Tag Archive: கன்னியாகுமரி

கதைகளின் வழி

அன்பின் ஜெயமோகன். வணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21353

வாசிப்பு – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கடந்த ஒரு வருடமாகத் தங்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன். நான் உங்களின் வலைப்பதிவுகளை வாசித்து, அவை மீதொரு பற்று ஏற்பட்டு இரு புதினங்கள் வாங்கினேன். ஒன்று ‘காடு’. மற்றொன்று ‘கன்னியாகுமரி’. முதலில் காடு வாசித்தேன். அதிகம் வாசித்துப் பழக்கமில்லாததால் அது ஒரு ‘adventure-thriller ‘ என்ற எண்ணமே இருந்தது. ஆனால், அதனை வாசித்து முடித்த கொஞ்ச நாட்களில் ‘அறம்’ தொகுப்புகளைத் தாங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்தீர்கள். அதனைப் படிக்கும்பொழுது ஒவ்வொரு சிறுகதையிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25598

மணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் எழுத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். 1985 இல் அமுதசுரபி இதழில் வெளிவந்த குறுநாவல் (தலைப்பு “மணிகர்ணிகா” என்று நினைக்கிறேன்) வாரணாசியின் காட்சிகளை என் இளமனதில் விதைத்து, அங்கு செல்லவேண்டும் என்ற நீங்காத ஆசையையும் என்னுள் ஏற்படுத்தியது. கடந்த வருடம், என் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு போகக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. கங்கையின் கரைகளைக் காணும் பொழுது “மணிகர்ணிகா” வே எனது ஞாபகத்தில் நின்றது. 1989 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20614

குமரியில் ராகவன்

பண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை. நான் கோதாவரிக்கரைக்கு இயற்கையை தேடிச்சென்றிருந்தபோது பா.ராகவன் எங்களூரில் அதை தேடி வந்திருக்கிறார்! கொள்ளை கொள்ளும் பூமி

Permanent link to this article: https://www.jeyamohan.in/16723

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள். மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11369