Tag Archive: கர்மயோகம்

கர்மயோகம் 4

அறியப்படக்கூடியதன் ஓர் எல்லயைத் தாண்டும் போது அறிய முடியாமையில் அது வேரூன்றியிருப்பதை நாம் காண்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு அன்றாடச் செயல்பாடும் அந்த எல்லைக்கு அப்பால் நம்மால் அறியவே முடியாத ரகசியத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. மழை என்ற எளிய பெளதிக யதார்த்தம் அதன் உச்சத்தில் பிரபஞ்சத்தை நிலைநாட்டும் மர்மத்தில் இருந்து தொடங்குகிறது’

Permanent link to this article: https://www.jeyamohan.in/7038

கர்மயோகம் 3

ஒரு சமூகம் மேலும் மேலும் அன்பை வளர்க்கிறது என்று கொள்வோம். அச்சமூகத்தில் அன்புக்குரிய தேவதையாக கருதப்படும் தெய்வம் வளர்கிறது என்றுதானே பொருள். அன்பு வளர்கிற போது அச்சமூகம் மேலும் அன்பு கொள்கிறது என்றுதானே பொருள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7027