Tag Archive: கருத்துரிமை

கருத்துக்கெடுபிடி

  சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திரிச்சூர் லலிதகலா அக்காதமி தலைவராக இருந்தபோது அவருடைய அலுவலக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். நடக்கவிருந்த சர்வதேச நாடகவிழாவுக்காக வந்திருந்த சிலர் உள்ளே வந்தனர். என்னை எழுத்தாளர் என அறிமுகம் செய்துகொண்டதும் இயல்பாகப் பேச்சு ஆரம்பமாகியது. ஒருவர் பாகிஸ்தான் நாடகாசிரியர். இன்னொருவர் துர்க்மேனிஸ்தான்காரர். ஒருவர் ஈரான். இன்னொருவர் பங்களாதேஷ். அவர்கள் ஒன்றாகவே உள்ளே வந்தனர். அனைவருமே இஸ்லாமியர். ஆனால் வெவ்வேறு உள்மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள். நாடகத்தை சென்ஸார் செய்வதைப்பற்றிப் பேச ஆரம்பித்தபோது ஒவ்வொருவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96661/

எச்.ஜி.ரசூல்

பெருமாள் முருகனுக்காக பொங்கியவர்களின் மேலான கவனத்துக்கு….. 2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ண கடூரமாக வீசியது. என் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70704/

திருச்செங்கோடு

கருத்துரிமை இருக்கவேண்டும், ஆனால் அது எவர் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும் என்கிறார்கள். உலகில் எங்கும் அப்படி ஒரு கருத்து இருக்க முடியாது. கருத்துக்கள் என்பவை எப்போதுமே மாற்றுக்கருத்துக்களை உருவாக்கக் கூடியவை. மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து மட்டுமே அவற்றை எதிர்க்கவேண்டும் எழுத்தாளன் சமூகத்தின் மீதான விமர்சனத்தால்தான் அவன் எழுதவே ஆரம்பிக்கிறான். அதைச் சொல்லக்கூடாது, மனம் புண்படுகிறது என்பதைப்போல அறியாமை அல்லது திமிர் வேறேதும் இல்லை. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என தமிழின் அனைத்து எழுத்தாளர்களும் கடுமையான சமூக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69674/

பெருமாள் முருகன் கடிதம்-2

அன்புள்ள ஜெ, காலை தமிழ் இந்துவில் இந்த செய்தியைப் படித்ததிலிருந்தே மனது சரியில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள நமக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு பெரிய இழிவு. இங்கே பாரீசில் கருத்துரிமைக்காக மாபெரும் பேரணி நடைபெறுகிறது. பெரிய அளவில் மக்கள் திரள்கிறார்கள். சமூகமும் முன்னேறி செல்கிறது. நமது அழிவை நாமே பார்க்கப் போகிறோமா என்ன? புத்தகத்தைக் கொளுத்துவது ஒன்றும் நம் சமூகத்துக்குப் புதிதில்லையே. உண்மையில் எனக்கு பெருமாள் முருகன் மீது தான் கோபம் வருகிறது. அவரின் பின்வாங்கல் அவசரப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69655/

பெருமாள் முருகன் -கடிதம்

எந்த ஒரு எழுத்தாளருக்கும் இது போல நிகழ்வது வருத்தத்துக்குரிய ஒரே விஷயமே. தன்னை தானே விமர்சித்துக் கொள்ளாத சமுகம் தேங்கி அழிந்து போகும். தமிழகம் அதன் பயணத்தை தொடங்கி வெகுநாட்களாகி விட்டன. வந்தியத்தேவன் என்ற ஒருவன் வாழ்ந்தான் அவன் வீர சாகசங்கள் புரிந்து சோழ நாட்டை காப்பாற்றினான் என்று நம்பும் சமூகம் இது (so called வரலாற்றாய்வாளர்கள் உட்பட). இவர்களிடம் நீங்கள் இது கதை இதை கற்பனையாக பார்க்க வேண்டும் என்றால் எடுபடாது. கும்பல் அரசியலை யாராலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69648/

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக

பெருமாள் முருகன் அவரது நூல்களை திரும்பப்பெற்றுக்கொண்டுவிட்டார் என்றும் எழுத்திலிருந்தே விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் என்றும் செய்தி வந்திருக்கிறது. இந்த நாளைப்போல எழுத்தாளனாக வருத்தமளிக்கும் ஒரு நாள் சமீபத்தில் நிகழ்ந்ததில்லை வெறும் கண்டனங்கள், வருத்தங்களுக்கு அப்பால் சென்று இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, தேசிய ஊடகத்திற்கு இங்குள்ள எழுத்தாளர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று காட்டும் பெரிய நடவடிக்கை ஒன்று தேவை. ஏன் ஓர் அடையாளமாக ஒருநாள் புத்தகக் கண்காட்சியை மூடக்கூடாது? கருத்துரிமைக்கு எதிராக செய்யப்படும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக எழுத்தாளர்கள் அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69644/