Tag Archive: கண்ணீரைப் பின் தொடர்தல்

கண்ணீரைப் பின்தொடர்தல்

இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மறைந்து போய் வாசகர் ஜெயமோகனே எங்கும் காட்சி தருகிறார். அப்படியும் சொல்வதற்கில்லை. எவ்வளவு பண்பட்ட வாசகராக ஒருவர் இருந்தாலும் அந்த வாசிப்பு அனுபவத்தை இவ்வளவு சிறப்பாக எழுத்தில் கொண்டு வருவது ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே முடியும். இந்தப் புத்தகம் ஒரு பண்பட்ட வாசகரின் அனுபவங்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பேனா வாயிலாக. Deadly combination என்று ஆங்கிலத்தில் சொல்வது போல. கோபி ராமமூர்த்தி பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/27690

இரு இளைஞர் கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வயது 24. இங்கே சாப்பிடுவதற்கு விடுதி மெஸ். மெஸ்ஸில் சில பணியாளர்கள் என் ஒத்த வயதுடையவர்கள், அல்லது சற்றுச் சிறியவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல).இதனால் என்னால் சிலசமயம், சாப்பிடவே முடிவதில்லை. அவர்களைக் கண்டுவருத்தப்பட்டுக்கொண்டிருப்பேன். ஆனால் தாழ்வாகக் கருதியதில்லை. ஏனோகுறுகுறுவென்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல், முதியபணியாளர்களைக் கண்டாலும் மனம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.இதற்கு முன்னால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன்.அலுவகத்துக்குள் நுழையும் முன்னர், பைகளைச் சோதனை செய்ய இரண்டுபேர்நின்றுகொண்டிருப்பார்கள். சிலசமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21381

வாசகர் அனுபவம்,கண்ணீரைப் பின் தொடர்தல்

இக்கட்டுரைத்தொகுப்பில், ஜெயமோகன், தனக்குப் பிடித்த, பிற மொழி கதைகளைப் பற்றி, மனம் கவரும் வகையில் எழுதி உள்ளார். பெரும்பாலான கதைகள், வங்க, கன்னட, மலையாளத்தைச் சார்ந்தவை. பிரதிநிதித்துவம் குறித்து, சில தெலுங்கு, மராத்தி, பஞ்சாபிக் கதைகளைச் சேர்த்துக் கொண்டதாக முன்னுரையில் கூறுகிறார். ஜெயமோகன், தனக்கு பிடித்த கதைகளைப் பற்றி மட்டும் எழுதுவதாக முன்னுரையிலேயே தெளிவாக கூறிவிடுவதால், ‘ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்தார்?, ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்யவில்லை?’, என்ற சர்ச்சைக்கு இடமில்லை. http://baski-reviews.blogspot.com/2010/03/blog-post_8409.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/7261

கண்ணீரைப் பின் தொடர்தல்:கடிதம்

      அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..                                                                                  உங்கள் நலம் அறிய விருப்பம் சார் ; இன்று உங்கள் கண்ணீரை  பின் தொடர்தல் என்ற மொழிபெயர்ப்பு நாவல் குறித்த அருமையான தொகுப்பை வாசிதேன். மிக உன்னதமான பணி சார் இது. இதில் குறிபிட்டுள்ள எந்த நாவல்களையும் நான் வாசித்தது, ஏன் கேள்வி கூட பட்டது கிடையாது. வாசிப்பின் தளங்களை ,நுட்பமான  வாசிப்பு மன நிலையை  வாசகனுக்கு  விரிந்த படியே காட்டி  போகிறது புத்தகம் .ஒவ்வொரு நாவலின்  கதை  விவரிப்பும் அதன் ஊடாக, இறுதியில் உங்கள் எதிர்வினையும் hats off சார்.இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3092