Tag Archive: கனடா

குமரகுருபரனுக்கு விருது

  கனடாவில் இருந்து அளிக்கப்படும் இலக்கியத்தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குமரகுருபரன் எழுதிய மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது என்ற தொகுதிக்காக கவிதைக்கான விருதைப்பெற்றிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/88394/

அஞ்சலி: செல்வ கனகநாயகம்

டொரொண்டோ பல்கலை கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியரான செல்வ கனநாயகம் 23- 11-2014 அன்று மாண்ட்ரியலில் காலமானார். டொரொண்டோவில் இருந்து உஷா மதிவாணன் கூப்பிட்டு செய்தியைச் சொன்னபோது எப்போதும் மரணச்செய்திகள் உருவாக்கும் மரத்த தன்மையையே அடைந்தது மனம். அப்படியா அப்படியா என்று மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன் 2000த்தில் நான் முதல்முறையாக கனடா சென்றபோது செல்வ கனநாயகத்தைச் சந்தித்தேன். அ.முத்துலிங்கத்தின் நண்பராக. டிம் ஹார்ட்டன் காபி நிலையத்தில் நிகழ்ந்த நீண்ட இலக்கியச் சந்திப்புகளில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நடந்த பொதுச்சந்திப்புகளில் பல கேள்விகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66351/

இலக்கியத்தோட்டம் விருதுகள்

கனடிய இலக்கியத் தோட்டத்தின் 2012-ம் ஆண்டுக்கான இலக்கியத் தோட்ட விருதுகள் ஜூன் 15-ம் ஆண்டு, டொராண்டோவில் நடைபெற்றது. விழாவில் நாஞ்சல் நாடனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பிற விருதுகளும் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்கள் விவரங்கள்: புனைவு : கண்மணி குணசேகரன் – அஞ்சலை நாவலுக்காக அபுனைவு-1 : பிரபஞ்சன் – தாழப் பறக்காத பரத்தையர் கொடி நூலுக்காக அபுனைவு-2 : அப்பு – வன்னி யுத்தம் நூலுக்காக மொழிபெயர்ப்பு-1 : எம்.ஏ.சுசீலா – தஸ்தாயெவ்ஸ்கியின் அசடன் நூலுக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37548/

டொரொண்டோ படங்கள்

  சி.என் டவர். ஒரு பிரம்மாண்டமான கான்கிரீட் தூண். மானுட முயற்சியின் சின்னம். மானுட முயற்சி சிலசமயம் வெற்று அகங்காரமாகவும் ஆகலாம்       காசா லோமா கோட்டைவீட்டின் தோட்டத்தில். ஒரு மத்தியகால பாகன் சிற்பம். ஒருவகை யாளி போலும்     குடிநீர் ஏரி. ஒண்டோரியோ ஏரியின் குளிர் நீரில் அதிகபட்சம் இரண்டு நிமிடம் நிற்க முடியும். நரம்புகள் உறையும் வரை…     டல்ஹௌசி என்ற சின்ன கிராமம். நமது டல்ஹௌசி பிரபுவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16864/

இயல்விழா, கிளம்புதல்

இன்று மாலை ஐந்தரை மணிக்கு நேராக இந்தியா திரும்புகிறேன்.. ஒருவழியாக போராடி, அபராதம் செலுத்தி, நேராக இந்தியா செல்லும் பயணச்சீட்டு எடுத்தேன். ஐரோப்பா பயணம் ரத்து செய்யப்பட்டது. 20 அன்று இரவு 12 மணிக்கு சென்னையில் இருப்பேன். ஐரோப்பாவில் வரவேற்கவிருந்த நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இன்னொரு முறை ஐரோப்பா செல்லலாமென திட்டம்.இருநாட்களில் இந்த சிக்கல்களினூடாக பயணமும் செய்துகொண்டிருந்தேன்.. அருண்மொழி ஐமாக்ஸ் அரங்கை பார்த்ததில்லை. அருகே உள்ள ஐமாக்ஸ் திரையரங்கில் முப்பரிமாண படமாக ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ‘ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16854/

எஸ்.பொ

2004 டிசம்பரில் இந்தியாவை சுனாமி தாக்கி பேரழிவை உருவாக்கியது. அப்போது நான் நாகர்கோயிலில் இருந்தேன். தன் பிறந்தநாளை ஒட்டி சுந்தர ராமசாமி அவரது நண்பர்களை பார்க்கவிரும்பியதனால் முந்தைய நாள் அவரது வீட்டில் ஒர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  அவரது வீட்டுக்கு வந்த சில நண்பர்களும் என்னுடன் இருந்தார்கள். நானும் நாஞ்சில்நாடனும் அந்நண்பர்களுமாக சுசீந்திரம் தேர்த்திருவிழா பார்க்க சென்றிருந்தோம். அப்போது ஒருநண்பர் சொன்னார், சென்னையில் மிகப்பெரிய கடல் அலை ஒன்று அடித்திருக்கிறது என்று. இந்தியக்கடற்கரை முழுக்க மேலும் அதேபோன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16853/

பயணச்சிக்கல்கள்

நேற்று மதியம் வரை வீட்டில் இருந்தோம். என் பயணச்சீட்டில் ஒரு சிக்கல். நான் கனடா வருவதை உறுதிப்படுத்தியதும் அப்படியே ஐரோப்பாவுக்கும் செல்லலாமே என்ற எண்ணம் எழுந்தது. பயணச்சீட்டில் அதிக வேறுபாடு இல்லை என்பதே இப்படி பயணத்தை நீட்டிக்கக் காரணம். அதைப் பயணமுகவரிடம் சொன்னேன். என் பயண முகவர் சென்னையைச்சேர்ந்த BTGT SERVICES என்ற நிறுவனம். தியாகராஜன் என்பவர் நடத்துகிறார். அடையாறு இந்திரா நகரில் இருக்கிறது. அவர்கள் மிகுந்த நம்பிக்கையூட்டி எல்லாப்  பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். கனடா விசா கிடைத்ததும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16851/

நயாகரா

நேற்று காலை இங்குள்ள நீல்கிரீஸ் ஓட்டலில் காலைச் சிற்றுண்டிக்காக அ.முத்துலிங்கம் தம்பதிகள் அழைத்திருந்தார்கள். தமிழ் நாட்டு உணவகம். நான் அங்கே பெப்பர் இட்லி என்ற புதிய உணவை சாப்பிட்டேன். பொரித்த இட்லி. நன்றாகவே இருந்தது. அ.முத்துலிங்கம் அவர்களுடன் அவரது வீட்டுக்குச் சென்றோம். தமிழில் பெரும்பாலான எழுத்தாளர்களின் தனியாளுமைக்கும், எழுத்தில் உள்ள ஆளுமைக்கும் தொடர்பிருப்பதில்லை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். அவருடைய பேச்சில் நகைச்சுவையே இருக்காது. ஆனால் எழுத்தில் தெரியும் ஆளுமையே தனியாளுமையாகவும் இருப்பவர்களில் ஒருவர் அ. முத்துலிங்கம். மெல்லிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16844/

ஒண்டேரியோ அருங்காட்சியகம்

நேற்றுக் காலை உஷா மதிவாணன் குடும்பத்துடன் ராயல் ஒண்டேரியோ மியூசியம் சென்றிருந்தோம் . பொதுவாகப் பயணங்களில் நான் மிக விரும்புவதே அருங்காட்சியகங்களைத்தான். இந்திய அருங்காட்சியகங்கள் பலவற்றில் நெடுநேரம் செலவிட்டிருக்கிறேன். பொருட்களின் எண்ணிக்கையை முக்கியமாகக் கொண்டால் ஹைதராபாத் சாலார்ஜங் மியூசியம் மிக பிரம்மாண்டமானது. பிரிட்டிஷ் ராஜ் காலகட்டத்தின் ஒரு காட்சிச் சித்திரத்தை அளிப்பது. கலைப்பொருட்களின் மதிப்பை வைத்து பார்த்தால் டெல்லி நுண்கலை அருங்காட்சியகம் முக்கியமானது. தொல்பொருட்களின் முக்கியத்துவத்தை வைத்துப் பார்த்தால் மதுரா அருங்காட்சியகம் முக்கியமானது. இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16842/

ஆயிரம் தீவுகள்

நேற்றுக் காலை ஒன்பது மணிக்குக் கிளம்பி டொரொண்டோவில் இருந்து மூன்றரை மணிநேரத் தொலைவில் இருக்கும் ஆயிரம் தீவுகள் என்ற இடத்தைப் பார்க்கச்சென்றோம். செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் இருக்கும் ஆற்றிடைக்குறைகளின் தொகுப்பு அது. லட்சத்தீவுகள் போல ஒரு மங்கல வழக்காக அந்தப்பெயர் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே ஆயிரம் தீவுகள் இருக்கலாமென நேரில் பார்த்தபோது தோன்றியது. சில தீவுகளில் ஒரு ஆணும்பெண்ணும் நெருக்கமாக நின்று முத்தமிட்டுக்கொள்ளலாம் என்ற அளவுக்கே இடமிருந்தது. ஒரு மரமும் ஒரு நாற்காலியும் மட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16839/

Older posts «