Tag Archive: கனகன்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 2 விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை மூன்றுநாட்களாக சந்திக்கவில்லை என்பதே முதன்மையானது” என்றபின் ஒருகணம் தயங்க விதுரர் தலையசைத்தார். கனகன் “நேற்றுமுன்னாள் இரவில் அவரே ஒற்றர்தலைவர் சத்யசேனரை அழைத்து பேசியிருக்கிறார்” என்றார். விதுரர் நின்று “என்ன?” என்றார். கனகன் “என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் நேற்றுகாலை சத்யசேனரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69783

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 68

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 4 கனகன் வேண்டுமென்றே காலடி ஓசை கேட்க வந்து “பேரவைக்குச் செல்ல பிதாமகர் வந்து இறங்கிவிட்டார். இடைநாழி வழியாக இங்கே வருகிறார்” என்றான். “இங்கா?” என்று திகைத்து எழுந்த விதுரர் முகத்தை மேலாடையால் துடைத்துக்கொண்டார். திரும்பி ஒரு சிறிய ஆடியை எடுத்து தன் முகத்தை நோக்கினார். அப்போதுதான் தன் முகம் எப்படி துயரத்தை சுருக்கங்களாக்கி வைத்திருக்கிறது என்று தெரிந்தது. உதடுகளை விரித்து புன்னகையை நடித்தார். மெல்ல முகம் புன்னகை கொண்டதாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67372

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46

பகுதி பத்து : மீள்பிறப்பு – 3 வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது வெண்ணிறமாக தலை தூக்கி நின்றது. மாலையொளியில் அதன் வெண்ணிற குவைமுகடுகள் மின்னிக்கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி நடுவே பறக்க வலப்பக்கம் குந்தியின் சிம்மக் கொடியும் இடப்பக்கம் தருமனின் நந்தமும் உபநந்தமும் பொறிக்கப்பட்ட கொடியும் பறந்தன. குந்தி “இம்மாளிகையின் பெயர் என்ன?” என்றாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66236

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44

பகுதி பத்து : மீள்பிறப்பு – 1 அஸ்தினபுரியில் இருந்து கிளம்பும்போது தருமன் சிடுசிடுத்த முகத்துடன் ரதத்தில் ஏறிக்கொள்வதை அர்ஜுனன் பார்த்தான். குந்தியை அவன் பார்க்கவில்லை. அவள் மிகுந்த சினம் கொண்டிருப்பதாக மாலினி சொன்னாள். நகுலனும் சகதேவனும் குந்தியை சந்திக்கச்சென்றபோது சந்திப்பு அளிக்கப்படவில்லை. அரசி சிறிய உடல்நலக்குறைவு கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. அவர்கள் இருவரையும் அது சோர்வுறச்செய்தது. பயணம்பற்றிய உவகை பீமனிடம் மட்டுமே இருந்தது. “இங்கிருந்து எங்கு சென்றாலும் அது எனக்கு விடுதலையே” என்றான். “இளையவனே, அஸ்தினபுரியில் காற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66230

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34

பகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன?” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா?” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65993

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33

பகுதி ஏழு : பூநாகம் – 3 விதுரர் புஷ்பகோஷ்டத்தை அடைந்ததும் விப்ரர் எழுந்து வந்து “அமைச்சரே, அரசர் தங்களை பலமுறை கேட்டுவிட்டார். சினம்கொண்டிருக்கிறார்” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் விதுரர். “அவரிடம் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என நான் அறியேன். ஆனால் பாண்டவர்கள் தனக்கு அவமதிப்பை அளித்துவிட்டனர் என்று எண்ணுகிறார். அந்த எண்னத்தை விலக்குங்கள்” என்று விப்ரர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பின்பக்கம் விசுத்தன் ஓடிவந்தான். “அமைச்சரே, இளவரசர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். “எங்கே?” என்றார் விதுரர் திகைத்தவராக. “அந்தப்புரத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65974

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32

பகுதி ஏழு : பூநாகம் – 2 விதுரர் தருமனின் அரண்மனைக்கூடத்தில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தார். பீடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கினார். அங்கே தெரிந்த சோலையில் ஒருகணமும் சிந்தை நிலைக்கவில்லை. மீண்டும் வந்து அமர்ந்துகொண்டார். தருமனின் அணுக்கச்சேவகன் விசுத்தன் வாயிலருகே அவரை நோக்கியவண்ணம் தவித்தபடி நின்றிருந்தான். விதுரர் சித்தம் குவியாத கண்களால் அவனை சிலகணங்கள் நோக்கி சொல்லெழாமல் உதடுகளை அசைத்தபின் அவனுடைய அசைவைக்கண்டு விழித்தவர் போல உயிர்கொண்டு “என்னதான் செய்கிறார்கள்?” என்றார். “அன்னையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65956

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86

பகுதி பதினேழு : புதியகாடு [ 5 ] புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில் பனி முழுமையாகவே உருகிச் சென்று மறைந்தது. பின் ஏழுநாட்கள் வானத்தின் சூல்நோவு நீடிக்கும் என்றனர் முனிவர்கள். மழை பெய்யப்போகும் தருணம் நீண்டு இரவும் பகலுமாக மடிந்து மடிந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையிலேயே குகையின் மரப்பட்டைக்கதவுக்கு அப்பால் வெளி வெண்ணிறத்திரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54321

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 85

பகுதி பதினேழு : புதியகாடு [ 4 ] சதசிருங்கம் நெருப்பில் மறைந்தபின்னர் அன்றிரவு முனிவர்கள் மலைச்சரிவில் கூடி அமர்ந்து எங்குசெல்வதென்று விவாதித்தனர். மலையிறங்கி கீழ்க்காடுகளுக்குச் செல்வதே சிறந்தது என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். மூன்று கௌதமர்களும் கீழக்காட்டின் வெப்பம் தவச்செயல்களுக்கு ஒவ்வாதது என்றனர். மாண்டூக்யர் வடமேற்காகச் சென்று சுதுத்ரி மண்ணிறங்கும் இடத்திலுள்ள காடுகளுக்குச் செல்லலாம் என்றார். அவர்களால் முடிவெடுக்க இயலவில்லை. குந்தி “முனிவர்களே, நிமித்தங்கள் வழியாக விண்ணக ஆற்றல்கள் நம்முடன் உரையாடுகின்றன என்று மூதாதையர் சொல்வதுண்டு. இன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54308