Tag Archive: கங்கை

மழைப்பாடலின் ஓவியங்கள்

அன்புள்ள  ஜெ, மழைப்பாடலில் ஓவியங்கள் மேலும் மேலும் அழகும் நுட்பங்களும் கொண்டவையாக மாறி வருகின்றன. சமீபத்தில் எந்த ஒரு தொடருக்கும் இவ்வளவு அழகான ஓவியங்களை நான் கண்டதில்லை. பல ஆயிரம் ரூபாய் செலவில் வணிக இதழ்கள் வெளியிடும் ஓவியங்கள் கூட இதில் பாதிக்குக்கூட இல்லை. விரிவாக்கிப்பார்க்கும்போது படங்களில் உள்ள நுட்பமான தகவல்கள் பிரமிக்கச்செய்கின்றன. உங்கள் வார்த்தைகள் அஸ்தினாபுரியையும் மார்த்திகாவதியையும் கனவிலே நிலைநாட்டுகின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போலவே ஓவியங்களும் செய்கின்றன. சிலசமயம் ஓவியம் உங்களை தாண்டிச்சென்றுவிடுகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48778

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42

பகுதி எட்டு : பால்வழி [ 4 ] அதிகாலையில் மார்த்திகாவதியை நெருங்கும்போதுதான் விதுரன் கண்விழித்தான். எங்கிருக்கிறோம் என்னும் எண்ணம் வந்த கணமே பாண்டுவின் நினைப்பும் வந்தது. மஞ்சத்தில் இருந்து எழுந்து அறைக்குள் சுழன்று கொண்டிருந்த குளிர்காற்றை உணர்ந்தான். அப்பால் பீஷ்ம பிதாமகர் படுத்திருந்த புலித்தோல் மஞ்சம் அங்கே ஒரு மனிதர் படுத்திருந்த சுவடே இல்லாமல் தென்பட்டது. பீஷ்மர் இரவில் மல்லாந்து கற்சிலைபோல அசைவில்லாது துயில்பவர் என்பதை விதுரன் அறிந்திருந்தான். ஆயினும் அவனுக்கு அந்த மஞ்சம் வியப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47541

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 41

பகுதி எட்டு : பால்வழி [ 3 ] படகுகள் ஒருங்கிவிட்டன என்று தலைமைக்குகன் வந்து பணிந்து சொன்னான். பீஷ்மர் அந்தப் படித்துறையில் இறங்கியது முதல் கற்சிலை போலவே இருந்தார். குகன் சொன்னதைக்கேட்டு அவரில் உயிர் தன் இருப்பை உணர்ந்தது. மெல்லிய தலையசைவுடன் எழுந்து தலையை மிகக்குனித்து நிலைக்கதவைக் கடந்து முற்றத்தில் இறங்கி நடந்து சென்றார். அவர் அம்பையின் ஆலயத்தை அரைக்கணமேனும் பார்க்கிறாரா என்று பாண்டு கவனித்தான். அவரது உடலில் எந்த அசைவும் தெரியவில்லை. அவ்வெண்ணத்தை உணர்ந்தவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47692

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 40

பகுதி எட்டு : பால்வழி [ 2 ] பாண்டு அதுவரை கங்கையை கண்டதில்லை. அரண்மனையைச் சுற்றியிருந்த பூங்காக்களுக்கு வெளியே அவன் செல்வதே அதுதான் முதல்முறை. அஸ்தினபுரியின் அரண்மனையில் ஆடையணிகள் பூணும்போதுகூட அவனிடம் பயணத்துக்கான பரபரப்பு ஏதும் இருக்கவில்லை. பயணம் என்று எதையும் அவன் அறிந்திருக்கவில்லை என்பதனால் அவனால் எதையும் எதிர்பார்க்கவும் முடியவில்லை. எப்போதுமிருக்கும் இயல்பான தன்பகடியுடனும் சிரிப்புடனும் தன்னை ஒருக்கி அமைக்கும் சேடிகளுடன் ஒத்துழைத்தான். அரண்மனை முகப்புக்கு வந்து அன்னையிடமும் பேரரசியிடமும் ஆசிபெற்று கூண்டு வண்டியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47679

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை [ 3 ] குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர் தன் ஆயுதசாலைக்கு வந்து ஓய்வெடுக்காமலேயே நீராடச்சென்றார். அவருடன் ஹரிசேனன் மட்டும் இருந்தான். பீஷ்மர் மெல்ல சொற்களை இழந்துவருவதாக அவனுக்குப்பட்டது. காடு அவரை அஸ்தினபுரிக்கு அன்னியராக மாற்றிக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டான். அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்தில் சடங்குக்கு ஏற்பாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45314

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18

பகுதி நான்கு : அணையாச்சிதை [ 2 ] உருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் “எங்கே பீஷ்மர்? எங்கே அவர்?” என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே வாள் ஒன்றை தீட்டிக்கொண்டிருந்த பீஷ்மர் இமைகளை மட்டும் தூக்கி அவனை ஏறிட்டுப்பார்த்தார். “எடுங்கள் உங்கள் ஆயுதத்தை….” என்றான் விசித்திரவீரியன். பிடிக்கத்தெரியாமல் அவன் வைத்திருந்த வாள் கோணலாக ஆடியது. அவனுடைய கால்களில் ஒன்று பலமிழந்து கொடிபோல நடுங்கியது. பீஷ்மர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44270

புறப்பாடு II – 17, பின்நின்றவர்

மதுரையை ரயில் தாண்டியபிறகுதான் நான் விழித்துக்கொண்டேன். அதுவரை எந்த சுயபோதமும் இல்லாமல் தூங்கியிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எச்சில் என் தோளிலும் மடியிலுமாக வழிந்திருந்தது. சன்னலோர இருக்கை என்பதனால் நன்றாகவே சாய்ந்துகொள்ள முடிந்தது. கால்களை நீட்டி சோம்பல் முறித்தேன். எதிரே இருந்த தெற்றுப்பல்காரர் ‘நல்ல தூக்கம் என்ன தம்பி?’ என்றார். ‘ஆமா…’ என்றேன்.  ‘பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு சென்று முகம் கழுவி கழிப்பறை சென்றுவந்தேன். ‘இப்ப இனிமே டீக்காரன் எவனும் வரமாட்டான். சிலசமயம் கோயில்பட்டீல ஏறுவான்’ ‘கோயில்பட்டியா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40343

புறப்பாடு II – 9, காலரூபம்

காசியில் ஒரு படகில் ஏறி மறுகரையில் இருக்கும் காசிமன்னரின் அரண்மனைக்குச் சென்றேன். படகில் நான்மட்டும்தான் போகப்போகிறேன் என்ற பிரமையில் இருந்தேன். சின்ன படகுதான். ஆனால் அந்த குகா இளைஞன் தொடர்ந்து ஆட்களை கூவிக்கூவி ஏற்றிக்கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் படகின் விளிம்புக்கும் நீருக்குமான இடைவெளி நான்கு இஞ்ச்தான் இருந்தது. ஒரு மார்வாடி குண்டு மனிதர் ஏறியபோது என்பக்கம் படகு மேலெழுந்து அவர் அருகே நீர் உள்ளே கொட்டியது. இறங்கிவிடலாமா என்று நினைத்தேன். அதற்குள் அவன் மோட்டாரை இணைத்திருந்த கயிற்றைப்பிடித்து இழுத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40010

புறப்பாடு II – 7, மதுரம்

காசியிலிருந்து டேராடூன் செல்லும் ஹரித்வார் ரயிலில் குளிர்காலத்தில் கூட்டமே இருக்காது. அதுவரை தள்ளுமுள்ளு நிறைந்த ரயிலையே பார்த்துவந்தவன். மொத்தமும் காலியாக ஒரு ரயில் வந்து நின்றபோது உண்மையிலேயே அது ரயில்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. ரயில் கிளம்புவது வரை அதனருகிலேயே நின்றேன். பெரியவகுப்புகளில் பலர் ஏறிக்கொண்டிருந்தார்கள். பதிவுசெய்யாத பயணிகளின் பெட்டியில் ஒருவர்கூட ஏறவில்லை. ரயில் நினைத்துக்கொண்டு திக் என்று அசைந்தபோது சட்டென்று பாய்ந்து ஏறி உள்ளே சென்று மரபெஞ்சில் அமர்ந்துகொண்டேன். காசியில் வாங்கிய காவித் தோள்பைக்குள் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39969

» Newer posts