Tag Archive: கன்யாகுமரி

கன்யாகுமரி கடிதங்கள்

  இனிய ஜெயம், கன்யாகுமரி குறித்து, தோழி சுசித்ராவின் கடித வரிசை பிரசுரம் ஆகத் துவங்கி இருக்கிறது. முழுதும் வாசித்து விட்டு வருகிறேன். இருப்பின்ம் அதில் சொல்ல ஒன்றுண்டு. கதை நேரடியாக ரவி எங்கே உளத் திரிபடைகிறானோ அங்கே துவங்குகிறது. உண்மையில் இன்றைய யதார்த்தத்தில் புது மணத் தம்பதிகளில் எத்தனை மாப்பிள்ளை ”பரிசுத்தமாக” தனது மனைவியை சேர்கிறான்? ரவியின் படைப்பாற்றலின் உரசலாக விளங்கும் கன்னிமையை ரவியும் கடை பிடிக்கிறான். விமலாவுக்கு முன் பெண் தொடர்புகள் ஏதும் அற்றவன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93264

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

    “கன்னியாகுமரி”யில் கலையில் எது உன்னதம், சப்ளிமேஷன் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்ற விவாதம் கதைமாந்தர் மத்தியில் தொடர்ந்து நடக்கிறது. அதை பிரவீணா கதை முடிவில் இப்படிச்சொல்கிறாள் – “அழகுணர்வு, நீதியுணர்வு, மெய்மைக்கான தேடல் மூன்றும் ஒன்று தான். அதைத்தான் சப்ளிமேஷன் என்றேன். (…) சப்ளிமேஷன் படியில் முன்னேறும் போது தான் வாழ்வுக்கு அர்த்தம் இருக்கிறது. சப்ளிமேஷன் கணம் தான் பிறப்பை நியாய படுத்திகிறது. மனிதர்களை இயங்க வைக்கும் வாழ்க்கையின் விசைகளில் மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93122

கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்

    அன்புள்ள ஜெ, “கொற்றவை”, உங்கள் புனைவுலகின் தலைநகரங்களில் ஒன்றான, கன்னியும் கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வந்து முடிகிறது. அறியமுடியா ஆழம், அவ்வாழத்தின் நீலம், கடக்கமுடியாமால் கடலாக விரிந்து விரிந்து செல்லும் பெருந்துயரம், அதன் கரையில் கனிவும் அருளுமாக மூக்குத்தி சுடர நிற்கும் கன்னி, காலங்களை வென்ற அவளது ஒற்றை பாதத்தடம் என்று கன்னியாகுமரியை ஒரு நிலம், நகரம், தொன்மம் என்பதை தாண்டி ஒரு படிம வெளியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. “கொற்றவை”யை வாசித்ததைத் தொடந்து “கன்னியாகுமரி” நாவலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93119

கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார், ஷாஜியின் இசையின் தனிமை நூல் பற்றிய கருத்தரங்கில் உங்களைச் சந்தித்தேன்.இன்று தி இந்துவில் வந்த கட்டுரை ஆத்மார்த்தமாக இருந்தது. உங்களின் கட்டுரைகள் சிலவற்றை படித்திருக்கிறேன். உங்களின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை புரிந்து கொள்ள இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். கட்டுரைகளே அதிகம் படிப்பதால் சிறுகதைகள் , நாவல்கள் மீது இன்னும் ஈர்ப்பு வரவில்லை. நண்பன் பெலிக்ஸ் படிக்கச்சொல்லிக் கொடுத்ததால் ஆதவனின் இரண்டு நாவல்கள், பா.சிங்காரத்தின் இரண்டு நாவல்களில் இரண்டாவது படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74847

கன்யாகுமரி

பிரவீணா நாவல் முழுக்க வருகிறாள். ஒரு குண்டூசியின் நுணி போல பளபளக்கிறாள். அவள் பேசும் சொற்கள் ஒவ்வொன்றிலும் அதே குண்டூசி நுனியின் கூர் ஜொலிக்கிறது. அவனை அறியாமல் அவன் மனதை முழுமையாக அறிகிறாள். வாத விவாதங்களில் அவனை வெல்ல வைப்பதாக விட்டுக்கொடுத்து ஒவ்வொரு கணத்திலும் அவனை அவள் வென்று வருகிறாள் கன்யாகுமரி விமர்சனம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62019

கன்யாகுமரி- கடிதம்

அன்பின் ஜெ , தொடர்ந்து வாசிக்கவும் தங்களுக்கு எழுதுவதன் மூலம் தொகுத்துக்கொள்ளவும் முயன்று கொண்டு இருக்கிறேன்.youtube இல் SRM TED என்றொரு பதிவில் தாங்கள் இப்படி கூறியிருப்பீர்கள்,”சு.ரா. வின் நினைவுடனே உறங்கச் சென்று அவர் நினைவுடனே விழித்தெழுந்த நாட்கள் என் பிரம்மச்சரிய நாட்கள் என்று”,பெரும்பாலான எனது பொழுதுகளும் அவ்வாறே கழிகிறது என்று நான் கூறுவதையும் மிகையாக எடுத்துகொள்ள மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன் .தங்கள் நேரத்தை உண்பதற்கு மன்னிக்கவும். “உணர்வு மற்றும் பொருளியல் ரீதியாக எவரையும் சுரண்டாதவொரு வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37925