Tag Archive: கடிதம்

கடிதங்கள்

காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.  யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி “முடிவின்மையிலிருந்து ஒரு பறவை” என்ற அந்தக் கட்டுரை மிக நெருக்கமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. அன்புடன் தேவராஜ் விட்டலன் http://devarajvittalan.blogspot.com நன்றி தேவராஜ். அந்தக் கட்டுரையை எழுதி நெடுநாளாகிறது. நானும் நண்பர்களும் நடத்திய சொல்புதிது மூன்றாமிதழில் வெளிவந்தது. இன்று யோசிக்கும் போது அப்படி ஒரு இலக்கிய சிற்றிதழில் அந்தக்கட்டுரை வெளிவந்தது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19631

அண்ணா ஹசாரே-சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ, அன்னா ஹஸாரே தன் அறப்போராட்டத்தை ஆரம்பித்ததும் பெரும்பாலானவர்களைப் போல நானும் சந்தேகமும்,   அவநம்பிக்கையும், என்ன தான் நடக்கிறதென்று பார்க்கும் வெறும் குறுகுறுப்புமாகத்தான் இருந்தேன். உங்கள் முதல் இரண்டு கட்டுரைகளைப் படித்ததும் அடிப்படையான சந்தேகங்களும், குழப்பங்களும் ஒழிந்து ஒரு ஆசுவாசம் வந்தது. அவருடன் இருப்பவர்களின் நேர்மை மற்றும் நோக்கம் பற்றி நான் கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. அவர்களைப் பற்றி நீங்களும், நண்பர்களும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வெறுமனே மற்ற நண்பர்களுக்கு விளக்கும் பொருட்டு மட்டுமே படித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20363

தூக்கு- எதிர்வினை

திரு ஜெ, ( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்) நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வைத்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் ‘இந்த’ தூக்கு தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது.  இந்த தண்டனைக்கு எதிரான கருத்துள்ள கடிதம் ஒன்றாவது வெளியிடப்பட்டிருந்தால் சரியாயிருந்திருக்கும். எனவேதான் ‘இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக’ நீங்கள் சொன்னதற்குப்பின்பும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த தூக்கு தண்டனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20464

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

. இதை காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக உருவாக்கி இருக்கிறதா? அல்லது வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறதா? (ராகுலைக் கொண்டு வருவதற்கு) எனது பதில்: இதை காங்கிரஸ் உருவாக்கிய இயக்கம் கிடையாது. ஏனெனில் இது இரு முனையும் கூரான கத்தி இதை வைத்து காங்கிரஸ் பயன் அடைவதை விட பாதகமாக முடிவதற்கான வாய்ப்பு மிக அதிகம். தன் தலையில் மண்ணை வாரிப்போடும் வாய்ப்பை எவரும் வலிந்து உருவாக்க மாட்டார்கள். இதை விட எளிதாக ராகுலை உள்ளே கொண்டுவருவதற்கு இதை விட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20054

அண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்

நான் இந்த உரையாடல்களை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன் இங்கு சில அடிப்படையான கேள்விகளை எழுப்பி அதன் பதில்களைக் கொடுத்து இருக்கிறேன். இது,இங்கு எழுப்பப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் என்ற ஒரு நம்பிக்கையுடன். கேள்வி 1: ஊழல் என்பதோ அதற்குப் போராடுவதோ ஒன்றும் புதிய செய்தி கிடையாது,அப்படி இருக்கும் போது இப்போது அன்னாவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு ஆதரவு? எனது பதில்: இதற்கு முன்பு நடந்த எல்லாருக்கும் தெரிந்த போபோர்ஸ் ஊழலை எடுத்துக் கொண்டால், அதை நடத்தியது அரசியல் கட்சிகள் அதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20001

அண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்

நான் என் ஐயங்களை அண்ணாவின் முதல் போராட்டத்தின் பொழுது சொன்னது வாஸ்தவம்தான். இன்னும் அவரைச் சுற்றி உள்ளவர்கள் மீதான என் சந்தேகங்கள் எல்லாமே அப்படியேதான் உள்ளன. ஆனால் இப்பொழுது நான் அண்ணாவின் போராட்டத்தினைத் தீவிரமாக ஆதரிக்கிறேன். 1. அண்ணாவின் போராட்டத்தை ஒரு வேளை இங்கு நாம் அனைவருமே சந்தேகிப்பது போல காங்கிரஸோ, அமெரிக்காவோ, சோவியத்தோ, ஆர் எஸ் எஸ்ஸோ நடத்துவதாக இப்பொழுது நடை பெறும் தாக்குதல்களைப் பார்த்தால் தெரியவில்லை. காங்கிரஸுக்கு அண்ணாவின் கோரிக்கைகளை ஏற்கவும் முடியாது, ஏற்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19999

அண்ணா ஹசாரே- ஒரு கடிதம்

ஐயங்களும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் எழும் இச்சமயத்தில் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன். ‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே. முழுமையான பார்வைக்காகக் காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிக்கொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19995

அயோத்திதாசர், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நான் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். உங்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் எதையுமே வாசித்தது கிடையாது. உங்களைப்பற்றி எல்லாரும் சொன்னதுதான் காரணம். நீங்கள் சாதிவெறி உடையவர் என்றார்கள். இந்துத்துவா கொள்கை எனக்குப் பிடிக்காது. ஆகவே படிக்கவில்லை. விடுதலைச்சிறுத்தைகள் சார்பிலே திருமா ஐயா படம் போட்டு உங்கள் போஸ்டரை மாட்டுத்தாவணியிலே பார்த்துக் கூட்டத்துக்கு வந்தேன். நீங்கள் அயோத்திதாசரைப்பற்றிப் பேசியதைக் கேட்டேன். நான் தமிழாசிரியராகப் பணியாற்றிவருகிறேன். அயோத்திதாசரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதிகமாகத் தெரியாது. உங்கள் உரை பிரமிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19639

தறி-ஒருகடிதம்

ஜெ, நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை). ஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழைய தறி. பட்டுத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19642

சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எனக்கு வயது நாற்பத்துமூன்று. என்னுடைய பிளஸ்டூ வயதிலே நான் சுஜாதா வாசித்தேன். அப்போது என்னுடைய ஆதர்சம் அவர்தான். பின்னாடி ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷம் கழித்து வாசித்தபோது ’என்ன இது’ங்கிற மாதிரித்தான் இருந்தது. ஆனாலும் வாசிக்கவும் முடிந்தது. தொடர்ந்து ஒரு மூன்றுநாவல் வாசித்தபின் சலிப்பாகிவிட்டது. உங்கள் இணைய தளத்தில் சுஜாதாவைப்பற்றி நடக்கும் சர்ச்சைகளை வாசிக்கிறேன். பலருக்குக் கோபம் இருக்கிறது என்று இணையத்தில் வாசித்தேன். அப்படி கோபம் கொள்பவர்களிலே கொஞ்சம் சாதியபிமானமும் உண்டா என்று எனக்கு சந்தேகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19548

Older posts «

» Newer posts