Tag Archive: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

சுகுமாரனுக்கு இயல் விருது – 2016

  கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2016) திரு. சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுகுமாரன், 1957-ல், தமிழ் நாட்டின் கோவை நகரத்தில் பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்துக்காகப் பயின்றார். தமிழ் வார இதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து தற்போது காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறார். இவர், “கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர் , மொழிபெயர்ப்பாளர், என பன்முகத் திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். சுகுமாரன், இந்த விருதைப் பெறும் 18-வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93398

இயல் விருது விழா

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 13ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76356

இயல் விருது எனக்கு…

2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கனடா பயணம்.ஜூன் மாதம். மனதுக்கு உகந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு. இம்முறை லண்டன் வழியாகச் செல்லலாம் என நினைக்கிறேன். அருண்மொழியுடன். இயல்விருது அமைப்பினருக்கு நன்றி

Permanent link to this article: https://www.jeyamohan.in/68423