Tag Archive: கடிதம்

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

[பத்தாண்டுகளுக்கு முந்தைய கடிதம் இது. இதை எழுதியவர் இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளர்] ஒரு நண்பரின் கடிதம் …….எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை அறிந்து கொண்டு, மேலே செல்ல ஆசை…. அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கடிதம். *** நீங்கள் நினைப்பது சரிதான். நீங்கள் எழுதலாம் ஏதாவது ஒருதுறையில் சற்றே படைப்பூக்கத்துடன் செயல்படுவதை ‘ஹாபி’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/338

சாருவும் மேனகாவும்

சாரு அவர்களின் கடிதம். அதில் மேனகா காந்தி ஊழியரை அடித்த விவகாரம் பற்றி எழுதியிருந்தார். ஒரு வரி எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. தமிழ் ஆங்கிலத்திற்கு நிகராக விளையாடுகிறது அங்கே ஜெ மாண்பு மிகு அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் மீது குற்றசாட்டு பற்றி. சாரு ஹாசன் ஆங்கிலத்தில் USE OF FORCE என்று சொல்லப்படும் செயல் எப்போது குற்றமாகிறது என்று நம் சட்ட நிபுணர்களிடம் கேளுங்கள்.? நான் 14 வயது வரை என் 28 வயது தாயிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75240

திருநீற்றின் ஆரம்பம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, இன்று திருநீறு அணிவது உடலின் நிலையாமையை தொடர்ந்து நினைவில் வைத்திருக்க உதவும் சாதனமாக தத்துவார்த்த அடிப்படையில் விளக்கப்படுகின்றது. தென்சூடானின் டிங்கா பழங்குடியினர் பற்றிய அருமையான படங்கள் இடம்பெற்றுள்ள இந்தக் கட்டுரை திருநீற்றின் ஆரம்பம் மனிதப்பயன்பாடு கருதியே உருவாகி இருக்கக்கூடும் என்பதை காட்டுகின்றது. http://tekey.net/b/en/dinka-nilotic-ethnic-from-sudan/ ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே’ என்று மாணிக்கவாசகர் கூறுவதையே திருநீறும் எடுத்துவந்திருக்கின்றது. சிவேந்திரன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/75072

வல்லபி வானதி- நிலவழிபாடு

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு, வணக்கம். சென்றவாரம் பேசியதுபோல வருகிற 22ம் தேதி அன்று நிலவழிவாடு செய்து கட்டிடப்பணியைத் துவக்க இருக்கிறோம். உங்கள் பயணத்திட்டம் காரணமாக தாங்கள் கலந்துகொள்ள இயலாதது குறித்து எங்களுக்கு வருத்தம் இருக்கிறது. காலதாமதம் பாதிக்கப்பட்டவர்களின் காத்திருப்பை இன்னும் அதிகரிக்கும் என்பதாலும் பொருளாதார கணக்குகளும் (இப்போதைய கட்டிட செலவு மதிப்பு சுமார் 90 லட்சம். கையிருப்பு 16 லட்சம். பொறியாளர் ஒரு பெரிய செலவுப்பொறுப்பை அவரே ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது ஒரு 15 லட்சம் அளவு சுமையைக்குறைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71053

அம்மையப்பம் -கடிதம்

அன்புள்ள ஜெ , அம்மையப்பம் பற்றி எவ்வளவு சிறந்த தொழில் நுட்ப வடிவமும் வெகு சீக்கிரத்திலேயே அதன் வசீகரத்தை இழந்து விடும் ,(எனக்கு காந்தி பாரிசில் கண்ட ஈபிள் டவரைப் பற்றி எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது) .கலையில் அதன் படைப்பாளி எப்படியோ அதனுள் உயிரைக் கொண்டுவந்து விடுகிறான்,அதற்காக அவன் மற்ற அனைத்திலும் தோல்வி அடைவதுதான் சோகம், என்ன செய்வது காளி மார்பில் வைத்து அமுதூட்டுவதில்லை,காலடியில் கிடத்தியே அமுதூட்டுவேன் என்கிறாள். எந்தஅளவு அவன் சமூகத்தின் முன் கோமாளியாகப் பார்க்கப் படுகிறானோ அந்த அளவு கலை அவனை நெருங்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35640

இந்த இணையதளம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ. ரொம்ம்ம்ப நாள் கழித்து உங்களுக்கு எழுதுகிறேன். வலைத்தளத்தை தினம் படிக்கிறேன், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான அந்தரங்கமான, தீவிரமான உரையாடல் இருக்கிறது ஆனால் கடிதம் எழுத கொஞ்சம் தயக்கம் – எண்ணங்களைத் தொகுத்து, கருத்துக்களை செம்மை செய்து உருப்படியான கடிதங்கள் எழுத வேண்டும் என்கின்ற மனத்தடை பெரிய காரணம். சில வாரங்களுக்குள் ஊருக்கும் (ராஜபாளையம்) என்னுடைய கல்லூரிக்கும் (ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி) போய் வந்திருக்கிறீர்கள். கொஞ்சம் வருத்தம் தான், உங்களை நேரில் பார்க்க முடியாதது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31894

கீதையைச் சுருக்கலாமா?

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களுடைய கீதை உரையை நான் திரு.அரங்கசாமி அவர்களின் உதவியோடு முழுமையாகப் படித்திருக்கிறேன்.  அதில் நீங்கள் கர்மயோகத்தை விளக்குவதற்காக எழுதிய பல பக்கங்கள் எனக்குப் புரியவைக்காத  அந்த ஒட்டுமொத்தப் பார்வையை, உங்களின் உலோகம் நாவலில் வரும் ஒரு சிறு பகுதி புரியவைத்தது. ஒரு இயந்திரம் ஆயிரக்கணக்கான உறுப்புகளாலான நூற்றுக்கணக்கான தனிக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டு ஒரு தருணத்தில் ஒன்றிணைக்கப்பட்டு மின்சாரம் அளிக்கப்பட்டதும் சரசரவென செயல்பட ஆரம்பிப்பதைப்போல எத்தனையோ பேர் என்ன நடக்கிறதென்றே அறியாமல் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25125

ஹனீஃபா கடிதம்

மதிப்பு மிகு ஜெயமோகனுக்கு வணக்கம் உங்கள் வலைப்பூவில் என்னைப்பற்றிய பதிவைப்படித்தேன். இன்னும் கொஞ்சம் இளமை பூத்தது.நல்ல எழுத்து மனித மனத்துக்கு ‘கூட்’டுப்பசளை’ போல. படிக்கும் தோறும் நினைக்கும் தோறும் கொத்துக்கொத்தாய் பூத்துக்குலுங்கும் மனசு. அத்தகைய எழுத்துக்களின் சொந்தக்காரர் அல்லவா நீங்கள்.யானை டாக்டர் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். என்ன சொன்னீர்கள் விவசாயம் விஷக்கன்னியா?உண்மைதான் வெள்ளாப்பில் எழுந்து வாப்பாவின் கைப்பிடித்து தோணியில் ஆற்றைக்கடந்து வயலுக்குப்போன முதல் நாள் எந்த நாளோ என்ன நட்ஷத்திரமோ நானறியேன் ? வயலும் பயிரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21178

அனலும் அணுவும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,கூடங்குளம் குறித்து சண்முகம் என்பவரின் கடிதம் பார்த்தேன். நிலக்கரி அனல் மின் நிலையங்கள் என்று வரும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு என்கிற மிகப்பெரிய பூச்சாண்டியைக் கையில் எடுப்பது வழக்கமாகி விட்டது. இது குறித்துக் குழும விவாதத்தில் நான் பதிந்த கருத்துகளை இங்கே மீள் பதிய வேண்டிய அவசியம் உள்ளது.நிலக்கரி மூலம் அனல்மின்சக்தி என்பதற்கு எதிராகச் சொல்லப்படும் காரணங்கள் இரண்டு: 1. காற்று மாசுபடுதல், 2. சுரங்க விபத்துகள் கார்பன் துகள்களை வடிகட்டும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21230

கூடங்குளம்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், கூடங்குளம் பற்றிய உங்கள் பதிவையைப் படித்தேன். உண்மையில் அணுசக்தி மட்டும் தான் நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்குத் தீர்வாக அமையும் என்ற மத்திய அரசின் பேச்சு எடுபடாததுதான். ஜார்ஜ் புஷுடன் மன்மோகன் சிங் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நிறுவனங்களின் நன்மைக்காகவே செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த வகையில் அதை எதிர்ப்பதும் ஜைதாபூர் போன்ற நிலநடுக்கப் பாதிப்புள்ள இடங்களில் மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதும் ஏற்கத்தக்கதே. அதே சமயம் கூடங்குளம் மிகுந்த நிலநடுக்கப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21158

Older posts «