Tag Archive: கதை

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

[பத்தாண்டுகளுக்கு முந்தைய கடிதம் இது. இதை எழுதியவர் இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளர்] ஒரு நண்பரின் கடிதம் …….எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை அறிந்து கொண்டு, மேலே செல்ல ஆசை…. அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கடிதம். *** நீங்கள் நினைப்பது சரிதான். நீங்கள் எழுதலாம் ஏதாவது ஒருதுறையில் சற்றே படைப்பூக்கத்துடன் செயல்படுவதை ‘ஹாபி’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/338

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

‘நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது’– மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. ‘அம்மையை அடித்தாலும் அதிலிமிருக்கும் இரண்டு பக்கம்’ என்று மலையாளப் பழமொழி. அப்படியானால் நியாயம் என்றும் தர்மம் என்றும் ஒன்றுமில்லையா என்ன? உண்டுதான். கலைஞன் எப்போதுமே நீதியின்குரல்தான். நீதி என்பது பலவகை. அன்றாட உலகியல் நீதி ஒன்று நம் கண்ணுக்குப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணில் மனிதரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17235

கதைகள் நிராகரிக்கப்படுவது பற்றி…

ஜெ, தொடர்ந்து உங்களின் ஆக்கங்களைப் படித்து வருகிறேன்… இரவு நாவல் படித்தேன்… அருமையாக இருந்தது… ஆனால் உங்கள் பல இடங்களில் எனக்குப் பிரச்சனையும் உருவானது… இரவு நாவல் பற்றி ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும்… தற்போது அலுவலகத்தில் இருந்து இந்த மெயிலை அனுப்புவதால் இப்போது வேண்டாம்… நான் ஏதோ ஓர் ஆர்வக் கோளாறில் கதைகள் எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டேன்… கீற்று இதழில் முதல் இரண்டு கதைகள் வந்தன.. மூன்றாவது கதை மார்ச் மாதக் கணையாழி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35617

நதிக்கரையில்

எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க, நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர நிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் சமையல் செய்து கொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளிப் பாறை மீது அமர்ந்தவனாக பீமன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். “மகாபலரே, உப்புப் பாருங்கள்” என்று ஒருவன் வந்து மர அகப்பையில் சித்ரான்னத்தை நீட்டினான். பீமன் நாசியை விடைத்து அந்த ஆவியை முகர்ந்தான்.”சரிதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82

ஐந்தாவது மருந்து [சிறுகதை]

எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத் தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான். ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூடப் பார்த்தேன். ‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65

ஜடாயு இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நீங்கள் சொல்வது சரிதான். நம் மரபில், பண்பாட்டில் உள்ள பிரச்சினை அது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், வரலாற்றெழுத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், தூண்டுதலையும், சுவாரஸ்யத்தையும் முதலில் மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டுமே. இப்போதுள்ள பாடத்திட்டம் அதைச் செய்வதில் கடும் தோல்வியையே அடைகிறது. மிக மோசமாக எழுதப்பட்ட சலிப்பூட்டும் வரலாற்றுப் பாடங்கள் மாணவர்கள் வரலாற்றைக் கண்டு அஞ்சி ஓடவைக்கின்றன. அந்த ஆர்வத்தை உருவாக்கும் முகமாகவாவது அமர் சித்திரக் கதைகளைப் பாடத்திட்டத்தில் கட்டாயம் பயன்படுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25037

வரலாறும் கதையும்

அன்புள்ள ஜெ, ‘கூடவே இன்னொன்றும் தோன்றியது. ஏன் குமாரபாலரை நாம் அறிந்ததே இல்லை? ராஜராஜ சோழனை ஏன் குஜராத்திகள் அறியவே இல்லை? ஹானிபாலை, நெப்போலியனை அறிந்திருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான பிழைகளில் ஒன்று, எந்த வித வழிகாட்டுநெறிகளும் இல்லாமல் பாடத்திட்டங்களைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டமை. குறுகிய பிராந்தியவாதமும் இனவாதமும் அரசியல் நோக்குடன் நம் குழந்தைகள் மனங்களில் திணிக்கப்பட வழிவகுத்தது அது.’   http://www.jeyamohan.in/?p=24655 மிகச் சரியான அவதானிப்பு. அமர் சித்திரக் கதைகள் இதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24999

யானைடாக்டர்-படங்கள்

யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் அழகிய புகைப்படங்கள் இரண்டு கிடைத்தன. யானைடாக்டர் என்ற பேரில் இந்தக்கதை மட்டும் சிறிய நூலாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இலவசமாக இது தகுதியான வாசகர்களுக்கு வழங்கப்படும். புத்தகம் அச்சாகும் முன் கிடைத்திருந்தால் இந்தப்படங்களை அதில் சேர்த்திருக்கலாம் மேலும் சில நண்பர்கள் இந்த கதையை தங்கள் அமைப்புகளுக்காகச் சிறு நூலாக வெளியிடலாமா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். அதைச் சேர்ந்து செய்வது நல்லது யானைடாக்டர் கெ அவர்களைப்பற்றி பிபிசி எடுத்த ஆவணப்படம் எவரிடமாவது இருந்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17056

விவேக் ஷன்பேக் சிறுகதை 3

கோழியைக்கேட்டா மசாலா அரைப்பது?   விமானநிலையத்தில் என்னை சந்திப்பவர்கள் இது ரொம்பச்சின்ன உலகம் என்று சொல்லும்போது அது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை. அது பேச ஆரம்பிப்பதற்கான ஒரு சின்ன முகாந்திரம் தானே? நம் மச்சினிச்சியின் கணவரின் தம்பி நம் பழைய வகுப்புத்தோழி ஹரினியைக் கல்யாணம்செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியும்போது நம்முடைய வாயில் இருந்து இந்தமாதிரித்தான் ஏதாவது கிளம்பும். ஆனால் நான் என் பழைய வகுப்புத்தோழன் கோழியைப்பற்றி போகிறபோக்கில் ஏதோ சொல்ல அது அவனிடமே சென்று சேர்ந்தபோதுதான் நான் உண்மையிலேயே இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5752

விவேக் ஷன்பேக் சிறுகதை- 2

அடுத்தவர் குடும்பம் பம்புகள் விற்று அலையும் எனது விற்பனைப்பிரதிநிதி வாழ்க்கையில் பல பயணங்களில் பிகெ என்ற பிரமோத் குமார்  என்னுடன் சேர்ந்துகொள்வதுண்டு. எங்கள் கம்பெனியின் வட்டார கண்காணிப்பாளர் என்ற முறையில் என்னுடன் அவன் சுற்றிவருவான். என்னுடைய மாதாந்திர முன்னேற்றத்தை அவன்தான் கண்காணித்து மதிப்பிடவேண்டும். நாள் முழுக்க கஞ்சத்தனமான முகவர்களிடம் மோட்டார்கள் வால்வுகள் குதிரைச்சக்தி என்று பேசிப்பேசி சாயங்காலத்திற்குள் ஒருமாதிரி சலித்து அலுத்துப் போய்விடுவோம். பிகே இருந்தானென்றால் நாங்கள் சேர்ந்து சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரே வயதுதான் எங்களுக்கு. பலவருடங்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5659

Older posts «