Tag Archive: கடல்

கடல் – கொரிய திரைவிழாவில்

இன்று [3-10-2013 ] தொடங்கிய தென்கொரியவின் பெருமைக்குரிய திரைநிகழ்வான பூசான் திரைவிழாவில் கடல் திரையிடப்படுகிறது. தவிர்க்கக்கூடாத ஐந்து படங்களில் ஒன்று என்று கடல் படம் முன்வைக்கப்படுகிறது. [பிற படங்கள் “Unforgiven” (Japan), Dawn of the Dead 3D” ( Korea ) A Touch of Sin” (China) “Come, Come, Come Upward” (Korea)] மணி ரத்னம் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொள்கிறார் கிம் ஜி சியோக் எழுதிய குறிப்பு இப்படிச் சொல்கிறது. ‘Mani Ratnam’s …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40298/

சினிமா- கேள்விகளுக்கு விளக்கம்

சினிமா சம்பந்தமான வினாக்கள் விவாதங்களை இந்தத் தளத்தில் நிகழ்த்த விரும்பவில்லை என்று சொல்லி வந்திருக்கிறேன். என்றாலும் என்னுடன் தொடர்புகொள்ளும் பலர் சினிமா சார்ந்தே நிறைய எழுதிக்கேட்கிறார்கள். என்னுடைய ஒரே ஊடகமாக இருப்பது இவ்விணையதளம். ஆகவே சுருக்கமாக சில விளக்கங்களை அளிக்கிறேன். எழுதிக்கேட்ட அனைவருக்குமான பொதுப்பதில் இது. 1. கடல் கடல் திரைப்படம் ஒரு அபூர்வமான, ஆனால் பலசமயம் வெற்றிபெற்ற, ஒரு கலவையை அடைவதற்கான முயற்சி. மேல்தளத்தில் கதைநாயகன், வில்லன், கதைநாயகி , காதல், சண்டையில் முடியும் உச்சகட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34538/

கடல் இரு மாற்றுப்பார்வைகள்

[கடல் சம்பந்தமான வசைகள் எக்களிப்புகள் எல்லாவற்றையும் இணையத்தில் எல்லாரும் படித்திருப்பீர்கள்.வேறுவகையான இரு விமர்சனங்கள். சிலராவது இக்கோணத்தில் பார்த்தால் நல்லது] கடலெனும் அனுபவம் சிறில் அலெக்ஸ் பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு சொல்றதுக்கு முன்னால ஓடிரலாம் வா’ எனும் வரி. கடல் திரைப்படத்துக்கு வந்திருக்கும் பல விமர்சனங்களைப் படித்தபோது எனக்கு இதுவே நினைவுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34540/

கடல்

கடல் பற்றி நூறுக்குமேல் மின்னஞ்சல்கள். எவற்றுக்கும் தனித்தனியாக பதில்போட விரும்பவில்லை. முடியவும் முடியாது. பயணத்தில் இருக்கிறேன். ஆகவே இந்தப்பதிவு 1. கடலின் கதை பழைய கதை அல்ல. அது சினிமாவுக்காக எழுதப்பட்டது. சிறிய நாவல் வடிவில்.அதன்பின் அதில் சிறிய பகுதி எடுத்துத் திரைக்கதையாக ஆக்கப்பட்டது. எல்லாக் கதைமாந்தர்களுக்கும் நீண்ட கதை நாவலில் உண்டு.படம் வெளிவந்தபின் நாவல் வெளிவரும். 2. கடல் இப்போதைய வடிவில் ஒரு பரபரப்பான, பிரம்மாண்டமான, உணர்ச்சிகரமான வணிகப்படம்தான். அதற்குள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33734/

மணிரத்னம்,கடல்,நான்

அன்புள்ள ஜெ, கடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது மணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன் சியாமளா பாலகிருஷ்ணன் அன்புள்ள சியாமளா, மணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31627/

நெஞ்சுக்குள்ளே…

கடல் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த பாடல். ரஹ்மான் எம்.டி.விக்காக பாடியது. முதன்முறையாக இதைக்கேட்கையில் முழுமையாகவே இதன் நரம்பொலிகளில் ஈடுபட்டு குரலையே என்னால் கவனிக்கமுடியவில்லை. அதன்பின் குரலை. அப்போது காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன, அவற்றை கவனிக்கமுடியவில்லை. ரஹ்மானின் சாதனைப்பாடல்களில் ஒன்று என நான் இதைச் சொல்வேன். ஒரு சினிமாப்பாடலுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் உழைப்பும் நுணுக்கமாக சேர்த்துச் சேர்த்து திரட்டிய படைப்பூக்கமும் ஓர் அற்புதம் ஆனால் இந்தப்பாடலை கடல் படத்தின் பாடல்களில் இரண்டாம் இடத்தில்தான் வைப்பேன். இன்னொன்று உள்ளது, ஒரு படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31596/