Tag Archive: கன்னிப்படையல்

கன்னிப்படையல் பற்றி…

அன்புள்ள ராஜகோபாலன் கன்னிப்படையல் படித்தேன். கதைகள் தரிசனத்தால், கவித்துவத்தால், கூர்ந்த அவதானிப்புகளால் அழகும் ஆழமும் பெறுவதுண்டு. அபூர்வமாகச் சிலகதைகள் அப்பட்டமான நீதியுணர்வாலேயே ஆழம் பெறுகின்றன. மேலதிகமாக எதுவும் தேவைப்படுவதில்லை. உடலில் இருந்து வெட்டி முற்றத்தில்போட்ட சதை போலக் குருதி வழிய அவை கிடக்கும். இது அத்தகைய ஒரு கதை. நீதிமறுக்கப்பட்டவர்களின் கண்ணீர் வரலாறு முழுக்க அதிகாரமுற்றத்தில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் என்றார் வள்ளுவர். அபூர்வமாக சில கண்ணீர்த்துளிகள் உலராமலேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவைதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36423

ராஜகோபாலனின் கன்னிப்படையல்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ ராஜகோபாலனின் கன்னிப்படையல் வாசித்தேன்.. கண்கலங்கச்செய்யும் கதை. இன்று நம்முடைய சமூகத்தில் நாம் கண்டுகொண்டிருக்கும் பல விஷயங்களை வைத்துப்பார்க்கும்போது செவிட்டில் அறைந்தது போல இருந்தது. சுரணையற்றுப்போன நீதிமன்றங்களும் சமூகமனசாட்சியும்தான் இந்தக்கதைக்கு சாட்சிகளாக இருக்கவேண்டும். இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை பத்மா நாராயணன் அன்புள்ள ஜெயமோகன் ராஜகோபாலனின் கதை வாசித்து ஆச்சரியப்பட்டேன். அவரது வாயுக்கோளாறு கதையிலே உள்ள நடைக்கும் கதைசொல்லக்கூடிய முறைக்கும் இந்தக்கதைக்கும் சம்பந்தமே இல்லை. இப்படி வேறுவகையான ஒரு கதையை எழுதமுடிந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உணர்ச்சிகரமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38226