Tag Archive: கரடி

கரடி- ஒரு கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு , நலமா ? . இயல் விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் . உங்களுக்கு கடிதம் எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டன . தொடர்ந்து உங்கள் கட்டுரை , சிறுகதைகள் போன்றவைகளைப் படித்துகொண்டு இருக்கிறேன் . வெண் முரசு என்னும் விசுவரூப படைப்பு வேறு இன்னும் வாசிப்பின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அளிக்கிறது . சமீபத்தில் நீங்கள் எழுதிய மூன்று சிறுகதைகளையும் படித்தேன் (கரடி, பெரியம்மாவின் சொற்கள் , ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76981/

கரடி – கடிதம்

அன்பு ஜெயமோகன், கரடி சிறுகதை படித்தேன். “உள்ளூர் சர்ச்சில் இருந்து ஜாம்பன் உண்மையில் இந்துவா என்று பாதிரியாரின் உதவியாளர் வந்து விசாரித்துப்போனார். அவர் ஜாம்பவ ரிஷியின் மகன், ஆகவே பிறப்பால் பிராமணர் என்று முதலாளி சொன்னார்”, “ஜாம்பன் “அஷ்க பஷ்குலா புர்ர மர்ருலா மாஜமாஜ மாஜ பர்ர பர்ர பர்ரலா பாரலா பர்ர பர்ர கோரீகா கோரிய கோரீ” என்றது. காண்டவன் அதைக்கேட்டு இந்தியில் “ஜாம்பவவ சம்ஹிதையும் ஜாம்பவநீதியும் ஜாம்பமாகாத்மியமும் மட்டும் வாசித்தாலே போதும் என்று மூத்தவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75159/

ஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3

அன்புள்ள ஜெ ஒருகணத்திற்கு அப்பால் வாசித்தேன். ஜப்பானிய படம் ‘இகிறு’ வை நினைவு படுத்தியது. மேலோட்டமாக காணின் வயதான கிழவர் ஒருவர், வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க துடிப்பவர் போல் தோன்றும். உண்மை அதுவல்ல. இளமையின் அருகாமை மட்டுமே ஒரு புத்துணர்ச்சி தரவல்லது. வாழ்வின் புதிய கிளைகளை உருவாக்கவல்லது. அந்த திரைப்படத்தில் யாரும் செய்ய இயலாத ஒரு பொதுப்பணி ஒன்றை அவர் செய்வார். ஒரு பூங்காவை ஏற்படுத்துவது என. யயாதியில் இந்த ஒரு புள்ளி உண்டோ என ஐயுற்றிருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75160/

பழக்கப் படுத்துதல்

ஆசிரியருக்கு, “கரடி” மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது வீட்டு விலங்காக பழக்கப் படுத்துதல் என்கிற ஒட்டு மொத்த நிகழ்வு பற்றி. ஆங்கிலத்தில் taming மற்றும் domestication என்கிற இரு வேறு வார்த்தைகள் உள்ளது. taming ஒரு விலங்கை பழக்கப் படுத்துதல் , domestication ஒன்றை வீட்டு விலங்காக்குதல், அதாவது ஒரு இனத்தையே உருவாக்குதல். இக்கதையில் கரடி tamingல் இருந்து domestication நோக்கி கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75149/

ஜீவ காருண்யம்

ஆசிரியருக்கு, “கரடி” மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது மனிதனிடம் உள்ள ஜீவ காருண்யம் (compassion) என்பது பற்றி. முதலில் இருந்தே கரடி பணிவானது, முதலாளிக்கு மரியாதையை அளிப்பது, இடும் ஆணைகளுக்கு ஒத்துழைப்பது, தன்னை மாற்றிக்கொள்ளக் கூட ஏற்பது, இறுதியில் கிட்டத் தட்ட மனிதனாவது என படிப்படியாகக் காட்டப் பட்டிருக்கிறது. அதே சமயம் முதலாளிக்கு கரடியைத் தவிர பிற சர்க்கஸ் ஊழியர்களிடம் இரக்கமில்லை. ஒட்டுமொத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75147/

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு கதைகளில் உச்சவழு ,முடிவின்மைக்கு அப்பால் ,கடைசி முகம் போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமானவை .பல முறை உங்களுக்கு மெயில் அனுப்ப நினைத்து பயத்தினால் அனுப்ப முடியாமல் தவிர்த்திருக்கிறேன் ..சில மெயில்களை ஒரு சில வரிகள் மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி இருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75232/

சவரக்கத்தியும் துப்பாக்கியும்

ஆசிரியருக்கு , “கரடி” மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது கரடி மனிதனாக வளர்ந்து தன்னை ஆக்கிய சவரக் கத்தியை கைக் கொள்வது வரை . மயிர் அடர்ந்த மிருகங்களான சிங்கம், கரடி முதலியவை கொன்றுண்ணிகள் மற்றும் இரு உண்ணிகள் என்பதும், மயிர் குறைந்த உயிரினங்களான யானை , காண்டாமிருகம் , நீர்யானை போன்றவை சாக பட்சிணிகள் என்பது கவனிக்கத் தக்கது. கூடவே நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75145/

மத்திம மார்க்கம்

ஆசிரியருக்கு, ஒருகணத்துக்கு அப்பால், பெரியம்மாவின் சொற்கள் மற்றும் கரடி இம்மூன்று கதைகளின் பொது அம்சம் என்பது மத்திய மார்க்கம். குழைந்தும் இல்லாத திடமாகவும் இல்லாத ஒரு கரைசல், ஆனால் விளைவுகள் வேறு வேறு. எல்விஸ் ப்ரெஸ்லி ஒன்றும் உன்னத கலை வடிவம் அல்ல. உயர் கலையின் சற்று மட்டுப் படுத்தப் பட்ட கேளிக்கை வடிவம். கிருஷ்ணாபுர சிற்பங்கள் வெறும் நிர்வாண பொம்மைகள் அல்ல, மேம்படுத்தப் பதட்ட கலைப் படைப்பு. பெரியவர் இதில் இரண்டிலும் சென்று வருகிறார், இரண்டிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75151/

கரடி [சிறுகதை]

ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும் ஒரு வேர்கூட மயிரில்லாமல் நன்றாக மழித்து மஞ்சளும் விளக்கெண்ணையும் கலந்த பிசினை அதன் மேல் பூசி வழித்துவிட்டு அரைமணிநேரம் அமர வைத்தபின் துணியால் கீழ்நோக்கித் துடைப்பேன். அதன்பின்னர்தான் முட்டையும் பன்றியிறைச்சியும் கலந்த கோதுமைத்தவிடு உணவாக அளிக்கப்படும் என்று அதற்குத்தெரியும். நான் என் கைகளைத் துடைத்துக் கொண்டிருக்கும்போதே எழுந்து உணவுக்குச்செல்லத் தயாராகிவிடும்.இது 1962ல் நடந்தது. அப்போது நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75070/