Tag Archive: கடைசி முகம்

கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு கதைகளில் உச்சவழு ,முடிவின்மைக்கு அப்பால் ,கடைசி முகம் போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமானவை .பல முறை உங்களுக்கு மெயில் அனுப்ப நினைத்து பயத்தினால் அனுப்ப முடியாமல் தவிர்த்திருக்கிறேன் ..சில மெயில்களை ஒரு சில வரிகள் மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி இருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75232

அந்த முகம்?

ஜெ, இன்று காலையில் தான் கடைசி முகம் சிறுகதை படிக்க முடிந்தது. விஷ்ணு நம்பூதிரி நேரில் கண்டு அதிர்ந்தது தன் மனதில் இருந்த பெண்பிம்பத்தையே… பெண்ணிடமான ஆணின் எதிர்பார்ப்புகளின் தொகை தூலவடிவம் கொள்ளும் போது அவனே நடுங்கும் வண்ணம் அது சீறும் விழிகளும் கேரைப் பற்களும் கொண்ட யட்சியாகக் அவன் முன் எழுந்து வருகிறது ! அவனே அறியாமல் அவன் ஆழ்மனம் வளர்த்தியது அதையே. அதன் முழுத்தோற்றத்தில் அவன் எதிர்பாரா அதிர்சியைத் தந்து உறைய வைக்கிறது . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22659

கடிதங்கள்

அன்புள்ள ஜெ கடைசியில் கேட்டே விடுகிறேன். அந்த கடைசி முகம் என்ன? எந்த முகத்தை ஓர் ஆண் உயிரைக்கொடுத்தாவது பார்ப்பான்? கதையிலே எங்காவது க்ளூ இருக்கிறதா என பலமுறை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை செம்மணி அருணாச்சலம் அன்புள்ள அருணாச்சலம் கதையில் க்ளூ இல்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் டிடியுடன் சுயவிலாசமிட்ட கடிதம் அனுப்புபவர்களுக்கு பதில் அளிக்கப்படும் ஜெ அன்புள்ள ஜெ, நலமா அகந்தொட்டு புறந்தொட்டு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டாள் ‘கொற்றவை’. இருமுறை வாசித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22607

கடைசி முகம் – சிறுகதை

  …….சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை சுவடிகளை அனுப்பியிருந்தான் . எல்லாம் கொல்லம் — கோட்டயம் சாலையில் உள்ள துளசிமங்கலம் என்ற புராதன நம்பூதிரி மடத்தில் கிடைத்தவை . இந்த மடத்தைப்பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாயோ என்னவோ ? தெற்கு கேரளத்தில் அதர்வ வேத அதிகாரம் உள்ள இரண்டு மனைகளில் ஒன்று இது . நான்கு நூற்றாண்டுக்காலம் இந்த மனையின் நம்பூதிரிகள் முக்கியமான மந்திரவாதிகளாக விளங்கிவந்திருக்கிறார்கள். திவான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22514