Tag Archive: கருணாகரன்

மீளும் நட்பு

நட்புகள் ‘யாரும் திரும்பவில்லை’ இன்று இலங்கை நண்பர் கருணாகரன், ஆஸ்திரேலிய எழுத்தாளர் தெய்வீகனுடன் வீட்டுக்கு வந்திருந்தார். மதுரை ஆலயத்தைப் பார்த்துவிட்டு மதியம் வந்துசேர்ந்தார்கள். உடன் தெய்வீகனின் குடும்பமும் வந்திருந்தது. கருணாகரனை நான் 1990 முதல் அறிவேன். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில், அதன் பண்பாட்டு இதழான  ‘வெளிச்சம்’ – த்தின் ஆசிரியராக இருந்த காலம் முதல். எங்களுக்கிடையே அணுக்கமான கடிதத்தொடர்பும் குடும்ப உறவும் இருந்திருக்கிறது. அவருக்கு குழந்தைகள் பிறந்த செய்தி, எனக்கு மணமான செய்தி எல்லாமே கடிதம் வழியாகத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129546

நட்புகள்

  ‘யாரும் திரும்பவில்லை’ அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா அன்புள்ள ஜெ இப்போதுதான் இந்த இடுகையை முகநூலில் பார்த்தேன். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. வெளிப்படையாகச் சொல்லப்போனால் நான் உங்கள் மீது பெரிய மதிப்பு கொண்டவன் அல்ல. நீங்கள் உங்கள் நண்பர் அலெக்ஸ் மீது கொண்டிருக்கும் நட்பு, அவருடைய இறப்புக்குப்பின்னும் தொடரும் உதவிகளைப்பற்றி ஒரு நண்பர் சொன்னார். அவர்தான் இந்த இணைப்பை அளித்தார். அரசியல்ரீதியான கருத்துமாறுபாடுகளால் நாம் மனிதர்களைப் பார்ப்பதில்லையோ என்று முதல்முறையாகத் தோன்றியது. நன்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113144

‘யாரும் திரும்பவில்லை’

  ஒரு பெரும் கனவு எழுந்து  அது நரம்புகளில் புதிய ரத்தமாக ஓடிய நாட்களில், இடைவிடாது இலட்சியபுருஷர்களை உருவாக்கிக்கொண்டிருந்த பிராயத்தில் நான் கருணாகரனின் கவிதைகளை படிக்கவில்லை. அப்போதைய கவிஞர்கள் என்றால் சு.வில்வரத்தினமும் சேரனும் வ.ஐ.ச ஜெயபாலனும்தான். அது சகோதரப்போராட்டமாகச் சிதைந்து, வெறும்போராக உருமாறி, ரத்தம் மட்டுமேயானதாக மாறிவிட்ட பின்னர் வரலாறு குறித்த மாற்று நோக்குகள் உருவான வயதில் அவரது கவிதைகள் வாசிக்கக் கிடைத்தன. ஆரம்பத்தில் உதிரிக்கவிதைகளாக. பின்னர் அவரது தொடர்பு ஏற்பட்டது. தொடர்ச்சியான கடிதங்கள் வழியாக உரையாடிக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2687