Tag Archive: கருணன்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28

பகுதி நான்கு : மகாவாருணம் [ 1 ] “அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை மணந்து காதலாடியவை நவநிதி சர்க்கங்கள் என ஒற்றை பாதமாக அமைந்துள்ளன. அர்ஜுனனுக்கும் மீனாட்சிக்குமான காதல் ஏழு உட்பகுதிகள் கொண்ட ஒரு படலம். அவை உங்களைப்போன்ற சிற்றிளையோர் கேட்கத்தக்கவை அல்ல.” “குபேரபுரியில் அர்ஜுனன் நூற்றெட்டு ஆண்டுகாலம் மகளிருடன் மகிழ்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92279

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40

[ 7 ] கருணன் வருவதை தருமன் தொலைவிலேயே பார்த்துவிட்டார். அவனை அப்போது அவர் விரும்பவில்லை. அவர் முகக்குறியிலேயே அதைப்பார்த்துவிட்ட அர்ஜுனன் புன்னகையுடன் “சூதர்கள் நம் எதிர்காலம், மூத்தவரே. அவர்கள் நம்மைத் தொடர்வதை நாம் தடுக்கமுடியாது. அவர்கள் நம்மைப்பற்றி சொல்வது நமக்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கும். ஆனாலும் அதுவே நாம் என்று நெடுமூச்சுடன் அமையவேண்டியதுதான்” என்றான். நகுலன் “அவர்களின் இளிவரல் பலசமயம் உளம் சோரச்செய்கிறது” என்றான். “அவர்கள் அனைத்தையும் மாபெரும் கேலிக்கூத்தாக ஆக்கிவிடுகிறார்கள்” தருமன் “சூதர்களின் நிலை இரக்கத்திற்குரியது” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90058

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35

ஏழாம் காடு : சாந்தீபனி [ 1 ] பிருஹதாரண்யகத்தில் இருந்து கிளம்பி சாந்தீபனிக் காட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தருமனும் தம்பியரும் இளைய யாதவரையே எண்ணிக்கொண்டு சென்றனர். ஆனால் ஒரு சொல்லேனும் அவரைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. அவரைப்பற்றி எண்ணும்போது எப்போதுமே எழுந்துவரும் உளஎழுச்சியும் உவகையும் அப்போது உருவாகவில்லை. முன்பு எப்போதும் உணர்ந்திராத தனிமையும் நிலைகொள்ளாமையுமே வந்து மூடிக்கொண்டது. தருமன் அவரைப்பற்றி பேச எண்ணினார். துவாரகையில் என்ன நடந்தது, சால்வன் தோற்கடிக்கப்பட்டுவிட்டானா? ஆனால் அவ்வினாவுக்கு விடையென வழக்கம்போல உள்ளம் பொங்கியெழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89935

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25

[ 3 ] கோபாயனரின் சொற்கூடத்திலிருந்து வெளிவந்து நின்ற தருமன் எண்ணங்களால் எடைகொண்ட தலையை உதறுவதுபோல அசைத்தார். “இவ்வழி, மூத்தவரே” என்று அழைத்த நகுலனை நோக்கி பொருளில்லாமல் சிலகணங்கள் விழித்தபின் “ஆம்” என்றார். அவர்கள் மழைச்சாரல் காற்றில் பீலிவிசிறிகள் போல அலையலையாக வந்து தழுவிய குளிர்ந்த முற்றத்தில் இறங்கி உடல் குறுக்கியபடி நடந்தனர். தன் குடில்முன் வந்ததும் தருமன் நின்றார். இளையவர்கள் அவரை வணங்கி விடைபெற்றனர். குடிலுக்குள் சென்று தனிமையை உணர்ந்ததுமே திரௌபதியின் உறுதிதான் அவர் நெஞ்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89707