Tag Archive: கண்ணாடிக்கு அப்பால்

குமரி உலா – 6

காலையில் கார் வந்து சேர்ந்தது. குளித்துவிட்டுக் கிளம்ப சற்றுதாமதமாகிவிட்டது. அரட்டை இடைவிடாது நடந்துகொண்டிருக்கும்போது செயல்கள் ஓடுவது இல்லை. முதல் பயணம் இரணியல் அரண்மனைக்கு. அதைப்பற்றி நெய்யூர் டவுனில் விசாரித்தாலும் யாருக்கும் தெரியாது. பயணிகள் பொதுவாக அங்கே போவது இல்லை. அங்கே பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றும் இல்லைதான். பெருமாள் பலமுறை சென்றிருக்கிறார். ஆகவே குழப்பம் இல்லாமல் செல்ல முடிந்தது. இரணியல் அரண்மனையைப்பற்றி பொதுவாக தெளிவான சித்திரங்கள் இல்லை. இது நூறு வருடம் முன்பே கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்திரம் கிடைப்பதுவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37947

கண்ணாடிக்கு அப்பால் – சிறுகதை

பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணுக்குப் புராதன மரச்சிற்பம் ஒன்றைக் காய்கறிவிலைக்கு வாங்கிப் பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில் . இன்று நான் நகரில் மிக முக்கியமான கலைப்பொருள் தொடர்பாளன். இப்போது பலர் சுதாரித்துக் கொண்டார்கள் , ஆனாலும் எந்தப் பொருள் கலைச்சந்தையில் மதிப்புமிக்கது எனக் கண்டறிய இத்துறையில் அனுபவம் தேவை . அதைவிட ஒன்றை கவனத்தை கவரச்செய்து முக்கியமானதாக ஆக்குவதற்குக் கற்பனையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22520