாரிகளின் அறியாமை, அலட்சியம், ஆணவம் மூன்றினாலும் திசைமாறி, சீரழிந்து, பேரழிவில் முடிந்த ஒன்று என்றால் மிகையல்ல. அதன் ஒவ்வொரு படியிலும் இந்தியாவின் வெளியுறவுத்துறையும்,உளவுத்துறையும், உள்ளூர் பாதுகாப்புத் துறைகளும்,இராணுவமும் முடிந்தவரை எல்லாச் சிக்கல்களையும் உண்டுபண்ணியிருக்கின்றன. ஒரு தருணத்திலேனும் அப்பிரச்சினையுடன் தொடர்புள்ள மக்களின் வாழ்க்கைச்சிக்கல்களோ உணர்ச்சிகளோ கருத்தில் கொள்ளப்படவில்லை. பி.ஏ.கிருஷ்ணன் ஒவ்வொருமுறையும் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25576/

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1

பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25545/