Tag Archive: கன்னிநிலம்

கன்னிநிலம் 11

11 படகில் என்னை ஏற்றி கேபினுக்குள் கொண்டுசென்றதும் ‘ஸிட்!” என்று கூவி ,நான் அமரும் முன்னரே ஓங்கி கன்னத்தில் அரைந்தான் கன்னத்தில் மரு இருந்த அந்த ஹவல்தார் மேஜர். நான் சுதாரிக்கும் முன் அடிவயிற்றில் உதை விழுந்தது. அபப்டியே சரிந்து அமர்ந்தேன். ”நோ! நோ !அவரை ஒன்றும் செய்யாதீர்கள்! ப்ளீஸ்…ப்ளீஸ்…வேண்டாம் !வேண்டாம்!  ” என்று ஜ்வாலாவின் அலறலைக் கேட்டேன். அவளை இழுத்தபடி அடித்தட்டில் எஞ்சின் அறைக்குக் கொண்டுசென்றார்கள். என் இடது கையில் விலங்கு பூட்டை திறந்து படகின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3643/

கன்னிநிலம் 10

10 நாங்களிருவரும் சிறு குழந்தைகளாகி விட்டிருந்தோம். காடு எங்கள் விளையாட்டுப்பூங்காவாகியது. அதன் அடர்த்தி இருள் அனைத்தும் அழகாக மாறிற்று. அதன் உக்கிரமும் ஆபத்தும் விளையாட்டு ரகசியங்களாக மாறின. பாறைகளில் ஆர்ப்பரித்துகூவி ஏறி, புதர்களினூடாக வகுந்து சென்று, சிறு நீரோடைகளை சிரித்தபடி உருண்டைக்கற்களில் கால்வைத்து சமன்கொண்டு கடந்து சென்றபடியே இருந்தோம். அந்தக் களிவெறி அடங்கவேயில்லை. எங்கள் கைகளோ உடலோ ஒருவரோடொருவர் தொட்டால் அங்கேயே நின்று இறுகத்தழுவி முத்தமிட்டோம். காடு அவளுக்கு நன்குபயின்ற புத்தகம்போலிருந்தது. காய்களும் கனிகளும் மட்டுமில்லாமல் தளிர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3641/

கன்னிநிலம் 9

9 இரவில் அந்த இடத்தில் தூங்குவதற்கு அபாரமான க¨ளைப்பு நம்மை அடித்துச் சரிக்கவேண்டும். மண்ணிலிருந்து குளிர் பரவி நரம்புகளைக் குத்தியது.  மலைகளில் இருந்து வந்த குளிர் காற்று மரங்களைக் கோதியபடி ஊளையிட்டுச் சுழன்றுகொண்டிருந்தது. அதில் யானைகளின் பிளிறல்கள் அருகிலும் தொலைவிலுமாக கலந்து ஒலித்தன. எண்ணற்ற பிற விலங்கொலிகள். பூச்சிகள் எழுப்பிய ரீங்காரத்தின் தீவிரமான சுருதியில் அவ்வொலிகள் இணைந்து காடே ஒரு பெரும் இசையாக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது. நான் அருகே கேட்ட ஒரு பிளிறலால் விழித்துக் கொண்டபோது ஒருகணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3639/

கன்னிநிலம் 8

இரு இடங்களில் எங்களைத்தேடும் கும்பலில் இருந்து பதுங்கி தப்பினோம். காடு முழுக்க எங்களைத்தேடுகிறார்கள் என்று தெரிந்தது. இந்தப்பெண் கூடவே இல்லாவிட்டால் இந்தக்காட்டில் நடமாடவே முடியாது. மழை விட்டு ஈரம் உலர்ந்த இலைகள் காற்றில் சிலுசிலுத்தன. மழை இல்லாவிட்டால் மணிப்பூர் காட்டுக்குள் நீராவி நிறைந்துவிடும். வெக்கை ஆளைக்கொல்லும். வியர்வை உடலெங்கும் வழிந்தது. பெரிதாக மூச்சுவிட்டபடி கனத்த காலடிகளை எடுத்து வைத்து சேற்றில் நடந்தோம். இலைகளில் ஒட்டியிருந்த தேரைகள் தாவிக்குதித்தன. புதர்ப்பறவைகள் புப் புப் என்றபடி எழுந்து பறந்தன. ”தண்ணீர்”என்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3633/

கன்னிநிலம் 7

7 வெறும் பத்து நிமிடம்தான் அவகாசம். அதற்குள் தொலைவில் அவர்களின் அறிவிப்பு பியூகிள் முழங்குவதைக் கேட்டேன். நான் தப்பிவிட்டதை உணர்ந்துவிட்டார்கள். மெல்லிய ‘திப்திப்’களாக ரை·பிள்கள் வெடித்த ஒலியும் பறவைகள் எழுந்து கலைந்தொலித்த ஓசையும் கேட்டது. கலைந்த காட்டுபன்றியொன்று புதர்களினூடாக சீறி எங்களருகே ஓடியது. அவகாசமில்லை. வெறும் பத்துநிமிட இடைவெளி. காடு ஒரு திரை. ஆனால் அவர்களுக்கு காடு உள்ளங்கை போல தெரியும். நல்லவேளை அவர்களிடம் நாய்கள் இல்லை. பதுங்கித் தாக்கும் வசதிக்காக அவர்கள் நாய்களை வைத்துக் கொள்வதில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3629/

கன்னிநிலம் 6

இரவில் முகாமில் எவரும் தூங்கவில்லை. நான் நள்ளிரவில் எழுந்து சாப்பிட்டுவிட்டு  சிக்னல் அறைக்குப்போய் சிகரெட்டுகளாக பிடித்தபடி ஒரு சொல் கூடப் பேசாமல் காத்திருந்தேன். மானிட்டர் அலைகளை எழுப்பியபடி இரைந்துகொண்டிருந்தது. மாணிக்கம் ” ப்ச” என்றான் “என்ன?” “நேராக இம்பால் சி.எச்.க்யூவுக்கே முயற்சி செய்கிறேன். ”என்றான் ”அத்தனை தூரமா?”என்றேன் “இங்கே இந்த பாஸ்டர்டுகள் ஆப் செய்து வைத்துவிட்டு காலிடுக்கில் கைகளைப் பொத்திக்கொண்டு தூங்குகிறார்கள். பார்ப்போம். மேகங்கள் சாதகமாக இருந்தால் ஒருசில சொற்களை அனுப்பிவிட முடியும்….” அவன் மேலும்மேலும் பட்டன்களைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3591/

கன்னிநிலம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கன்னி நிலம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது.  டீடெயில்கள் தான் உங்கள் பலம். இந்தக்கதையில் அவை குறைவாகவும் நிகழ்ச்சிகள் அதிகமாகவும் இருக்கின்றன. பரபரப்பாக கதை நகர்கிரது. இந்தக்கதையை நீங்கள் என்ன நோக்கில் எழுதினீர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது சிவம் அன்புள்ள சிவம், நான் இரு ராணுவ நண்பர்களுடன் தங்கியிருக்கிறேந்- முகாமில். கடைசியாக நண்பர் கமான்டன்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக்கதை. இதை ஒரு த்ரில்லர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3621/

கன்னிநிலம் 5

காலை எட்டரைக்கு மழைவிட்டு ஒளி வந்தது. என் காயங்களை கட்டுபோட்டு டெட்டனஸ் ஊசி போட்டு ஆண்டி பயாட்டிக் சாப்பிட்டிருந்தேன். ஒரு பெக் ரம்மும். பிரமைகள் வழியாக அலைந்தபடி அரைத்தூக்கத்தில் இருந்தேன். மாணிக்கம் என் முன் குனிந்து பார்த்து ”மழைவிட்டுவிட்டது”என்றான் ”அண்டனா எப்படி இருக்கிறது ?’என்றபடி எழுந்தேன். “சரிசெய்ய மதியம் ஆகும். கீழிருந்தும் சிக்னல் ஏதும் கிடைக்கவில்லை.” ”சரி ”என்றபடி நான் எழுந்தேன். “நீங்கள் வேண்டுமென்றால் ஓய்வெடுக்கலாம்…” “பரவாயில்லை” என்றபடி அவசரமாக யூனி·பாமை அணிந்துகொண்டேன். வெளியே களேபரமாகக் கிடந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3587/

கன்னிநிலம் 4

நான் நள்ளிரவுதாண்டி எழுப்பபட்டேன். என்னைச்சுற்றி காற்றின் ஓலம் நிறைந்திருந்தது. கூடாரம் கிட்டத்தட்ட ஒருபக்கமாகச் சரிந்து பறந்தது. கைத்துப்பாக்கியுடன் எழுந்து அவளை நோக்கினேன். அவள் எழுந்து தன் கத்தியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள். வெளியே ஜவான் கார்பைனுடன் நின்றான். காற்று கூக்குரலிட்டபடி சுழன்றது. ”மழை வரப்போகிறது சார்” நான் வெளியே ஓடி சிக்னல் அறைக்குச் சென்றேன். சண்முகம் என்னைப்பார்த்ததும் ”குட்மானிங் செர் ”என்றான்  ”அங்கே அண்டனா சாய்ந்திருக்கலாம். இப்போது சிக்னலே இல்லை” ”நம் லோக்கல் சிஸ்டம் எப்படி இருக்கிறது?” “நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3572/

கன்னிநிலம்-3

மூங்கில் தறி அறைந்து கட்டப்பட்ட  மெல்லிய முள்கம்பியாலான வேலிக்கு நடுவே முகாமின் நீலப்பச்சைநிறக் கூடாரங்கள் காற்றில் உப்பி உப்பி அழுந்திக் கொண்டிருந்தன. மணல்மூட்டைகள் அடுக்கப்பட்டு உருவான சுற்று மதிலுக்கு அப்பால் எம் 249 ஸ்க்வாட்  ஆட்டமாட்டிக்  லைட் வெயிட் போர்ட்டபில் இயந்திரத்துப்பாக்கிகளின் மூக்குநுனிகள் தெரிந்தன. நிமிடத்துக்கு 750 ரவுண்ட் சுடக்கூடியவை. முகாமுக்குள் மரமேடைமீது எம் 203 கிரனேட் லாஞ்சர்கள் மூன்று நின்றன. ஒவ்வொன்றிலும் ஜவான்கள் தயாராக நின்றனர். நான்குபக்கமும் ரைபிள்கள் சூழ உள்ளே சென்றோம். வேலி மூடப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3570/

Older posts «

» Newer posts