Tag Archive: கடோத்கஜன்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29

சுதசோமன் தன் புரவியில் அமர்ந்து ஆணைகள் இடுவதற்குள்ளாகவே புரவி கிளம்பிச்சென்றது. அவன் எண்ணத்தை உடலசைவிலிருந்தே அது உணர்ந்தது. சீர்நடையில் பாதையின் பலகை வழியாக சென்றான். குளிரலைகள் பரவியிருந்த முற்காலையில் பாண்டவப் படை போருக்கு ஒருங்கிக்கொண்டிருந்தது. மேலே விடிவெள்ளி விழுந்துவிடும் என நின்றிருந்தது. விளக்குகளின் நிழல்கள் ஆடின. வீரர்கள் கவசங்கள் அணிந்துகொண்டும், படைக்கலங்களை தேர்ந்துகொண்டும், உணவருந்திக்கொண்டும் இருந்தனர். போர் என்னும் கிளர்ச்சி அமைந்து அது நாள்கடன் என ஆகிவிட்டதுபோல மிக மெல்லவே ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ‘தோற்றுக்கொண்டிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113770/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24

கௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக… விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க… அங்கே அனைவரும் வேல்முனை என குவிக!” என சகுனியின் முரசு பின்பக்கம் ஆணையிட்டது. லட்சுமணன் தன் தம்பியருக்கு கையசைவால் ஆணையிட்டுக்கொண்டு பாண்டவப் படைகளை தாக்கினான். தித்திரகுலத்து இளவரசர்களான சங்கபிண்டனையும் கர்க்கரனையும் அகர்க்கரனையும் வீழ்த்தினான். அவர்களின் தந்தை பகுமூலகன் அதை கண்டு உரக்கக் கூவியபடி வில்லுடன் வந்தான். அவனை துருமசேனன் கொன்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113558/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19

முற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113234/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18

உணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அவ்வாறுதான் சொல்லப்பட்டது. ஆனால் எங்கே துயில்வது?” என்றான். “இங்குதான். கூடாரங்களுக்குள் துயிலலாம். அல்லது வெளியே நிலத்தில் பாய்விரித்து…” என்றான் அசங்கன். “நாங்கள் தரையில் துயில்வதில்லை” என்றான் கடோத்கஜன். “இங்கே மரங்கள் இல்லையே?” என்றான் அசங்கன். “குருக்ஷேத்ரத்தில் மரங்கள் முளைப்பது அரிது… ஆகவேதான் இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113220/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17

விண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது யார்?” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா?” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113207/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16

அசங்கன் மூச்சுவாங்க விரைந்தோடிச் சென்று அரக்கர்நிரைமுன் வந்தவன் அருகே சிற்றுருவாக நின்று தலைவணங்கி “வணங்குகிறேன் மூத்தவரே, தாங்கள் இடும்பவனத்தின் அரசர் கடோத்கஜர் என்று எண்ணுகிறேன். நான் ரிஷபவனத்தின் சாத்யகரின் சிறுமைந்தனும் யுயுதானரின் முதல் மைந்தனுமான அசங்கன்” என்றான். கடோத்கஜன் முழு உடலாலும் புன்னகை புரிந்தான். கரிய உதடுகள் அகல பெரிய பற்கள் பளிங்குப் படிக்கட்டுகள்போல விரிந்தன. “நான் இடும்பவனத்தின் காகரின் சிறுமைந்தனும் பாண்டவர் பீமசேனரின் மைந்தனுமாகிய கடோத்கஜன்” என்று சொல்லி வணங்கி அவன் தோளில் கைவைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113139/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64

பகுதி பதின்மூன்று : இனியன் – 6 இருண்ட காட்டுக்குள் கண்களுக்குள் அஸ்தமனத்தின் செவ்வொளி மிச்சமிருக்க பீமனும் இடும்பியும் கடோத்கஜனும் சென்றனர். மரங்கள் இருளுக்குள் திட இருள் வடிவுகளாக நின்றன. சீவிடுகளின் ஒலி திரண்டு இருட்டை நிரப்பத்தொடங்கியது. அவ்வப்போது கலைந்து பறந்த சில பறவைகள் நீரில் அறைவதுபோல இருளில் ஒலியெழுப்பி சிறகடித்தன. சிறகுகள் மரங்களிலும் கிளைகளிலும் உரசும் ஒலியுடன் அவை சுழன்றன. எங்கோ சில இடைவெளிகளில் வழிந்த மெல்லிய ஒளியில் மின்னிய இலைகள் ஈரமானவை போல் தோன்றின. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67139/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63

பகுதி பதின்மூன்று : இனியன் – 5 பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல அசைவிழந்து திசை முடிவு வரை தெரிந்தது. பறவைகள் அனைத்தும் இலைகளுக்குள் மூழ்கி மறைந்திருக்க வானில் செறிந்திருந்த முகில்கள் மிதக்கும் பளிங்குப்பாறைகள் போல மிக மெல்ல கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன. முகில்களை நோக்கியபடி பீமன் உடலை நீட்டி படுத்தான். அவனுக்குக் கீழே அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67124/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62

பகுதி பதின்மூன்று : இனியன் – 4 பெரிய மூங்கில் குழாய்களாலும் பலவகையான காய்களின் குடுக்கைகளாலும் உருவாக்கப்பட்ட தாளக்கருவிகளில் சிறிய குச்சிகளால் தட்டி தாளமிட்டு நடமிட்டபடி இடும்பர்குலத்துக் குழந்தைகள் குடில்களில் இருந்து கிளம்பினர். அவர்களுக்குப் பின்னால் குடிமூத்த ஆண்கள் நீண்ட கழிகளை கையில் ஏந்திச் செல்ல தொடர்ந்து இடையில் மான் தோல் அணிந்து பச்சை இலைகள் கொண்ட மரக்கிளை ஒன்றை ஏந்திய கடோத்கஜன் மகிழ்ந்து சிரித்து இருபக்கமும் நோக்கியபடி நடந்தான். அவனுக்குப்பின்னால் இடும்பியும் பெண்களும் சென்றனர். அவர்களின் வரிசையில் இணையாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67118/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61

பகுதி பதின்மூன்று : இனியன் – 3 இடும்பவனத்தின் உயர்ந்தமரத்தின் உச்சிக்கிளை ஒன்றில் மடியில் கடோத்கஜனை வைத்துக்கொண்டு பீமன் அமர்ந்திருந்தான். காலையின் இளவெயிலில் அவர்களின் நிழல் பச்சைத்தழைப்பரப்பின் மேல் நீண்டு விழுந்திருந்தது. காற்றில் இலைக்கடல் அலையடித்தது. அதன்மேலிருந்து பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து மிதந்து சுழன்று இறங்கி அமைந்தன. பச்சைவெளிக்கு அடியில் இருந்து பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலி எழுந்துகொண்டிருந்தது. தழைத்ததும்பலைப் பிளந்து வெளிவந்த கருங்குரங்கு ஒன்று அவர்களை நோக்கி ஐயத்துடன் தலைசரித்து உடலைச் சொறிந்தபின்னர் கிளைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67005/

Older posts «

» Newer posts