Tag Archive: கமல்

கமல்- முடிவிலா முகங்கள்

கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து வைக்கிறான். உருகுகிறான், சிலிர்க்கிறான்,கொஞ்சுகிறான், அழுகிறான். பறவை திரும்பத்திரும்ப அவனிடமே வருகிறது. மூச்சுத்திணற ஓடிப்போய் எடுக்கிறான். ஏன் போகவில்லை என்ற பதற்றம், நல்லவேளை போகவில்லை என்ற ஆறுதல் விழித்துக்கொண்டேன். பதினெட்டு வயதில் நான் திருவட்டாறு ஆலயத்தின் களியரங்கில் பார்த்த கதகளி துல்லியமாக நினைவுக்கு வந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65684

‘வசவு’ம் பாபநாசமும்

தமிழில் சிறந்த நகைச்சுவைப் புனைவெழுத்துக்கள் குறைவு என்ற பேச்சு அடிக்கடி விவாதங்களில் வரும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டுவது வசவு தளத்தைத்தான். அரசியல்கட்டுரை, கவிதை, கதை, இலக்கியவிசாரம் என்ற பெயர்களில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் தமிழின் சிறந்த நகைச்சுவைப்புனைவுகள் என்பதில் நல்ல வாசகர்களுக்கு ஐயமிருக்கமுடியாது. கேலிச்சித்திரங்கள் மட்டும் நகைச்சுவை இல்லாமல் சோகத்துடன் போடுவார்கள். பாபனாசம் பற்றிய இக்கட்டுரையை வாசகர்கள் தவறவிடக்கூடாதென்பதற்காகவே இங்கே சுட்டி அளிக்கிறேன். எழுதியவர் பெயர் முதற்கொண்டு தகவல்பயனாளி வரை எல்லா தளங்களிலும் கற்பனை சொட்டும் இந்தக்கட்டுரைக்கு நிகரான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64643

கலைஞனின் உடல்

ஜெ நான் முதன் முதலாக ஒரு தரமான பாடகரை நேரில் பாடக் கேட்டது ஊட்டியில் யுவன் பாடிய போதுதான். பின்னணி இசை இல்லை , முழுமையாக்கப் பட்ட கச்சிதம் இல்லை , பதிவு செய்யப் பட்ட நுணுக்கம் இல்லை , இருந்தும் அது நேரில் ஜீவனுடன் இருந்தது , இத்தனைக்கும் யுவன் முறையாக பயின்றவரும் அல்ல . இந்த மின் சாதனங்களற்ற கடத்திகளற்ற இசை அனுபவமே அதை இன்னமும் உயிர்ப்புடன் நிகழ்த்தியது , பெரும் பாடகர்களின் பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64298

பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

பாபனாசம் படப்பிடிப்பு நேற்று [26-10-2014] முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம். சினிமாப்படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஓர் அரசு அலுவலகத்துடனோ வணிகநிறுவனத்துடனோ அதை ஒப்பிட்டால் அந்த வேறுபாடு திகைக்கவைக்கும். சினிமாவில் டீ பரிமாறுபவர் முதல் அனைவருமே சினிமா மேல் பெருங்காதலுடன் இருப்பவர்கள். சினிமாவை கவனித்துக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64127

மலைச்சாரலில்…

இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று சொல்லவேண்டும். கமலுடனும் அவருக்கு நெல்லை வட்டார வழக்கு சொல்லிக்கொடுக்க வந்திருந்த நண்பர் சுகாவுடனும் பேசி அவர்களுடைய அற்புதமானநகைச்சுவைக்காகச் சிரித்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். நடுவே மதன் கார்க்கி சுகாவை கூப்பிட்டு ஒரு பாடலுக்காக நெல்லையின் சிறப்புச் சொற்களைக் கேட்டார். அவற்றை பாட்டில் சேர்க்கமுடியாது என்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61084

கமலும் ஜீயரும்

அன்புள்ள ஜெமோ குமுதம் பேட்டியில் நீங்கள் கமலஹாசனின் நாத்திகமும் உங்கள் ஆத்திகமும் ஒன்றுதான் என்று சொல்லியிருந்தீர்கள். கீழே உள்ள படத்தைப்பாருங்கள். இதில் நான்குநேரில் ஜீயர் அருகே பவ்யமாக அமர்ந்திருப்பது அந்த நாத்திகர் கமலஹாசன் தான் . உங்கள் ஆத்திகமும் இதுதானா? ‘தழல்’ முடியரசன் அன்புள்ள தழல், படத்தை இன்னொரு முறை பாருங்கள். கமல் நெற்றியில் விபூதியுடன் இருக்கிறார். விபூதி அல்ல மேக்கப். பாபநாசம் படத்தில் வரும் சுயம்புலிங்கத்தின் தோற்றம் வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நானும் அங்கிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61051