பகுதி 9 : பெருவாயில்புரம் – 4 சாத்யகி மிக விரைவாகக் குளித்து உடைமாற்றிக்கொண்டு தனக்கு அளிக்கப்பட்ட அறையில் பதற்றத்துடன் காத்திருந்தான். அவனால் அமரவோ அசையாது எங்கும் நிற்கவோ முடியவில்லை. நிலையழிந்தவனாக அறைச்சதுரத்திற்குள் சுற்றிவந்தான். மூன்று பெரிய சாளரங்களுக்கு வெளியே துவாரகையின் கடல்சூழ்ந்த துறைமுகப்பு தெரிந்தது. முதலையின் முகமென கடற்பாறைகளாலான முனம்பு கடலுக்குள் நீட்டியிருக்க மூன்றுதிசைகளிலும் கடல் அலைகள் வெண்பட்டாடையின் நுனிச்சுருள்கள் போல வளைந்து அலையடித்துக்கொண்டிருந்தன. அப்பால் கடல் இளநீல நிறமாக கண்கூசும் ஒளியுடன் வானில் எழுந்திருந்தது. …
Tag Archive: கரன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/72762
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 40
பகுதி 9 : பெருவாயில்புரம் – 3 துவாரகைக்குச் செல்லும் நீண்ட கற்பாளச்சாலையில் நடக்கும்போது சாத்யகி ஏன் கைகளை கோர்த்துக்கொள்ளச் சொல்லப்பட்டது என்பதை உணர்ந்தான். தொழும்பர்களாக வந்தவர்கள் அனைவருமே ஒரு பெருநகரை முதன்முறையாக பார்ப்பவர்கள். அவர்களால் இரண்டுபக்கத்தையும் நோக்கி விழிதிகைக்காமலிருக்க முடியவில்லை. பெருகிச்சென்றுகொண்டிருந்த கூட்டத்தில் கைகோர்த்துக்கொண்டு சென்றபோதிலும் அவர்கள் முட்டிமோதி தடுமாறினர். இரண்டுமுறை கைச்சங்கிலி உடைந்து மூவர் நெரிசலில் தவறிச்சென்றனர். பின்னால் வந்த வீரர்கள் அவர்களைப் பிடித்து மீண்டும் மந்தையில் சேர்த்தனர். சாத்யகியும் இருபக்கங்களையும் நோக்கியபடி வந்தான். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/72717