Tag Archive: கணாதர்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 15

[ 4 ] துவைதக்காட்டின் நடுவே நின்றிருந்த பிரதீகம் என்னும் அரசமரத்தடியில் போடப்பட்டிருந்த கற்பலகைப் பீடத்தில் கணாதர் அமர்ந்திருக்க அவருக்கு முன் தருமனும் தம்பியரும் திரௌபதியும் நிலத்தில் இட்ட கற்பாளங்களில் கால்மடித்து அமர்ந்திருந்தனர். கணாதரின் முதன்மை மாணவர் பன்னிருவர் அவர்களுக்கு அப்பால் அரைவட்டமாக அமர்ந்திருந்தனர். பின்காலையின் இளங்காற்றில் அரசமரத்தின் தொங்கிய இலைகள் பல்லாயிரம் இமைப்புகளுடன் அசைந்துகொண்டிருந்தன. பொன்னிறமான பழுத்திலைகள் மிதந்து சுழன்று இறங்கி மண்ணில் அமைந்தன. காலைச்சொல்லாடலில் தருமன் கணாதரிடம் “மெய்யறிந்தவரே, வேதச்சொல் ஒன்றே என்றால், அது மானுடனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89477

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13

மூன்றாம்காடு : துவைதம்  [ 1 ] காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல் காவல்காக்க வழிநடைக் களைப்பால் அவர்கள் ஆழ்ந்து உறங்கினர். அத்துயிலில் தருமன் அம்பு பட்டு அலறும் தனித்த மான் ஒன்றை கனவு கண்டார். பீமன் பிடிகளுடன் முயங்கி நின்றிருக்கும் மதகளிற்றை. அர்ஜுனன் வானில் பறக்கும் வெண்நாரையை. திரௌபதி குகைக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89414

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18

பகுதி நான்கு : அனல்விதை – 2 சத்ராவதியில் இரண்டுநாட்கள் இளைப்பாறிவிட்டு பத்ரரும் துருபதனும் ரிஷ்யசிருங்கம் கிளம்பினர். அதற்கான அனைத்து ஒருக்கங்களையும் உத்தரபாஞ்சாலத்தவரே செய்தார்கள். இருநாட்களும் அஸ்வத்தாமன் மந்திரசாலைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாக பத்ரரின் சேவகன் சொன்னான். பத்ரர் நாள்முழுக்க அஸ்வத்தாமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவன் கிளம்பிச்செல்லும்போதிருந்த அந்த முகத்தை அவரால் தன் எண்ணங்களிலிருந்து விலக்கவே முடியவில்லை. கிளம்பிய அன்று இருள் விலகிய காலையில் அவர்கள் தங்கியிருந்த அரண்மனையின் முற்றத்தில் குதிரைகளும் கழுதைகளும் ஒருங்கிக்கொண்டிருந்தபோது அஸ்வத்தாமனும் அமைச்சர்களும் வழியனுப்பும்பொருட்டு வந்திருந்தனர். மங்கலமுரசின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64746