குறிச்சொற்கள் கதைத் திருவிழா

குறிச்சொல்: கதைத் திருவிழா

நூறு கதைகள்

அறுபத்தொன்பதுடன் கதைகளை முடித்துக்கொண்டபோது மேலும் கதைகள் மனதில் எஞ்சியிருக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக்கதைகள் மனதைவிட்டுச் சென்றபோது புதிய கதைகள் எழுந்து வந்தன. இது எல்லா கதையாசிரியர்களுக்கும் நான் சொல்வதுதான். எழுதுங்கள், எழுதியவை...

கதைத் திருவிழா-31 வரம் [சிறுகதை]

திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடன் கதைகளில்...

கதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]

பச்சைக்காடு குவிந்து உச்சியில் ஒற்றைப்பாறையை எந்தி நின்றிருக்கும் கரடிமலையின் அடிவாரத்தில், முத்துக்குளிவயல் உச்சிக்காட்டில் இருந்து பெருகிவரும் வள்ளியாற்றின் கரையில் அமைந்த நூற்றெட்டு ஊர்களில் ஒன்றான திருச்செங்கரைக்கு அதிகாலை நேரத்தில் காட்டிலிருந்து ஒரு செய்தி...

கதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]

இரவாவதும் விடிவதும் தெரியாதபடி எப்போதும் இருண்டிருந்த பெரிய வீட்டில், நூற்றாண்டுகள் பழக்கமுள்ள பெரிய மரக்கட்டிலில், புல்பாய் விரித்து அவன் படுத்திருந்தான். நாலைந்துபேர் படுத்து உருளத்தக்க அளவு பெரிய கட்டிலிலேயே அவன் புத்தகங்களை குவித்து...

கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]

இடம் நினைத்ததுபோல அமையவில்லை. ஏகப்பட்ட புரோக்கர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்ததுமே நான் உள்வாங்கிவிட்டேன். என் ஆர்வம் வற்றிவிட்டதை என்னை அழைத்துச்சென்ற முகுந்தராஜ் உணர்ந்தார். என் கண்களை பார்த்தார். நான் “மறுபடி வருவோம்”...

கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

டில்லி திரும்பிவந்தபோது அவன் காலடியோசை கேட்டு நைனா “ஒரேய்” என்று கூப்பிட்டார். “டில்லியாடா, டேய் டில்லியாடா? டேய், டில்லிதானே?” “ஆமா நைனா” என்று அவன் சொன்னான். “கறி வாங்கினு வந்தியாடா?” “இல்ல.” “ஏன்டா?” என்றார். “கறி இல்லாம இங்க...

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

மாலை ஒவ்வொன்றையும் பொன்மஞ்சளென மிளிரச்செய்யும்போது வேங்கை மலர்கள் தழலென்றே ஆகிவிடுகின்றன. வேங்கை தானிருக்கும் காடெல்லாம் நிறையும்தன்மை கொண்டது. மலைச்சரிவை பொன்னால் மூடிவிடுகிறது. பற்றி எரிந்து எழச்செய்கிறது. மகரந்தப்பொடியின் மென்படலத்தால் தரையை மூடிவிடுகிறது. சிறுபுதர்களின்...

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

சிற்றாறு அணையிலிருந்து மருதம்பாறை வழியாக பத்துகாணி போகும் சாலையில் இருந்து பக்கவாட்டில் திரும்பிச்செல்லும் செம்மண் பாதை பெத்தேல் எஸ்டேட், கிருஷ்ணா எஸ்டேட் ஆகியவற்றை தாண்டி மேலேறிச்சென்று திரும்பி ஓர் இரட்டைப்பாறையைச் அடையும் என்றும்...

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதிர்மங்கலம் வீட்டு பெரியநாணு நாயர் ஒட்டன் சுக்ரனுடன் சென்று, திற்பரப்புக்கு அப்பால் களியல் கடந்து பன்றிமலை அடிவாரத்தில் குடில்கட்டி குடியிருந்த காணிக்காரன் துடியன் குறுக்கனிடமிருந்து ஒரு பசுவை வாங்கிவந்தார். அந்தப்பசுதான் ஊரில் பிற்காலத்தில்...

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கன்னங்கரிய பெருமழை பெய்து ஓய்ந்து சற்றே வான்வெளிச்சம் எஞ்சியிருந்த ஒரு காலையில் அப்துல் அசீஸ் என்னைத் தேடி வந்தான். “இக்கா உங்களை கூட்டிவரச்சொன்னார்.” “என்னையா?” என்றேன். “எதற்கு?” நான் அப்போதுதான் எழுந்து காபி போட்டு...