Tag Archive: கண்ணன்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 8

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 2 சிறு ஊற்று விழிகொண்டு சுரந்து நிறைவதுபோல் ஒவ்வொரு நாளும் எனத் திரண்டு அவளில் உருவானவை. அவளை அவளென ஒவ்வொரு கணமும் நினைவுறுத்துபவை. தனிமையிலோ நீராழத்திலோ கூட அவளே தொட்டுநோக்க தயங்கினாள். அவற்றுக்கென ஓர் நிலையும் உணர்வும் உண்டு என்பவை போல அவை அசைந்தன, குழைந்தன, தனித்து விழிபுதைந்தன, எழுந்து துடித்தன. என்றோ ஒருமுறை அவற்றைத் தீண்டுகையில் அவள் உடல் உவகையுடன் நடுங்கியது. எலும்புகளே இல்லாமல் ஓர் உறுப்பு. மென்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75766/

வரலாறுகளின் அடுக்குகள்

அன்புடன் ஜெயமோகனுக்கு; வணக்கம். எனக்கு வெண்முரசில் இடம்பெறக்கூடிய சமஸ்கிருத வார்த்தைகள் தொடர்பிலான உங்கள் விளக்கத்தைப் படிக்கையில் எனக்கு ஒரு யோசனை உண்டானது. நீங்கள் வெண்முரசு எழுதும் சமகாலத்தில் மலையாளத்திலும் ஏன் அதை எழுதப்படாது. யாம் பெற்ற இன்பம் கேரளமும் பெறட்டுமே? மகாபாரதத்தை அறிந்த சிறுவயதிலிருந்தே எனக்குள் தீர்க்கப்படாதிருக்கும் 3 சந்தேகங்கள். திரௌபதிக்கு நீள் துயிலை வழங்கியதிலிருந்தே கண்ணன் சாமானியன் அல்ல, அவன் அதிமானிடன், அமானுஷ்யன், பராத்மன் என்பது உலகத்தோருக்கு தெரியவந்திருக்கும். அதன்பின்னும் அவன் சாதா மனிதர்களுடன் சேர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74443/

குருதியின் ஞானம்

ஜெ, கிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ ‘பால்வடியும் முகம் நினைந்து’ இரண்டுபாட்டுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால் நீலம் ஆரம்பம் முதலே கிருஷ்ணனை க்ரூரத்துடனும் ஸம்பந்தப்படுத்திக்காட்டிக்கொண்டே இருந்தது. அது எனக்கு ஒவ்வாமல் இருந்தது. உண்மையில் நீங்கள் பாகவதத்தில் இருந்துதான் அதை எடுத்திருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62870/

உடலின் முழுமை

அன்புள்ள ஜெ சார், நீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்ணனை எழுதும்போதுகூட நீங்கள் அவனை பெரியவராக, வினைமுடித்து வானம் போகப்போகக்கூடியவராக நினைத்திருந்தீர்கள் என்பதே வியப்புதான். என் மனசிலே இருந்து சின்னக்கண்ணன் தவறவே இல்லை.ஒரு குழந்தையைப்பற்றி எல்லாவற்றையுமே சொல்லிவிட்டீர்கள் அது சின்னப்பிள்ளையாக இருந்தபோது நீங்கள் எழுதியவரிகளை திரும்பப்போய் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அதிகம் அம் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62846/

அழியா இளமை

“எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்து சென்றார்.” அவர் வேய்குழல் கேட்கக் குழப்பம் அடைகிறார்கள் அமைச்சர் முதலானவர்கள். அனங்கமஞ்சரி மட்டுமே அவருடைய பால்யம் அறிந்திருக்கிறாள். அவள் அந்த ஆடலின் ஒரு silent witness. . கீதை உரைத்து, போர் முடித்து, மணி முடி தந்து திரும்பி வருகிற பெரும் அரசர் அவர். அந்த நீண்ட வாழ்க்கையில் எத்தனை கண்டிருப்பார், எவ்வளவு சலிப்பு இருந்திருக்கும். முதிர்ந்து தளர்ந்து குழலூதும் அவர் அழைப்பது ராதையை மட்டுமே. அவளைக் கண்டடைந்து கண்ணனாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62765/

நீலம் -வரைபடம்

ஜெ, நீலம் நாவலை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. அதன் அமைப்பு கதையோட்டமாக இல்லாமல் மாறிமாறிச் செல்வதனால் எனக்கு கடினமாக இருக்கிறது. என்னைச் சுழற்றி அடிக்கிற மொழி காரணமாக என்னால் அதை விட்டு விலகவும் முடியவில்லை. அதை வாசிப்பதற்கு ஏதேனும் வழிகாட்டிக் குறிப்பு எழுதமுடியுமா? செல்வன் அன்புள்ள செல்வன் நீலம் நாவலுக்கு நான் எழுதிய பின்னட்டைக் குறிப்பு இது   நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62705/

பித்தின் விடுதலை

ஜெ சார் நீலம் வாசித்து வாசித்து நானே ஒரு வகையான தனிமைக்குள் போய்விட்டேன். எனக்கு தனிமையோ அல்லது அதேமாதிரியான உணர்ச்சிகளோ சாதாரணமாக கிடையாது. நான் உற்சாகமானவள். ஆனால் மனத்துக்குள் ஒரு பெரிய தனிமை இருந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை நீலம் வாசித்தபோது அடைந்தேன். அது என்னது என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன். பெண்ணாகப்பிறந்துவிட்டதனாலேயே ஒரு வகையான அடைபட்ட நிலைமை வந்துவிடுகிறது. கன்னுக்குட்டியை கட்டிப்போட்டிருப்பதுமாதிரி. எங்கோ ஒரு இடத்திலே நம்மால் மேலே போகமுடியாது என்று தோன்றும். நான் சமூகக் கட்டுப்பாடுகளை மட்டும் சொல்லவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62780/

தேன்கடல்

இனிய ஜெயம். நீலத்தின் இறுதி அத்யாயம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே ராதை இத்தனை வருடம் கல்லாய் உறைந்திருந்தாளா? மரண நொடியை முன்னுரைத்தவனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன். மீண்டும் கண்ணன் கை வந்து சேர்ந்தது, ராதை வசமே கண்ணன் விட்டு சென்ற குழல். இசைக்காத குழல். வைத்திருந்து காத்திருந்து கல்லென உறைந்த ராதை. கண்ணனற்ற ராதை. குழலை கண்ணன் வசம் சேர்க்கும் குட்டி ராதை. அவள் அக் குழல் வழி கேட்கும் முதல் இசையிலேயே முக்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62735/

கண்ணனும் ராதையும்

அன்புள்ள ஜெ, நீலத்தின் முழுமை தரும் அத்தியாயம், கொடி, மனதில் ஏற்படுத்திய உணர்வுகள் வெகு அந்தரங்கமானவை. இதில் மாமன்னர் கிருஷ்ணரைப் பார்க்கிறோம். மகாபாரத யுத்தம் முடிவடைந்து விட்டது. தன் முடிவுணர்ந்த ஞானியாகவே கிருஷ்ணர் வருகிறார். அவரின் கண்ணசைவிலேயே கருத்தறிகிறார் பேரமைச்சர். ஆனால் அவருக்கும் தெரிவதில்லை கிருஷ்ணரின் இளமை. அங்கே யாருக்குமே தெிரவதில்லை, அனங்க மஞ்சரியைத் தவிர. 90 வருடங்களுக்கு முன்னர் ராதை பிறந்த தினம் என்கிறார்கள். அவள் கன்னியாகவே வாழ்ந்து காதலருக்கு அருள்கிறாள் என்கின்றனர். தங்கள் குலதெய்வம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62627/

அழியாதது

ஜெ ராதையை கண்ணன் சென்று சந்திப்பதிலேதான் முடியும் என்று நினைத்திருந்தேன். அதாவது ராதையும் கோபிகைகளும் கண்ணனை வழியனுப்பும்போது கதறி அழும் இடத்தை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். அதை பலபேர் பாடியிருக்கிறார்கள். ஓவியம் கூட பல கோணங்களில் வரையப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இடம் மிகவும் புதியது. இப்படி எதிர்பார்க்கவே இல்லை. கிரியேட்டிவிட்டி என்பது நாவல்ட்டியெதான் என்று புரியாமல் எத்தனை வாசித்தாலும் பயனில்லை கண்ணன் வயதாகி இருக்கிறான். பாரதப்போர் முடிந்துவிட்ட்து. 80 வயதில் கிருஷ்ணன் 82 வயதில் சித்தியடைந்ததாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62611/

Older posts «