Tag Archive: கம்பராமாயணம்

மோட்டெருமை

இனிய ஜெயம், பிராமணர் என்றதுமே பசுதான் நினைவில் எழுகிறது. ஆண்டாள் வீட்டில் எருமையைக் கண்டதும் ஏனோ தெரியவில்லை ஒரே குதூகலமாக இருக்கிறது. அந்த எருமை வெறுமே கன்றின் நினைவு எழுந்ததற்கே பாலை சொரிகிறது. கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93147

கடிதங்கள்

டியர் ஜெ நாஞ்சில் நாடனை Virginiaவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . கம்பராமாயணம் பற்றிப் பேசும்படி கேட்டுக்கொண்டேன் . பேச்சு எப்பிடி போகும்னு தெரியல தம்பி பாப்போம் என்றார் . பேச ஆரம்பித்தவுடன் மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்ச் சொற்களைப் பற்றி ஆரம்பித்து கம்பனில் ஆழ்ந்தார் . அம்பறாத்தூணி என்ற சொல்லுக்கு விளக்கம் , சீதைக்கும் அனுமனுக்கும் அசோக வனத்தில் நடந்த உரையாடல் போன்றவற்றை மிகவும் அழகாக விளக்கினார். நாஞ்சில் நாடனைபோல் ஒரு நல்லாசிரியன் கம்பராமாயணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29359

பாரதி மகாகவியே

என்னிடம் பல நண்பர்கள் கடிதம் மூலம் ஒரு வினாவைக் கேட்டார்கள். பாரதி மகாகவியா என வாதித்த தரப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என. ஜடாயு, மரபின்மைந்தன், எம்.டி.முத்துக்குமாரசாமி மூவருமே தங்கள் தரப்பைத் தீவிரமாக எடுத்துச்சொன்னார்கள் என்றும், இந்த விவாதம் தீவிரமாக முன்னகர அவர்கள் காரணம் என்றும் சொன்னேன். இதை நான் விவாதமாகவே பார்க்கிறேன், முடிவுகட்டலாக அல்ல. ஆகவே விவாதத்தின் வலுவான எல்லாத் தரப்புக்குமே இணையான மதிப்புதான். சரி, அந்த எதிர்விவாதங்களில் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்டார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22092

ஊட்டி காவிய முகாம் (2011) – 1

கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும் முகாம் அரங்கு மாலை நடை மாலை நடை நாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை கவிஞர் தேவதேவன் உணவு இடைவேளையில் ஒரு உரையாடல் ஜெயமோகன் ஊட்டி காவியமுகாம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/17069

கம்பன் கண்ட மயில்

கம்ப ராமாயணம் அளவுக்கு முடிவிலாது மூழ்க இடமளிக்கும் தமிழ் இலக்கியம் வேறொன்று இல்லை. இந்திய அளவில் வியாச மகாபாரதத்தை மட்டுமே ஈடு கூற முடியும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6969

இன்னொரு கம்பராமாயணம்:ஒரு கடிதம்

அன்பின் ஜெயமோகன், ஹ்யூஸ்டனிலிருந்து வணக்கம். கொங்கு நாட்டிலே 400 ஆண்டுகளுக்கு முன்னால் கம்பனுக்கு ஒரு பெரிய மரியாதையைச் செய்திருக்கிறார்கள். திருச்செங்கோட்டிலே எம்பெருமான் கவிராயர் என்பவர் வாழ்ந்து கம்பனை 1/3-ஆக இசை ராமாயணமாகத் தந்துள்ளார். வரிக்கு வரி கம்பனை ரசித்துச் சுருக்கிப் பாடப்பட்டது. தக்கை என்னும் தாளக் கருவி இப்பொழுது அருகிவிட்டது, ஸ்ரீரங்கத்தில் மாத்திரம் இருக்கிறது. எம்ஜிஆரின் கடைசி காலத்தில் தக்கை ராமாயணத்தை அச்சிட உத்தரவிட்டார். அது முதல் 5 காண்டங்களை மாத்திரம் தொல்பொருள் ஆய்வுத்துறை அச்சுப்போட்டு விட்டுவிட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/422