Tag Archive: கடலூர் சீனு

வரைகலை நாவல்கள் – கடிதம்

மங்காப் புகழ் புத்தர் இனிய ஜெயம் மங்காப் புகழ் புத்தர் பதிவில் //வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் அவையே முற்றாக வகுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117167

இரண்டு – சத்யஜித் ரே

. இனிய ஜெயம் சத்யஜித் ரே  இயக்கிய ஆவணப்படம் ஒன்றினை தேடியபோது [அவர் தாகூர் குறித்து எடுத்த ஆவணப்படத்தில் தாகூரே சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடும் காட்சி ஒன்று உண்டு என்றொரு வதந்தி] ரே இயக்கிய  இந்தக் குறும்படம் கிட்டியது . பத்தே நிமிட குறும்படத்தில் எத்தனை வலிமையானதொரு உணர்வு நிலையை பொதிந்து, கலையாக்கி, காலத்தில் நிறுத்திவிட்டார் மனிதர் .  காமிரா நோக்கு முழுதுமே ,பெரும்பாலும் மேலிருந்து கீழே பார்க்கும் கோணம் . காலுக்குக் கீழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116659

எழுத்தாளனாகவே வாழ்வது என்பது…

அஞ்சலி:பிரபஞ்சன் இனிய ஜெயம் ஞாயிறு அன்று இரவே, நண்பர்களுடன் இல்லாமல் ,  நான் கிளம்ப முடிவு செய்த காரணம் ,திங்கள் அன்று  காலை பிரபஞ்சனின் இறுதிப் பயணம் என நான் இறுதியாக கண்டிருந்த செய்தியே .பொதுவாக நான் யாருடைய மறைவுக்கும் செல்பவன் இல்லை .உயிர் கொண்டு ,மொழி கொண்டு அவர் என்னுடன் உறவாடிய இறுதிக் கணம் மட்டுமே ,என் நினைவின் இறுதிச் சுவடாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம் . மாறாக பிரபஞ்சனின் இறுதிப் பயணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116569

சிவசக்தி நடனம் – கடலூர் சீனு

  இன்னும் மனிதர்களிடம் அன்பு அற்றுப்போய்விடவில்லை. அந்த ”இன்னும்” குறித்து சொல்ல நிறைய என்னிடம் உண்டு. – வண்ணதாசன் _     மண் : ஒரு முறை, கிருஷ்ணனுடன் ஈரோட்டில், ரயில்வே குடியிருப்பில் மாலை உலா சென்றேன். முதல் காட்சியிலேயே ஒரு புனைவு நிலத்துக்குள் நுழைந்து விட்ட பிரம்மையை எய்தினேன். அசோகமித்ரனின் கதைகளில் வரும் லான்சர் பாரெஸ் குடியிருப்பு நிலம் கொஞ்சமும் மாறாமல் அப்படியே என் கண் முன் விரிந்தது. நகர சந்தடி தாண்டி, அமைதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93116

மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு

  காமம் குரோதம் மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது. மோகமோ புறவுலகைச் சார்ந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிறைந்திருப்பது குரோதமேயாகும். குரோதம் அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பு. எரிதலின் பேரின்பம் அது. எரிதலின் உச்சம் அணைதலே. குரோதம் தன்னைத் தானழித்துக்கொள்கையிலேயே முழுமை கொள்கிறது மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு [வெண்முரசு நாவல் குறித்து உரையாடல்]          

Permanent link to this article: https://www.jeyamohan.in/92561

அழியா ஓவியங்கள் -கடலூர் சீனு

இனிய ஜெயம், முன்பு ஒரு சமயம் ஒரு ருஷ்ய காமிரா ஒன்று [சல்லிசா கிடைத்தது] வாங்கினேன். என் தங்கையை புகைப்படம் எடுப்பதற்காக. அந்த காமிராவில் பிலிம் மாட்டும் வேலையில் இறங்கினேன். அந்த கேமராவின் கேட்லாக் துவங்கி, கேமராவின் அனைத்து செயலிகளும் ருஷ்ய மொழியில் இருந்ததால், குத்து மதிப்பாக பிலிமை மாட்டி, அனைத்து செயல்களையும் குத்து மதிப்பாகவே செய்து தங்கையை வித விதமாக புகைப்படம் எடுத்தேன். கூர்ந்து இதை நோக்கிக்கொண்டிருந்த என் அண்ணன் திடீரென ஆவேசம் கொண்டு குடுடா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79287

கடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு

நெஞ்சே, காணும் இவ்வுலகை கனவென்றே இரு, சுற்றத்தை, கூடிப் பின் ஓடும் சந்தைக்கூட்டமென்றே இரு, வாழ்வை, குடங்கவிழ்நீர் ஓட்டமென்றே இரு, -பட்டினத்தார்- நண்பர் ஒருவர் சரக்குக் கப்பலில் பணி புரிகிறார். துறைமுகத்துக்குள் கப்பல் நுழையும்போதுதான் அவரது பணி துவங்கும். நிற்கும் சரக்குக் கப்பல் கூட்டத்தில் தடம் பிடித்து தன் கப்பலை சரக்கு இறக்கி ஏற்ற வாகாக நிறுத்தி, பின் அதே போல அடுத்து வரும் கப்பல்களுக்கு இடர் இன்றி தடம் கண்டு துறைமுகத்தை விட்டு கப்பலை வெளிக்கொண்டுவருவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76142

ஆழி- கடலூர் சீனு

ஒரு முறை கரூரில் சித்தி வீட்டில் தங்கி இருந்தேன். சித்தியின் மாமியார் தீவிரப் பகுத்தறிவுவாதி பரபரப்பாக அன்று நக்கீரன் இதழில் வெளிவந்திருந்த தொடரின் ஒரு பகுதியைக் காட்டினார். அக்னிஹோத்ரம் எதோ ஒரு ஆச்சாரியர் எழுதிய ஹிந்துமதம் எங்கே செல்கிறது எனும் தொடரில் வேதங்களில் வரும் அஸ்வமேதம் அதன் சடங்குகள் குறித்த பகுதி. முகத்தில் ‘’பாத்தேளா! அவாளே ஒத்துனுட்டா. அவாள்லாம் அக்யூஸ்ட்தான்’’ எனும் பாவனை. நான் புன்னகையுடன் சொன்னேன் ‘’பாட்டி எந்தக் காரணமும் இல்லாமல் மனித மனத்தால் பிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62278

நீலம் -கடலூர் சீனு

pbaaab245_radha_krishna_forest

இனிய ஜெயம், வென்முரசை எப்போதுதான் வாசிப்பது? விழித்ததும் முதல் வேலையாக வாசித்தால் அதற்குமேல் வேலையே துவங்க தேரை தலையால் முட்டி நிலை கிளப்புவதுபோல மனதை உந்த வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறேன். இரவில் வாசித்தால் தூங்காமலேயே கனவுக்குள் விழுந்து விடுகிறேன். தன்னளவில் உங்களது மகாபாரதம். தனிப்பட்ட முறையில் எனக்கு மிக மிக அந்தரங்கமானது. ஆகவே அதன் மீதான சிறு விமர்சனமும் என்னை சங்கடப் படுத்துகிறது. திறமான வாசக விமர்சனத்துக்கு உரியதே எந்த இலக்கியப் படைப்பும், என்றாலும் எனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61506

கடலூர் சீனு-ஒரு கடிதம்

இனிய ஜெயம், தொடர்ந்து சிறிய சிறிய பயணங்களில் இருக்கிறேன். சில தினங்கள் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டிக்கு ஐந்து கிலோமீட்டர்கள் உள்ளே கீழைப்பட்டி எனும் [பேருந்து கூட வராத] சிறிய கிராமத்தில் நண்பர் பிரபுவின் இல்லத்தில் தங்கி இருந்தேன். ஊரைச் சுற்றி ஆறு ஏழு கம்மாய். முக்கால்வாசி ஆக்கிரமிக்கப்பட்டவை.விவசாயம் கைவிடப்பட்டு கிட்டத்தட்ட ஊரே காலி. இருபது முப்பது வீடுகள். அனைவரும் ஒருவர் முகம் ஒருவர் அறிந்த நெருக்கம். புதுமைப்பித்தன் கதைகளில் வரும் சவுக்கை எனும் கிராமத் திண்ணை அரங்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60894

Older posts «