Tag Archive: கர்க்கர்

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–73

பகுதி ஏழு : நீர்புகுதல் – 2 ஸ்ரீகரர் சொன்னார். நான் விதர்ப்பினியாகிய ருக்மிணியைக் கண்டு நிகழ்ந்தவற்றைச் சொல்லி மீளலாம் என்று எண்ணினேன். அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை அவர்களுக்கு விதர்ப்பத்தின் அரசமைவில் ஏதாவது சொல்லுரிமை இருக்கலாம். பிரத்யும்னனின் செல்வத்தை கோரும்போது அவருடைய சொல்லும் உடனிருப்பது நன்று. பிரத்யும்னனும் அநிருத்தனும் பெயர்மைந்தரும் அழிந்திருந்தாலும்கூட துவாரகையின் கருவூலத்தில் இருந்து ருக்மியிடம் அளிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் பகுதிக்கு ருக்மிணி உரிமைகொண்டாடலாம். ருக்மிணி ஒரு சிறுவனை பெறுமைந்தனாக குடியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132113/

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-13

வடகாட்டில் நாகர்களின் சிற்றூரான ஐராவதீகம் பிறர் அணுகமுடியாததாகவே இருந்தது. அவ்வண்ணம் ஓர் ஊர் இருப்பதை கதைகள் மீண்டும் மீண்டும் கூறின. மாபெரும் புற்றுகளே வீடுகளென அமைந்த நகரம். மூன்று முகம் கொண்டு எழுந்து நின்றிருந்த மலைமுடிக்கு அப்பால், அதன் ஆறுவிழிகளின் நோக்கால் ஆளப்படும் நிலம். அங்கிருந்து ஊர்களுக்குள் வரும் நாகர்கள் அரவுநஞ்சு கொண்டுவந்து விற்பவர்களாகவும் ஊருக்குள் புகும் அரவுகளை பிடித்துச்செல்பவர்களாகவும்தான் சூழ்ந்திருந்த யாதவர்களால் அறியப்பட்டார்கள். நாகநஞ்சு அருமருந்து என மருத்துவர்களால் சொல்லப்பட்டது. நாகக் கடி ஏற்று நினைவழிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116834/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31

அரசப்பேரவை போரின்பொருட்டு கூடத்தொடங்கிய பின்னர் ஒருபோதும் திருதராஷ்டிரர் ஒரு சொல்லேனும் அவையில் சொன்னதில்லை என்பதை அவையினர் உணர்ந்திருந்தனர். அவர் அங்கிருப்பதையே பல தருணங்களில் மறந்தும்விட்டிருந்தனர். சஞ்சயனின் அறிவிப்பு அவை முழுக்க திகைப்பையும் பின் முழக்கத்தையும் உருவாக்கியது. கனகர் கைகாட்ட கொம்பின் பிளிறலோசை எழுந்து அடங்க அவை அமைதிகொண்டது. திருதராஷ்டிரர் பீடத்தின் இரு பிடிகளிலும் கைகளை ஊன்றி உடலை உந்தி எழுந்து நின்றார். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி அவர் வணங்கியபோது அவருடைய பேருடலின் தசைகள் அசைந்தன. அப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110625/

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-42

நைமிஷாரண்யத்தில் கர்க்கர் இளைய யாதவரிடம் கேட்டார் “யாதவனே, வேதம்நாடும் முதற்பொருள் முடிவிலாதது எனில் வேதம் எனத் திரள்வது என்ன? எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை?” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு நாளும் இந்தப் பெருங்களத்தில் மானுடர் போரிடுகிறார்கள். வெல்கிறார்கள், தோற்கிறார்கள். வெற்றியுடனும் தோல்வியுடனும் வேதம் இணைந்திருக்கிறது. அவர்கள் பொருட்டு அவிசொரிந்து வேட்கும் அந்தணர்களாகிய நாங்கள் இங்கு இயற்றும் செயலின் பயன்தான் என்ன?” சண்டகௌசிகர் சொன்னார் “நேற்று முன்னாள் நெடுந்தொலைவிலுள்ள சிற்றூரில் இருந்து ஓர் எளிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108923/

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-41

பகுதி ஒன்பது: சொல் இளைய யாதவரின் குடில்வாயிலை வந்தடைந்த தௌம்யரும் கர்க்கரும் அதர்வ வேதியரான சண்டகௌசிகரும் அவர்களுடன் வந்த வேதியர்களும் ஒருகணம் தயங்கி நின்றனர். கர்க்கர் “அவர் உள்ளே இருக்கிறார்” என்றார். தௌம்யர் “ஆம், அதை உணர்கிறேன்” என்றபின் படியில் ஏறி கதவை தட்டினார். மூன்றாம் முறை தட்டுவதற்குள் கதவுப்படல் திறந்தது. இருளுருவாக இளைய யாதவர் அங்கே நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் குடிலில் தண்டிலிருந்த அகல்விளக்கின் ஒளி காற்றில் மிகக் குறுகி எரிந்தது. அவர் தலையிலணிந்த மயிற்பீலி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108898/

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 23

[ 8 ] காசிமன்னன் சகதேவனின் மகளாகிய கலாவதி உளம் அமையா சிற்றிளமையில் ஒரு சொல்லை கேட்டாள். அச்சொல்லில் இருந்தே அவள் முளைத்தெழுந்தாள். மானுடரை ஆக்குபவை ஒற்றைச்சொற்களே. அவர்கள் அதை அறிவதுதான் அரிது. ஒவ்வொருவருக்கும் உரிய தெய்வம் ஊழை ஒற்றைச் சொல்லென ஆக்கி அவர்கள் செவியில் ஓதுகிறது. பின்பு புன்னகையுடன் சற்று விலகி நின்று நோக்கிக்கொண்டிருக்கிறது. கைக்குழவியாகிய அவளை கோட்டைப்புறவளைப்பில் குறுங்காடு நடுவே இருந்த கொற்றவை ஆலயத்திற்கு கொண்டுசென்ற செவிலி ஆடையை திருத்தும்பொருட்டு அவளை நிலத்தில் அமர்த்திவிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87032/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17

பகுதி இரண்டு : அலையுலகு – 9 ஐராவதீகம் இருண்டு நிழலுருவக் கூம்புப்புற்றுக்களாக தெரிந்தது. மஞ்சள்நிற ஒளி எழுந்த அவற்றின் வாய்வட்டங்கள் இருளுக்குள் மிதக்கும் பொற்தாலங்கள் போல் நின்றன. “எங்கள் மூதாதையர்கள் இங்கு வரும்போது இவ்வில்லங்களில் மாநாகங்கள் வாழ்ந்திருந்தன. மூதாதையருக்கும் அவர்களுக்குமான ஆயிரம் ஆண்டு சமரில் நாங்கள் வென்றோம். இங்கு திரும்பி வருவதில்லை என்று மண்தொட்டு மும்முறை ஆணையிட்டு காட்டைக் கடந்து மலைக்குகைகளின் ஊடாகச் சென்று உள்ளே விரிந்த ஆயிரம் கிளைகொண்ட பிலத்தில் வாழத் தொடங்கினர்” என்றார் கர்க்கர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79132/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16

பகுதி இரண்டு : அலையுலகு – 8 மூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து கூட்டத்தை நோக்க நாகர்களின் சீறல் மொழியில் வாழ்த்தொலிகள் எழுந்தன. பெருமுரசம் மலை பேசத்தொடங்கியது போல முழங்கியது. குறுமுழவுகள் துடித்து பொங்கி யானைக்கு சுற்றும் துள்ளும் மான்கள் என அதனுடன் இணைந்து கொண்டன. அர்ஜுனனை கைபற்றி அழைத்துச் சென்று கௌரவ்யரின் முன்னால் நிறுத்தினர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79105/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 15

பகுதி இரண்டு : அலையுலகு – 7 நாகர் குலத்து முதுமகள்கள் இருவர் கொண்டு வந்து வாழை இலைவிரித்து பரிமாறிய ஏழுவகை கிழங்குகளையும் முயல் ஊனையும் மூன்று வகைக் கனிகளையும் தேன் கலந்த நன்னீரையும் அருந்தி அர்ஜுனன் எழுந்தான். நிழல் மரங்களின் நடுவே இழுத்துக் கட்டப்பட்ட காட்டெருதுத்தோல் தூளியில் அவனுக்கு படுக்கை ஒருக்கப்பட்டிருந்தது. அருகே புல் கனலும் புகை எழுந்து பூச்சிகளை அகற்றியது. அவன் படுத்துக் கொண்டபோது நாகர் குலக்குழந்தைகள் அவனைச்சூழ்ந்து நின்று விழி விரித்து நோக்கின. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79072/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 14

பகுதி இரண்டு : அலையுலகு – 6 இளவெயில் பூத்து இலைகளிலிருந்து சொட்டத் தொடங்கிய காலை. நாணம் கொண்டதென பசுமையில் மறைந்து எழுந்து உடல் வளைத்து சென்ற சிறு காலடிப்பாதையில் இருவரும் நடந்தனர். உலூபி அவன் வலக்கையை தன் இடக்கையால் வளைத்துப் பற்றி, விரல்களைக் கோத்து தன் முலை நடுவே வைத்து அழுத்தி கூந்தல் அவன் தோள்களில் சரிய தலைசாய்த்து உடன் நடந்துவந்தாள். அவர்களின் காலடியோசையை ஒலித்தது காடு. அவர்களைக் கண்டு எழுந்த பறவைகளின் ஒலியால் உவகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79034/

Older posts «