Tag Archive: கடல் பிரமோக்கள்

இரு கடல் பிரமோக்கள்

கடல் படத்துக்கு இரு ‘ஃப்ரீலான்ஸ் பிரமோ’ க்களைப்பார்த்தேன். பிரகதி குருப்பிரசாத் நெஞ்சுக்குள்ளே பாடலின் குரல் டிராக்கைத் தன் குரலால் நிரப்பிப் பாடி நடித்த படம் ஆச்சரியமாக கச்சிதமான படமாக்கல், நுட்பமான தொகுப்பு, கற்பனை நிறைந்த மௌனக்காட்சிகளுடன் சிறப்பாக இருந்தது https://www.youtube.com/watch?v=HedptM7qpm8 அய்யப்ப பைஜூ யூடியூப் வழியாகவே பிரபலமானவர். இயற்பெயர் பிரசாந்த் புன்னப்ரா. அய்யப்ப பைஜூ என்ற குடிகார கதாபாத்திரத்தை அவர் உருவாக்கி இணையத்தில் உலவவிட்டார். பின் மேடைநிகழ்ச்சிகளில் பிரபலமானார். மிஸ்டர் சங்கீதன் என்ற பாடக கதாபாத்திரமும் முக்கியமானது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34174