பிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை மெல்லிய பேச்சொலிகளிலிருந்து உணரமுடிந்தது. இரு வாயில்களில் முதுபெண்டிரின் தலைகள் எட்டிப்பார்த்தன. விழிகள் உணர்வுகளை உள்ளிழுத்துக்கொண்டு அணைந்திருந்தன. படிகளிலேறி இடப்பக்கம் திரும்பி சிற்றறை ஒன்றின் வாயிலை அடைந்த பின் ஏவலன் திரும்பி மெல்லிய குரலில் “பெருந்தோழி இதற்குள்தான் இருக்கிறார். அவர் எவரிடமும் பேசுவதில்லை, பிறரை …
Tag Archive: கர்த்தமை
Permanent link to this article: https://www.jeyamohan.in/109793
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79
எட்டு : குருதிவிதை – 10 சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான் தெரிந்தது. குதிரையை நிறுத்திவிட்டு இறங்கி அணுகிவந்த ஏவலனிடம் கடிவாளத்தை அளித்தார். “அமைச்சரா?” என்றார். “ஆம், மேலே காவல்மாடத்தில் நின்றிருக்கிறார்” என்றான் ஏவலன். சகுனி குறுகிய படிகளில் ஏறி கோட்டைக்கு மேலே சென்றார். சுவரோடு ஒட்டியபடி நின்றிருந்த வீரர்கள் தலைவணங்கினர். அவர் காவல்மாடத்தை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/104171