Tag Archive: கருணர்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45

பகுதி 10 : சொற்களம் – 3 உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு அமர்விடம் அமைக்கப்பட்டிருந்தது. சாய்ந்துகொள்ள செம்பட்டு உறையிடப்பட்ட உருளைப்பஞ்சணைகளும் சுற்றணைகளும் போடப்பட்டிருக்க மேலே பட்டுத்திரைச்சீலை பறக்கும் தொங்குவிசிறிகளும் பாவட்டாக்களும் வெளியே சென்ற சரடுகளால் இழுக்கப்பட்டு அசைந்தன. நடுவே இருந்த அணிச்சேக்கையில் துருபதன் அமர்ந்துகொள்ள வலப்பக்கம் கிருஷ்ணனும் சாத்யகியும் அமர்ந்தனர். இளவரசர்கள் பின்னால் அமர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73006

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 11

பகுதி 4 : தழல்நடனம் – 1 அணுக்கச்சேவகன் அநிகேதன் வந்து வணங்கியதும் அர்ஜுனன் வில்லைத்தாழ்த்தினான். “இளையவர் சகதேவன்” என்றான். அர்ஜுனன் தலையசைத்ததும் அவன் திரும்பிச்செல்லும் காலடியோசை கேட்டது. அந்த ஒவ்வொரு ஒலியும் அளித்த உளவலியை தாளாமல் அர்ஜுனன் பற்களைக் கடித்தான். பின் வில்லை கொண்டுசென்று சட்டகத்தில் வைத்துவிட்டு அம்புச்சேவகனிடம் அவன் செல்லலாம் என கண்காட்டினான். தன் உடலெங்கும் இருந்த சினத்தை ஏதும் செய்யாமல் இருக்கும்போதுதான் மேலும் உணர்ந்தான். மரவுரியால் முகத்தைத் துடைத்துக்கொண்டு சென்று பீடத்தில் அமர்ந்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70719

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69979

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77

பகுதி பதினைந்து : அன்னைவிழி – 6 சரஸ்வதி ஆலயத்தின் முகப்பில் ரதம் நின்றபோது திரௌபதி திடமான கால்களுடன் இறங்கி வாழ்த்துக்குரல்களும் முரசொலியும் சங்குமுழக்கமும் சூழ சற்று நின்றாள். அவள் ஆடையில் குழலில் எங்கும் சிறு குலைவும் இருக்கவில்லை. வரையாட்டின் அடிபிறழாத நேர்நடை என ரதத்திரைச்சீலை விலக்கி வலப் பாதத்தை படியில் எடுத்துவைத்து இறங்கிய மாயை எண்ணிக்கொண்டாள். அவள் தொடைகள் வலுவிழந்து நடுங்கிக்கொண்டிருந்தன. இறங்கியபின் ஒருகையால் ரதத்தூணைப்பற்றிக்கொண்டு சமநிலையை மீட்டு சேவகர் நீட்டிய தாலத்தை பெற்றுக்கொண்டு திரௌபதிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69201

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27

பகுதி ஆறு : கரும்புனல் கங்கை – 1 ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள். தன் தனியறைவிட்டு அவர் வெளியே வந்ததும் இடைநாழியில் காத்திருக்கும் அமைச்சர் அவரிடம் முதன்மைச்செய்திகளை சொல்லத் தொடங்குவார். மெல்ல நடந்தபடியே அவர் கேட்டுக்கொள்வார். ஒற்றர்களை அமைச்சர் அழைக்க அவர்களும் வந்து சேர்ந்துகொண்டு மெல்லிய குரலில் சொல்லத்தொடங்குவார்கள். துருபதன் எதையும் கேட்பதில்லை என்று அமைச்சர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65835

» Newer posts