Tag Archive: கண்மணி குணசேகரன்

ஃபேஸ்புக் இரு லைக்குகள்

ஜெ இந்த விளம்பரத்தை ஃபேஸ்புக்கிலே பார்த்தேன் Panuval – Online Tamil BookStore Price: Rs.500.00 Brand: கண்மணி குணசேகரன் வந்தாரங்குடி”, படையாச்சிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் தேவை பற்றிப் பேசுகிற நாவல். இந்த புத்தகம் தேவைப்பட்டால் +91-8939967179 ,044-43100442என்ற எண்ணுக்கு அழைக்கவும் . ( VPP மற்றும் Door Delivery வசதி உண்டு )   சும்மா ஒரு தகவலுக்காக சரவணன் அன்புள்ள சரவணன், படையாச்சிகள் அதிகம் புத்தகங்களெல்லாம் படிப்பதில்லை. பதிப்பகங்களிடம் விசாரித்தால் தெரியும். ஆகவேதான் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57204

கண்மணி குணசேகரன்

கண்மணி குணசேகரன் கடலூர் வட்டாரத்து  செம்புலத்து அடித்தள மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சொல்லும் கலைஞன். நேரடியான யதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட அவரது ஆக்கங்கள் நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகள் என்றே சொல்ல முடியும்.   அஞ்சலை, கோரை என்ற இரு நாவல்களும் பேசபப்ட்டவை.  உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத்தொகுதி.  கண்மணி குணசேகரனின் இரு நூல்கள் தமிழினி வெளியீடாக வந்துள்ளன. பூரணி பொற்கலை கண்மணிகுணசேகரன் எழுதிய கதைகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6172

நிழல் நாடுவதில்லை நெடுமரம்

 தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழாவைப்பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது. அன்பழகன் எழுதியது. கண்மணி குணசேகரனின் இரு நூல்களை தமிழினி வெளியிட்டிருக்கிறது. ‘நடுநாட்டுச் சொல்லகராதி’[வட்டார வழக்கு] என்ற நூலும் ‘காலடியில் குவியும் நிழல்வேளை’ என்ற முழுக்கவிதை தொகுதியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றின் வெளியீட்டை பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிகழ்த்தியது. 28-6-08 அன்று. பாட்டாளி மக்கல் கட்சி தலைவர் மருத்துவர்.ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டார். பழமலை தலைமைவகித்தார். சமீபத்தில் இலக்கியச் சூழலில் எவரும் வெளியே சொல்லாமல் ஆனால் உள்ளூர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/554

அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’

என்னுடைய ‘கண்ணீரைப் பின் தொடர்தல் ‘ என்னும் நூலில் இந்திய நாவல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெண்களின் கடலளவு துயரையும் மலையளவு தியாகத்தையும் வெளிப்படுத்துபவையாக அவை இருப்பதை கவனித்து எழுதியிருந்தேன். இந்தியப் பெருங்காவியங்களிலிருந்தே இம்மரபு இங்கே இருக்கிறது. சீதை, கண்ணகி என… நாட்டார் காவியங்களில்கூட காவியநாயகியர் பேரூவத்துடன் எழுந்துவருகிறார்கள், உதாரணமாக என் மனதில் வருவது மலையாளக் காவியமான’ மதிலேரிக்கன்னி ‘பின்னர், இந்தியா நவீன இலக்கியம் உருவாகி வந்தபோது மீண்டும் மீண்டும் பெண்களின் கதைகளே எழுதப்பட்டன. முதல் நாவலெனக் கருதப்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16