Tag Archive: கன்னிநிலம்

கன்னிநிலம் நாவல் தொகுப்பு

1. கன்னிநிலம் அத் 1 2. http://www.jeyamohan.in/?p=3568 3. http://www.jeyamohan.in/?p=3570 4. http://www.jeyamohan.in/?p=3572 5. http://www.jeyamohan.in/?p=3587 6. http://www.jeyamohan.in/?p=3591 7. http://www.jeyamohan.in/?p=3629 8. http://www.jeyamohan.in/?p=3633 9. http://www.jeyamohan.in/?p=3639 10. http://www.jeyamohan.in/?p=3641 11. http://www.jeyamohan.in/?p=3643 12. http://www.jeyamohan.in/?p=3645 13. http://www.jeyamohan.in/?p=3668 14. http://www.jeyamohan.in/?p=3671 15. http://www.jeyamohan.in/?p=3673 16. http://www.jeyamohan.in/?p=3675

Permanent link to this article: https://www.jeyamohan.in/7237

கன்னிநிலம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நேரமின்மை காரணத்தால் தங்கள் வலைத்தளத்தை சில வாரங்களாய் தொடர முடியாமல் இருந்தது. இன்று ஒவ்வொரு இடுகையாய் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். கன்னிநிலம் தொடர்கதையைக் கண்டதும் ஆர்வம் மேலிட படிக்க ஆரம்பித்தேன். பரபரப்பாய் ஆரம்பித்து பட்டாம்பூச்சியாய் சிறகடித்து படபடப்பாய் முடித்திருந்தீர்கள். படிக்கப்படிக்க கதையின் போக்கை கணக்கிட்டு எனக்குள்ளேயே நூறு கதைகள் உருவாகியிருக்கும். முழுமூச்சாய் படித்துமுடிக்கையில் என்னையுமறியாமல் அழுதிருந்தேன். ஒரு நல்ல படைப்பை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இப்படிக்கு, ஜெகதீசன் அன்புள்ள ஜெகதீசன் யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3827

கன்னிநிலம் கடிதங்கள்

வணக்கம் குரு.     ஒவ்வொரு காலையிலும், பதினாறு நாட்கள் வாசகர்களை திணறடித்துவிட்டீர்கள்.!!     நேர்மையான, கடமையுணர்வுள்ள ராணுவ வீரனின் போர்க்கள காட்சியுடன் தொடங்கி, ஆன்மீகமான, ஒப்பற்ற காதலில் நுழைந்து, அதன் பரிசாக உட்சபட்ச தண்டனைகளை அனுபவித்து, மீண்டும் காதலின் முடிவிலியை நோக்கி செல்கிறது நெல்லையப்பனின் பாத்திரம்.,     அவன் முதல் பார்வையிலேயே “உலகின் மகத்தான அதிஷ்டசாலிகளில் நானும் ஒருவன்” என்று உணரும் தருணத்திலேயே காதல் தொடங்கிவிடுவதாக எண்ணுகிறேன், இல்லையென்றால் ஒரு பணயக்கைதிடம் ஏன் பிறகு இத்தனை பரிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3760

கன்னிநிலம் 16

மலைக்கு அப்பால் காடு வழிகளற்று பச்சை இலைச்செறிவாக தரையின் இருளாக காற்றின் ஓங்கார ஒலியாக நிறைந்திருந்தது. சூரியக்கதிர்கள் உள்ளே வராத காடு. வேய் மூங்கில் புதர்கள் அடந்த சேற்று நிலம்.  இந்த நிலத்தில் மூங்கில்களின் வகைமாதிரிகள் முடிவற்றவை. இளம்பச்சை நிறமானவை. கரும்பு போன்றவை. துல்லியமான ஒளி ஊடுருவும் குழல்கள்…ஒடித்து அபப்டியே தின்னக்கூடிய இளந்தளிர் மூங்கில்கள். மணிப்புரி மொழியில் ஒவ்வொன்ருக்கும் சொற்கள் உண்டு அவள் வளைந்து வளைந்து புதர்களைத் தாண்டிச்சென்றாள். நீண்டநேரம் எதுவும் பேசவில்லை. வெறி கொண்டது போன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3675

கன்னிநிலம் 15

    15 நான் விழித்துக் கொண்டபோது என் உடல் மெல்ல ஆடிக்கொண்டிருந்தது. நான் படுத்திருந்த தரை அதிர்ந்தது. உடனே முழு விழிப்பு வந்தது. அது ஒரு ராணுவ டிரக்தான். என்னைச்சுற்றி எம் 16 ரை·பிள்களும் எம் 4 கார்பைன்களும் கற்றாழைப்புதர்முட்களுடன் அடர்ந்திருப்பதுபோலச் சூழ்ந்திருந்தன. எழுந்துகொண்டேன். தலைசுழன்றது. இலேசாகக் குமட்டல் எடுத்தது. ”படுத்துக்கொள்ளுங்கள் லெ·ப்டினெண்ட்”என்றான் என் எதிரே அமர்ந்திருந்த ஹவல்தார் மேஜர். ”நாம் எங்கே போகிறோம்?” முன்னால் டிரைவரின் கேபினிலிலிருந்து நாயர் திரும்பி துணித்திரையை நீக்கி ” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3673

கன்னிநிலம் 14

    14 என் அறைக்குள் செல்ல நான் அப்போது விரும்பவில்லை. நான்கு சுவர்களுக்குள் அடைபடுவதை மனம் எதிர்த்தது. வெட்டவெளியில் வானத்தின் கீழ் நிற்க ஏங்கினேன். ”கார்ப்பொரல் ப்ளீஸ்…என்னை அந்த அறைக்குக் கொண்டு செல்லாதீர்கள்…ஐ ஹேட் இட்”என்று கெஞ்சினேன். ”நோ ஆர்டர்ஸ் ·பர் தட் ஸார்”என்றான் அவன் ”என்னை சிறையில்தானே போடவேண்டும்… இந்த வராந்தாவில் சங்கிலியால் கட்டிப்போடுங்கள்…. ப்ளீஸ். நான் வானத்தை பார்க்கவேண்டும்….” ”ஆர்டர் இல்லை சார்” என் புஜத்தைப்பற்றினான் ”மேஜரிடம் நான் கேட்கிறேன்….நான் கெஞ்சியதாகச் சொல்லுங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3671

கன்னிநிலம் கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ, கன்னிநிலம் முடியும் வரை உங்களுக்கு கடிதமெழுத வேண்டம் என்று தான் இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தை பற்றியும் ஒவ்வொரு கடிதம் எழுதலாம். அவ்வளவு இருந்தது, இருக்கிறது. கதையின் துவக்கமே தேவதேவனின் கவிதை கொண்டு ஆரம்பித்தது மிகப்பொருத்தம். கதையில் கவிதைகள் கொட்டிகிடக்கிறது. எனக்கு இப்பொழுதெல்லாம் கவிதை எழுதும் உற்சாகமே குறைந்து விடுகிறது. “இந்த ஆள் இப்படி அருமையான கவிதைகளாய் கோர்த்துக் கோர்த்து கதையே பண்ணுகிறாரே” என்று. சத்தியமாய் ஜெமோ, இந்தக்கதையை கிழித்துப் போட்டால் கவிதைகளாய் மிஞ்சும். யுத்தமானாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3701

கன்னிநிலம் 13

  என்னைக் கொண்டுசெல்லும்போதே அடித்தார்கள். நான் கால்தடுமாறிச் சுவரில் முட்டி விழுந்தபிறகு எழவே அனுமதிக்கவில்லை. அடித்தபடி செத்த உடல்போல இழுத்துக் கொண்டுசென்று அறைக்குள் தள்ளி பூட்டினார்கள். நான் கதவையே உற்று பார்த்தேன். அது ஒரு சருமம் போல அதிர்ந்தது.   கதவு திறந்து கான் உள்ளே வந்து என்னருகே வந்தான் ”தண்ணிகுடுக்கச் சொன்னாஹ”என்றான் ரகசியக்க்குரலில் ”இன்னும் வச்சிருக்காஹ போல. கொடுமைக்காரத் தாயோளிஹ” தட்டை வைத்தான். ” பேயாம என்னாமாம் சொல்லணுமானா சொல்லிபோடுங்க பிள்ளைவாள் ”என்றான்.நான் அவனையே உற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3668

கன்னிநிலம் 12

  இரண்டாம் நாள் என்னை இழுத்துச்சென்று துப்பாக்கி காவலுடன் குளிக்கச் செய்தார்கள். ஷேவ் செய்து விட்டனர். ஜட்டியுடன் நடக்கவைத்து அறைக்குள் கொண்டுசென்று என் சீருடைகளை அளித்தனர். அவை பல இடங்களில் கிழிந்திருந்தாலும் சலவைசெய்யப்பட்டிருந்தன.  அவற்றை கையால் தொட்டபோது மிக அன்னியமான எதையோ தொடுவதுபோல உணர்ந்து தயங்கினேன். ”உம்”என்றார் லான்ஸ் நாயக். நான் அவற்றை அணிந்துகொண்டேன். இரண்டு தங்கபப்ட்டைகள் கொண்ட அச்சீருடையை ஒருகாலத்தில் நான் எவ்வளவு விரும்பியிருக்கிறேன். ஆனால் அப்போது அவை இரும்பால் செய்யப்பட்டவை போல என்மீது கனத்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3645

கன்னிநிலம் 11

11 படகில் என்னை ஏற்றி கேபினுக்குள் கொண்டுசென்றதும் ‘ஸிட்!” என்று கூவி ,நான் அமரும் முன்னரே ஓங்கி கன்னத்தில் அரைந்தான் கன்னத்தில் மரு இருந்த அந்த ஹவல்தார் மேஜர். நான் சுதாரிக்கும் முன் அடிவயிற்றில் உதை விழுந்தது. அபப்டியே சரிந்து அமர்ந்தேன். ”நோ! நோ !அவரை ஒன்றும் செய்யாதீர்கள்! ப்ளீஸ்…ப்ளீஸ்…வேண்டாம் !வேண்டாம்!  ” என்று ஜ்வாலாவின் அலறலைக் கேட்டேன். அவளை இழுத்தபடி அடித்தட்டில் எஞ்சின் அறைக்குக் கொண்டுசென்றார்கள். என் இடது கையில் விலங்கு பூட்டை திறந்து படகின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3643

Older posts «