Tag Archive: கண்ணதாசன்

கண்ணதாசன்

அன்புள்ள ஜெ, நலம். நலந்தானா? கவிஞர் கண்ணதாசன் குறித்த உங்கள் பார்வையை அறிய ஆவலாக உள்ளேன். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, பேச்சாளராக, தத்துவ மாணவராக, அரசியல்வாதியாக அவரை எப்படி பார்க்கிறீர்கள் என்று. அவரது பாடல் வரிகள் ஓரிரு தலைமுறைகளையே கட்டிப்போட்ட, அமைதி தந்த , ஆறுதலளித்த, ஆவேசம்கொள்ளச்செய்த ஒரு இயல்பாகவே இருந்திருப்பதாக நினைக்கிறேன். மேலும் அவரது தமிழ் மொழியின் மீதான ஆளுமை என்னைப்போன்றவர்களை மிகவும் வியக்க வைக்கிறது. அவரை சந்தர்பங்களின் அரசன் என்று சொல்லலாமா?. ராம். அன்புள்ள ராம், கவிஞர்களைப்பற்றிய எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5330

தமிழ் எழுத்துருவும் கண்ணதாசனும்

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=REvikRsEqws ஜெ இந்த வீடியோவில் கண்ணதாசன் தமிழை ஆங்கில லிபியில் எழுதுவதைப்பற்றி நக்கலடிக்கிறார். அந்தக்காலத்திலேயே இந்த சர்ச்சை இருந்திருக்கிறது போல அருண் அன்புள்ள அருண், இந்தியமொழிகளை ஆங்கில லிபியில் [ரோமன் லிபி அல்ல. ரோமன்லிபியின் ஒரு வடிவம் ஆங்கில லிபி. ஆங்கிலத்தில் இல்லாத பல குறியடையாளங்கள் கொண்டது ரோமன் லிபி. ] எழுதுவதைப்பற்றிய பேச்சு 1915 முதல் இருந்துவந்துள்ளது. ஏராளமான முன்னோடிச் சிந்தனையாளர்கள் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதைப்பற்றி பின்பு. நம்பூதிரி ஜோக். நம்பூதிரி ஆங்கிலம் படிக்கச்சென்று திரும்பிவிட்டார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41799

செட்டி நாட்டு மருமகள் மான்மியம்

மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன? அவகெடக்கா சூப்பனகை அவமொகத்தே யாருபாத்தா அவுகமொகம் பாத்து அடியெடுத்து வச்சேன்நான் பத்து வராகன் பணங்கொடுத்தா எங்களய்யா எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக? ராமாயணத்திலயும் ராமனுக்கு சீதைவந்தா சீதனமா இவ்வளவு சேத்துவச்சா கொண்டுவந்தா? கப்பலிலே ஏத்திவச்சா கப்பல் முழுகிவிடும் அவ்வளவு சாமான் அரிசி பருப்புவரை மாவு திரிச்சுவச்சு மலைமலையா அடுக்கிவச்சு ஊறுகாய் அத்தனையும் ஒண்ணுவிடாமவச்சு நாக்காலி முக்காலி நாலுவண்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8514

செட்டி நாட்டு மாமியார் மான்மியம்

கண்ணதாசன் கவிதைகளில் என்னைக்கவர்ந்த கவிதைகளில் ஒன்று இது. இத்தகைய மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இவற்றில் உள்ள சரளமான மொழியோட்டமே முதன்மையான சுவை. இந்தக்கவிதையில் மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது. கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு கவிஞர் இதை எழுதியிருக்கிறார் நல்லாத்தான் சொன்னாரு நாராயணச் செட்டி! பொல்லாத பெண்ணாக பொறுக்கி வந்து வச்சாரு வல்லூறைக் கொண்டு வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8512

கண்ணதாசன், இசைப்பாடல்:கடிதங்கள்

கண்ணதாசனைப்பற்றிய உங்கள் பதிவில் சொன்ன விஷயங்களைப்பற்றி நான் தொடர்ச்சியாக சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு இசைபபடலில் நம்மால் உயர்ந்த கருத்துக்களை எந்த அளவுக்குச் சொல்ல முடியும்? இன்றைய கவிதை என்பது அதிகமும் அறிவார்ந்ததாக உள்ளது. அதை இன்றைய சினிமாப்பாடல் எந்த அளவுக்குக் கொண்டுவரமுடியும்? பீட்டில்ஸின் பாடல்வரிகள்தான் பொதுவாக உலக அளவில் மிகச்சிறந்த இசைப்பாடல்கள் என்று சொல்லப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் மிகவும் உணர்ச்சிகரமானவையாக உள்ளன. அவை ஒருவகை பிதற்றல்கள் என்று தோன்றுகின்றன. அந்தமாதிரி இருக்கும்போதுதானே நல்ல இசைபபடல் உருவாகிறது. ஆகவே அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5554

கண்ணதாசன், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,    கண்ணதாசன் கவிதைகள்  பற்றிய உங்கள் சிறு ஆய்வு படித்தேன். ஒவ்வொன்றையும் நீங்கள் சொல்லும் போது ஆமாம் போடக் கூடியவாறு மிக அழகாக தர்க்கரீதியாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கட்டுரையின் மொழி நடையும் கருத்துச் செறிவும் வாசகர்களை உங்களின் எழுத்துடன் கட்டிப் போட்டுவிடும் திறன் வாய்ந்தவை, நல்லதொரு வாசிப்பு அனுபவம் தந்தததற்கு மிக்க நன்றி   அன்புடன் ஸ்ரீரஞ்சனி     அன்புள்ள ஸ்ரீரஞ்சனி   நன்றி. கண்ணதாசனை வேறு எதற்காகவும் அல்லாமல் அவரது மொழியாட்சிக்காகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5469

கேள்வி பதில் – 69

கண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார்? பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா? பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா? நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன்? என்றாலும் இப்பொழுதும் திரைப்பாடல்களில் பாரதியின் பாடல்கள் எந்த இசையமைப்பாளருக்கும் பொருத்தமாகத்தானே அமர்கின்றன? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் பாரதியை திரைப்பாடலாசிரியனாக வைரமுத்துவிடம் ஒப்பிடவில்லை, இசைப்பாடலாசிரியனாகத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123