Tag Archive: கம்பன்

எரிமருள் வேங்கை

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார். ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/53878/

கம்பனும் குழந்தையும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின் படைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான். இராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்….. இப்படிக்கு, பாலமுருகன், தஞ்சாவூர் அன்புள்ள பாலமுருகன், இப்படி புலவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81740/

இலக்கியமும் சமூகமும்

ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா? நம் பாட்டி சாப்பிட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60840/

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

மகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6982/

அணிகளின் அணிநடை

கேரளத்தில் நடந்த ஒருவிழாவில் அழகிய இளம்பெண்கள் கேரளமரபுப்படி சரிகையுள்ள வெண்ணிற ஆடை அணிந்து வட்ட முன்கொண்டையில் முல்லைப்பூச்சரம் சுற்றி கையில் தட்டில் மங்கலப்பொருட்கள் ஏந்தி வரிசையாக நின்றிருந்தார்கள். தாலப்பொலி என்ற தூயதமிழ்ச் சொல்லால் அது அங்கே குறிப்பிடப்படுகிறது. என்னுடன் வந்த இளம் மலையாள எழுத்தாளர் கடும் சினத்துடன் ”கொடுமை”என்று குமுறினார். தேநீர் அருந்த அமர்ந்திருந்தபோது என்னிடம் ”பெண்களை அவமதிப்பதற்கு இதைவிட வேறு வழியே தேவையில்லை…”என்றார். எங்களுடன் அந்த விழாவின் முக்கியப்பேச்சாளரான மிக வயதான மலையாளப்பேராசிரியரும் இருந்தார். ”…அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/512/

மரபிலக்கியம் – இரு ஐயங்கள்

செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் “நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம். எதற்காக நேற்று என்ன எழுதினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்?” என்பார்கள். இவை முதல் பார்வைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/387/

நாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்

இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா? நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம்? ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48709/

கம்பன் எழுதாதவை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, கம்பன் நிகழாத களங்கள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். செறிவான விளக்கம். ”அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்” – என்ற இறுதிச் சொற்றொடர் முத்திரை வாக்கியம். தங்கள் விளக்கம் குறித்து மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி ஆகியவற்றின் காலம் குறித்து எனது புரிதல் மட்டும் சற்று வேறுபடுகிறது. கம்பன் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சரஸ்வதி அந்தாதியும் ஏரெழுபதும் 15 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35773/

கம்பன் நிகழாத களங்கள்

அன்புள்ள ஜெ, வணக்கம்! கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ,ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை. இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது, “இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாரவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும்.இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல ,அறிவியல் ,தொழில், விளையாட்டு ,கலைகள்……என சகல துறைகளுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35003/

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22089/

Older posts «