Tag Archive: கனிமொழி

’தீட்டு ’

    கனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை”. இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். ஆழ்ந்த முழுமைத்தேடலால், மெய்மைநோக்கிய பயணத்தால் அவ்விடைகள் கண்டடையப்படுகின்றன. அவ்வாறு கண்டடைபவர்களைத் தொடர்பவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127

இரு பழைய கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கனிமொழி பற்றித் தொடுக்கப்பட்ட வினாவுக்கு, தாங்கள் அளித்த பதில் மனதைத் தொட்டது. எனக்கும் அவரின் அரசியல் சிந்தனைகள் குறித்துக் கோபம் உண்டு. உங்களின் மனச் சமநிலை பற்றிய பார்வையாளரின் கருத்தை ஆமோதித்த கனிமொழியின் மீது அப்போதைக்குத் தீராத சினம் உண்டானது. பதவியில் இருக்கும்போது எதிர்த்து நின்று எதிர்க் கருத்தைச் சொல்வதுதான் விவேகமானது. அவரின் பதவியும் புகழும் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் உண்டாகும் புண்ணை மேலும் சிதைப்பது விவேகமாகாது. உங்கள் பதிலில் நான் நெகிழ்ந்துதான் போனேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21407

கனிமொழி

சென்ற சில நாட்களாக வெவ்வேறு இதழ்களில் இருந்தும் தொலைக்காட்சிகளில் இருந்தும் அழைத்துக் கனிமொழி பற்றிய என் கருத்துக்களைக் கோருகிறார்கள். எழுத வற்புறுத்துகிறார்கள். ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதச் சொல்லிச் சிலர். கனிமொழியின் இலக்கியத் தகுதி என்ன என்று சிலர். கனிமொழி, சிற்றிதழ்களைக் கையிலிட்டு ஆட்டி வைத்தது பற்றி எழுதும்படி சிலர். ’அவங்க அதிகாரத்திலே இருந்தப்பக்கூட நீங்க அசராம அவங்களைப் பற்றிக் கடுமையாக் கருத்து சொன்னீங்க சார்’ என்றார் ஒருவர். …’அதனால நீங்கதான் கருத்துச் சொல்ல தகுதியான ஆள்’ என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16808

கனிமொழி வணக்கம்

பதினைந்துவருடம் முன்பு சுபமங்களா இதழில் கனிமொழி கருணாநிதி என்ற பேரில் ஒரு கவிதை வெளிவந்தபோது நான் கோமல் சாமிநாதனை அழைத்து ஒரே விஷயத்தைக் கேட்டேன். தன் பெயருடன் தந்தை பேரை இணைத்துத்தான் கனிமொழி அக்கவிதையை அனுப்பினாரா என. ஆம் என்றார். அது ஒரு கவிஞர் ஒருபோதும் செய்யக்கூடிய செயலல்ல. தன் மொழியின் படைப்புத்திறனின் திறனால் மட்டுமே கவனிக்கப்பட விரும்புதலே படைப்பாளிகளின் அடிப்படை இயல்பு. பிற அடையாளங்கள் வைத்து அங்கீகாரம் பெற அவர்கள் விரும்ப மாட்டார்கள். எழுத ஆரம்பித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/231