Tag Archive: கம்பன்

குருகு

விடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான்.  கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான்.  ரிச்சர்ட் டாக்கின்ஸின் பரிணாமத்தைப் பற்றிய நூலை  [The Greatest Show on earth] எனக்கு விவரித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் எனக்கு புரிந்தது பரிணாமவாதிகளிலேயே டார்வின்வாதிகளுக்கும் மெண்டல்வாதிகளுக்கும் நடுவே நுட்பமான ஒரு பிரிவினையும், உள் விவாதமும் உண்டு என்பதே. டாக்கின்ஸ் மெண்டல்வாதி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16748

மொழி,கம்பன் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ஒரு வேண்டுகோள். இணையத்தில் சமீபகாலமாக கம்பராமாயணம் பற்றி படித்து, அதை நல்ல விளக்க உரையுடன் படிக்கவேண்டும் என தோன்றியது. சமீபத்தில் ‘நன்று நம் கொற்றம்’ வரிகளை படித்துவிட்டு ஆவல் அதிகமாகிவிட்டது. தற்போது கிடைக்கும், நல்ல உரையுடன் கூடிய கம்பராமாயண பதிப்பு எது என்று கூறுங்களேன் (நேரம் கிடைக்கும் போது). சுஜாதா பற்றிய நீண்ட பின்னூட்டச் சண்டையில் என் பங்கும் உள்ளது என்ற குற்ற உணர்வில், சமீபத்தில் சிறுகதைகள் உட்பட எதற்கும் பின்னூட்டமிடவில்லை :-) – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16704

மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6

  பண்டைய கோயில்களை கூட்டுக்குடும்பமாகப் பார்த்துச்செல்பவர்களைக் கவனித்தால் சிற்பங்களுக்கு முன்னால் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் வேடிக்கையாக இருக்கும். குடும்பத்தலைவர்கள் விசித்திரமான கடுகடுப்புடன் விலகிச்செல்வார்கள். பெண்கள் அவசர அவசரமாக குழந்தைகளை ஏதாவது சொல்லி அதட்டுவார்கள்.  இளம்பெண்கள் கழுத்தை இறுக்கமாக வைத்துக்கொள்வார்கள். அழகர்கோயில் கோபுரச்சிற்பத்தின் முன்னாலிருந்து குழந்தைகளை அதிவேகமாக ‘பத்தி’க் கொண்டுசெல்லும் அப்பா அம்மாக்களை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறேன். என் வாசகர் ஒருவர் சஞ்சலத்துடன் ‘மத்தகம்’ ‘ஊமைச்செந்நாய்’ இரு கதைகளையும் அஜிதன் வாசித்தானா என்று கேட்டிருந்தார். ‘ஏன், யானை பற்றிய கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1702

குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]

 ‘போருக்கும் காமத்துக்கும் உள்ள உறவைக் கவனித்திருக்கிறீர்களா? சற்று தட்டிக்கொட்டி உருமாற்றினால் பெரும்பாலான காதல்கவிதைகளை போர் பற்றிய கவிதைகளாக மாற்றிவிட முடியும். கவனியுங்கள், சிறுகுழந்தைகளுக்கு உடலுறவை மல்யுத்தமாக எண்ணிக்கொள்கின்றன. உயிர்வதையுடன் மோதிக்கொள்ளும் இருமிருகங்கள் கைகளாலும் வாயாலும் செய்வதையே காமமும் செய்கிறது.ஓர் ஆணும் பெண்ணும் முயங்கி மோதிச் சண்டையிட்டுக்கொண்டால் அந்தச்சண்டை அதிகநேரம் சண்டையாக நீடிக்காது…” — ஒரு கட்டுரையில் மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் சொல்கிறார். காதல் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம் அவற்றில் ததும்பும் வன்முறையே என் கவனத்தில் படிகிறது. ‘தூண்டில் புழுவினைப்போல்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1087

கம்பனும் காமமும் :ஒருகடிதம்

//இன்றைய வாசகன் கம்பனில் தோய்வதென்பது ஒரு விடுதலை. நாம் வாழும் இரும்புச்சட்டங்களினால் ஆன உலகில் இருந்து , மண்ணிலிருந்து எழமுடியாத எடையில் இருந்து எழுந்து கனவுகளின் பெருவெளியில் அலைதல்தான் அது. அங்கே நம்மைக் கட்டுப்படுத்தும் அச்சங்கள் இல்லை. ஏமாற்றும் பாவனைகள் இல்லை. முக்கியமாக கம்பன் மெல்லமெல்ல நம்மை ஒழுக்கம் என்ற கவசத்திலிருந்தும் சற்றே விடுவித்து ஆத்மாவின்மீது இளம்காற்று படும்படி செய்கிறான். அதன் பின் தூய உள்ளுணர்வுகளினால் மட்டுமே உள்வாங்கப்படும் வனப்புகளில் உலவ விடுகிறான்.// [கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை] …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/513

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் முன்பக்கம் உள்ள குறத்தி சிலையை நானும் நண்பரும் ஒரு மதியம் முழுக்க அமர்ந்து பார்த்து ரசித்தோம். பல இடங்களில் அமர்ந்து, பல கோணங்களில் கண்ணோட்டி. ஒரு விதமான பரவச மயக்க நிலை.  திரண்ட பணைத்தோள்களும் நீண்ட கைகளும் கொண்டு ,இடை நெளித்து ,தொடை முன்னெடுத்து நின்று; அகன்ற மான்விழிகளால் விழித்து நோக்கி ஏதோ சொல்லவரும் பாவனை கொண்ட பன்னிரண்டடி உயரச்சிலை. அதன் உச்சகட்டப்பேரழகே ஒன்று ஒசிந்து பிறிது எழுந்து, விம்மிப்பருத்து நிற்கும் இணைமுலைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/374

கம்பனும் காமமும், இரண்டு

கம்பனின் காமச்சித்தரிப்பு பற்றி நிறைய நண்பர்கள் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். பலர் கம்பராமாயண நூல்களைப்பற்றிக் கேட்டிருந்தார்கள். அதைப்பற்றி விரிவாகவே ஒரு நூல் எழுதலாம் என்று சொன்னார்கள். கம்பன் தமிழில் வள்ளுவருக்கு அடுத்தபடியாக மிக அதிகமாகப்பேசப்படும் படைப்பாளி. நூலகங்களில் கம்பராமாயண ஆராய்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன. பொதுவாக கம்பன் குறித்த புலமை வெளிப்பாடுகள், கம்பனை சார்ந்து வெளிப்படுத்தப்படும் பக்தி ஆகியவற்றில் எனக்கு ஆர்வமில்லை. கம்பனை கவிஞனாக மட்டுமே காணும் நோக்குகளுடனேயே எனக்கு உடன்பாடு. நான் வைத்திருக்கும் கம்பராமாயணப் பதிப்புகள் இரண்டு. மர்ரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/312

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

கம்பராமாயணம் போன்ற பெருநூல்களை தொடர்ந்து படிப்பது இயலாது. பழங்காலத்தில்கூட ஒரு ஆசிரியரிடமிருந்து நாள்தோறும் சில பாடல்கள் என பாடம் கேட்பதையே செய்துவந்திருக்கிறார்கள். இன்றைய சூழலில் அது இயல்வதல்ல. நடைமுறையில் ஒன்று செய்யலாம். கம்பராமாயண நூலை எப்போதும் வாசிப்புமேஜையருகே வைத்திருக்கலாம். கண்திரும்பும்போதெல்லாம் பார்வையில் படும்படி. என் மேஜையருகே நாலாயிர திவ்ய பிரபந்தமும் இருக்கும். சிலகாலம் சீவக சிந்தாமணி இருந்தது. ஒருநாளில் அதிகம்போனால் ஐந்து பாடல்கள் வீதம் படிப்பதே சிறந்தது. ஆனால் படிப்பதைப்போலவே யாரிடமாவது சொல்லிச் சொல்லி பரவசமடைவதும் முக்கியமானது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/308

» Newer posts