Tag Archive: கணையாழி

சிற்றிதழ் என்பது…

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும். இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக உள்ள அரசியல் செயல்பாடுகளின் பகுதியாக ஒலிக்கும் கூக்குரல் உற்பத்தி மட்டுமே. அவற்றுக்கு அப்பால் உள்ள இலக்கியம் சிந்தனை ஏதும் அவர்களுக்கு தெரிந்ததாகவே இருக்காது. விதிவிலக்காக, மலேசியாவில் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு தொடக்கம் நிகழ்கிறது என்பதை பலவகையாகப் பதிவு செய்திருக்கிறேன். நவீன், யுவராஜ்,பாலமுருகன் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79870

அஞ்சலி,கி.கஸ்தூரி ரங்கன்

கணையாழி சிற்றிதழை நிறுவி நடத்தி வந்த கி.கஸ்தூரி ரங்கன் இன்று காலை ஆறு மணி அளவில் காலமானார். 1933 ல் பிறந்தவர். புதுடில்லியில் 1961 முதல் இருபதாண்டுக் காலம் நியூயார்க் டைம்ஸின் நிருபராகப் பணியாற்றினார். சிறிது காலம் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். அவருக்கு என் அஞ்சலி. டில்லியில் அறுபதுகளில் கஸ்தூரி ரங்கனை மையமாகக் கொண்டு ஒரு அறிவுஜீவிக் குழு உருவானது. க.நா.சுப்ரமணியம், ஆதவன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்கள். இவர்களின் முயற்சியால் சென்னையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16740