Tag Archive: கடலூர் சீனு

ஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு

  இனிய ஜெயம்   விழுப்புரம் துவங்கி அருணை மலை வழியே வேலூர் வரை நீளும் மலைத்தொடர் தமிழக அளவில் மிக முக்கியமான நிலப்பரப்பு.  இதன் இறுதிப் புவியியல் வரலாற்று நேரமானி, விண்கல் மோதி டினோசர்கள் அழிந்துபோன ஊழிக் காலத்தில், விண் கல் மோதிய உப விளைவில்,  புவி மைய கன்மதம் உலை கொதிக்கும் மேற்ப்பரப்பாக மாற்றிய, இப்போது நாம் காணும் நிலக்காட்சி வரை வந்து நிற்கிறது.   செத்தவரை, கீழ்வாலை பாறை ஓவியங்கள் துவங்கி, பல்லவர்களின் முதல் குடைவரைகள், கோவில்கள், எண்ணற்ற சமணப் பள்ளிக் குகைகள்,  உளுந்தூர்பேட்டை, மேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129919/

தம்மம் தந்தவன்- கடலூர் சீனு

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத் தம்மமும் தமிழும் சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி தம்மம் தந்தவன்  முடியாத புத்தர்  நல்ல பல  புனைவுகளை,மிக நேர்த்தியான வடிவமைப்பில்,சர்வதேச தரத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நற்றினை பதிப்பகம், மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய நாவலாசிரியரான விலாஸ் சாரங் எழுதிய தி மான் ஆப் தம்மா எனும் நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள். இதை தமிழில் மொழிபெயர்த்தவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பரும், வாசகரும்,மொழிபெயர்ப்பாளரும்,எழுத்தாளருமான காளிபிரசாத் அவர்கள்.   தமிழின் மொழிபெயர்ப்பு சூழலில் இருந்து பேசத் துவங்குவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தமிழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129441/

தொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு

    இனிய ஜெயம்   அமெரிக்கா சென்று இறங்கி இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த ஞாயிறு நீங்கள் அமெரிக்கா கிளம்பும் முஸ்தீபில் பெங்களூரில் இருந்த சூழலில், உங்களை விட்டு விட்டு நாங்கள் விஷ்ணுபுர குழும நண்பர்கள் ஒரு பத்து பேர் வரை ஒரு சிறிய ஒரு நாள் பயணம் சென்றோம். செல்வேந்திரன் அவரது நண்பர் சந்ரசேகர் அரியலூரில் தொல்பழங்கால உயிரிப் படிமங்கள் அருங்காட்சியகம் அமைய அரசுக்கு ஆவன செய்த தன்னார்வலர்களில் ஒருவர். செல்வேந்திரன் தலைமையில் அவருடன்,அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127247/

நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்

  அமேஸான் – கடிதம் அன்புள்ள ஜெ,   ஊருக்கு திரும்ப ஆயத்தமாகியிருப்பீர்கள். நியூ யார்க்கில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.   கடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். ஹ்ம்ம் பாப்கார்ன் அறிவு ஜீவிகளை மறுக்க அறிவுத் தரப்பே இல்லையென்று அங்கலாய்த்து விட்டு அப்புறம் அறிவு ஜீவி தரப்பே தமாஷ் என்கிறார்.   ஹ்ம்ம்ம் பாவம் அவருக்கு பிடித்த நாகசாமியை குறைச் சொல்லி விட்டேன். பத்ம பூஷன் வாங்கியவரை அவமதித்து விட்டேனாம். கடலூரார் பத்ம விருது பெற்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126352/

கடலூர் சீனுவின் கடிதங்கள்…

  உங்கள் இணையத்தில் திரு கடலூர் சீனு அவர்களின் கடிதம், கட்டுரைக்கென விசிறி வட்டம் உருவாகியிருக்கும் என நினைக்கிறேன். சில வேளைகளில் மிகக் கட்சித்தனமான வாக்கியங்களால் ஒரே பத்தியில் பல விஷயங்களை தாண்டி விடுகிறார். உங்கள் குழுமத்தின் அறிவு செயல்பாட்டையும், கூர்மையையும் தமிழ் இலக்கிய வட்டம் நன்கு அறியும். ஆனால் அதில் பங்கு கொள்ளாத இயலாத என்னை போன்றோருக்கு திரு சீனு அவர்களின் கடித பங்களிப்பு அங்கு நடக்கும் விவாதங்களை “ஒட்டு கேட்ட” மன திருப்தியை அளிக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125632/

இன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு

விமலரும் வராகரும் சமணத்தில் வராகர் வராகர் -ஒரு கடிதம் சமணம் வராகர் – கடிதங்கள்   இனிய ஜெயம்   இந்துத் தாலிபானியம் இங்கே வந்து விட்டதா எனும் கேள்விக்கு [ சமணம் வராகர் – கடிதங்கள்]அப்டித்தான் போல என்றே சொல்லத் தோன்றுகிறது.  பொதுத் தளத்தில் இது மூன்று அலகுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். ஒன்று இத்துப் பண்பாட்டு இயக்கம் மீதான அறியாமை.  அந்த அறியாமையில் நின்று இந்துக் காலாச்சாரக் கூறுகள் அனைத்தையும் உயிர் இயக்கத்திலிருந்து  துண்டித்து உறைநிலையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122494/

சிவவடிவங்கள்

இனிய ஜெயம் பயணமொன்றில், நண்பர் அனுப்பி வைத்திருந்த ஈஷா மகா  சிவராத்திரி கொண்டாட்டம் கண்டேன். ‘இன்றைய காலத்துக்கான’ மதக் கொண்டாட்டம் இது என நினைக்கிறேன்.  நடிகையர்கள் ஆட்டம் பாட்டம் பங்களிப்புடன்,  அந்த சூழலுக்கு சம்பந்தம் அற்ற சினிமா பாடல்கள் [நான் கடவுள் படத்தின் சிவோகம் பாடல் சூழலுக்கு சம்பந்தம் உள்ள  பாடல் அந்த வகையில்]  உச்ச கதியில் முழங்கிக் கொண்டிருந்தன.   அவ்வப்போது பிரபல பாடகர்கள் அல்லாவின் அருள்,கர்த்தரின் கருணை எல்லாம் வேண்டிப் பாடி, சாதகர்கள் பக்தர்கள் இவர்களுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119618/

இந்திய நாயினங்கள் – தியோடர் பாஸ்கரன்

ஒளிரும் விழிகள்  குழையும் வால் நம்மை விளையாட அழைக்கிறது பிரபஞ்சம்  நாயின் உருவில் . ஒரு ஜென் கவிதை இந்திய நாயினங்கள்- தியோடர் பாஸ்கரன் – நூல் வாங்க இனிய ஜெயம் நினைவு தெரிந்த நாள் முதலாக, என் வாழ்வு ஏதேனும் ஒரு நாயுடனே பிணைக்கப்பட்டு நகரும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. நான் கொலை செய்த மணி முதல் கடந்த வருடம் என்னை விட்டுவிட்டுப் போன ஒற்றைக்கண் பிளாக்கி வரை.   எங்கள் குலதெய்வத்துக்கு வீட்டு விலங்காக நாய் வைத்திருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118104/

வெள்ளிநிலத்தில்…

இனிய ஜெயம் எனது பதின்பருவ மத்தியில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய முக்கிய திரைப்படங்களில் ஒன்று ஸ்பீல்பர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம். [இதை எழுதும் இக்கணம் மனிதன் கைகளிலிருந்து நழுவிய காவலாளி, மிருகத்தின் வாய்க்குள் செல்லும் இறுதிக் கணம், மனிதனும் மிருகமும் கண்ணுக்குக் கண் பார்த்துக்கொள்ளும் அப் படத்தின் காட்சி வலிமையாக உள்ளே எழுகிறது.உலக திரைப்பட வரலாற்றின் சிறந்த நூறு ஷாட் களில் ஒன்றாக அது இருக்க வாய்ப்பு உண்டு] காரணம் அதில் உயிர் கொண்டு உலவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117996/

அவ்வாறே வந்தவர்

இனிய ஜெயம் சிலவாரங்கள் முன்பு ,அதாவது திசைதேர் வெள்ளம் முடிந்த மறுநாள் ,  ஒரு சிறுபயணம் என  திருச்சி சென்றிருந்தேன் . சாரல் மழையில் மலைக்கோட்டை  உச்சிப்பிள்ளையார் கோவில் வாசல் ,எதிரே சின்னக்கடை வீதி இறுதி வரை நடந்தேன் .தைலா சில்க் கடந்தால் ,தேவதி புக் ஸ்டால் . லெண்டிங் லைப்ரரி . புதிய நூல்கள் பத்து சதமான தள்ளுபடி விலையிலும் ,வாடகைக்கு சுற்றிவரும் நூல் ,விலைக்கு எனில்  நாற்பது சதமான தள்ளுபடி விலையிலும் கிடைக்கும் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117264/

Older posts «