Tag Archive: ஓஷோ

விசித்திரபுத்தர்

  சம்பவாமி யுகே யுகே என்பது தெய்வங்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஞானாசிரியர்களுக்கு பொருந்துகிறது. அந்தந்தக் காலகட்டத்தின் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ப அவர்கள் தோற்றம்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரைப்போல் பிறிதொருவர் இல்லை. இது வரை வந்தவர்களை வைத்து இனிவரும் ஒருவரை புரிந்து கொள்ள முடியாது. ஆனால்… ஆம் அந்த பிழையையே எப்போதும் செய்கிறோம். ஞானாசிரியர்களுக்கு என்று நம் மரபு ஒரு நிலைச்சித்திரத்தை அளிக்கிறது. அதில் அத்தனை ஆசிரியர்களையும் கொண்டு சென்று பொருத்துகிறோம். நம் புனிதர்கள் அத்தனை பேருக்கும் ஒரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93210

காட்டை வெல்வது

அன்புள்ள ஜெ, நலமா, அறம் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் நன்றாக இருக்கிறதென நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக “ஒருவன் தன் வாழக்கை முழுவதையும் புரிதலுக்காக பலி கொடுக்காவிட்டால் இதுபோன்ற ஒரு கதையை எழுத முடியாது” என்று “யானை டாக்டர்” பற்றி என் நண்பர் ஒருவர் விசேஷித்துச் சொன்னார். நானும் முதலில் தேர்ந்தெடுத்து வாசித்தது “யானை டாக்டர்” கதையைத்தான். மிகச் சாதாரணமாக பக்கங்களை கடந்துபோகையில் சராசரி வாசகர்கள் சாதாரண விஷயங்களைத்தான் கொண்டாடுவார்கள் என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க முடியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/49002

காந்தி ஓஷோ மற்றும் சிலர்

அன்புள்ள ஜெ நான் உங்கள் தொடர்ந்த வாசகன் நான் சமீபத்தில் சுவாமி சுகபோதானந்தாவின் ‘Personal Excellance through Bhagavt Geetha’ என்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்குபெற்றேன் அதில் அவர் சொன்னார் ‘Hurting one’s self is also kind of violence’ காந்தியடிகளின் உண்ணா நோன்பை (தன்னை வருத்திக் கொள்தல்) இத்துடன் இணைத்துப் பார்க்கையில் அதுவும் ஒரு’ violence’ தானோ (உண்ணா நோன்பு – நல்ல விஷயத்திற்காக இருந்தாலும்) என எண்ணுகிறேன். தயவு செய்து நேரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32042

ஓஷோ-கடிதங்கள்

சமீபத்தில் எதையும் படித்து இவ்வளவு நெகிழ்ச்சியாக உணர்ந்தது இல்லை. ஒன்றை அறிந்துகொள்ளுதல் ஒரு உயர்வான அனுபவம் , அறிந்தவற்றைப் புரிந்து கொள்ளுதல் இன்னும் மேலான அனுபவம், ஆனால் அறிந்தவற்றையும் அதைப் புரிந்தவற்றையும் உணர்ந்துகொள்ளுதல் ஒரு உன்னதமான அனுபவம் , மிக அபூர்வமாகவே அது கைகூடும், மேலும் இந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் நமக்கு மிக அரிதாகவே வாய்க்கும். இந்த வரிகள் அத்தகைய மின்னலெனத் தெறிக்கும் ஒற்றை வரிகள் நிறைய நமக்கு அறிமுகமானவை தான், நம் ஒவ்வொருவர் கைவசமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27343

ஓஷோ-கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்..! ஓஷோ குறித்த தங்களின் பதிவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். திரைப்படத்தில் சண்டைக்காட்சியின் போது, கதாநாயகன் மீது அடி விழுந்து விடக்கூடாது என்று தோன்றும் மன நிலையே ஒவ்வோரு முறையும் ஏற்படுகிறது. ஓஷோ பற்றி நீங்கள், எப்போதும் சரியாகத்தான் சொல்லி வருகிறீர்கள். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்கள் மீது வசை மாரி பொழிந்து விடுவார்களோ? என்ற அச்சம் இருந்தது. ”ஓஷோ – உடைத்து வீசப்பட வேண்டிய பிம்பம்-3″ அதைப் போக்கிவிட்டது. படிக்கப் படிக்க என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27271

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3

தஸ்தயேவ்ஸ்கி ஓஷோவுக்குப் பிரியமானவர். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் உள்ள மையக்கதாபாத்திரங்களில் ஒன்றான மர்மல்டோஃப் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். [ஓஷோ மேலை இலக்கியத்தில் யாரையெல்லாம் கவனித்திருக்கிறார், அவர்களுடன் அவர் எந்த கீழைச்சிந்தனையாளரை இணைத்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது] தன்னை ஒரு கீழ்த்தரமான குடிகாரனாக, மோசடிக்காரனாக, பொறுப்பற்ற தந்தையாக, முற்றிலும் கீழ்மகனாக உணரும் மார்மல்டோஃப் தன் மீட்பர் தன்னிடம் ஒரு புனிதராக வந்தால் அவர் முகத்தில் காறி உமிழ்வேன் என்கிறான். அவரும் தன்னைப்போன்ற ஒரு பொறுக்கியாக, கையாலாகாதவராகத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27166

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 2

புராதனமான சீன ரகசிய மெய்ஞானநூல் ஐ ச்சிங். மாற்றங்களின் புத்தகம் என்று அதற்குப் பெயர். அதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சோதிடநூலாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மொத்த நூலுமே பலவகையான கூறுகளாகப் பிரிக்கப்பட்டு இன்று ஒரு சோதிட உபகரணமாக உள்ளது. ஒரு காலகட்டத்தின் நூலை இன்னொரு காலகட்டம் தனக்கேற்ப கையாள்கிறது. இது இலக்கியத்துக்கு சரிவரும். ஏனென்றால் பன்முக வாசிப்பு வழியாகவே இலக்கியம் தன்னை பெருக்கிக் கொள்கிறது. இலக்கிய வாசிப்பென்பது பெருகும் வாசிப்பு. ஆனால் ஞானநூல்களுக்கு இது சரியல்ல. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27159

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே பாலசந்தர் எடுத்தவை. இரண்டுமே கமலஹாசன் நடித்தவை. 1980ல் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு. 1988ல் வெளிவந்த உன்னால் முடியும் தம்பி. இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. வறுமையின் நிறம் சிவப்பு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் எழுபதுகளின் மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். தொண்ணூறுகளுக்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் உன்னால் முடியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27154

காந்தி காமம் ஓஷோ

ஓஷோ தன் உரைகளில் மனதின் இரட்டை நிலைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் காந்தியை இழுக்கிறார் என்றே தோன்றுகிறது. மனம் நிச்சயமாக ஒருவழிப்பாதை இல்லை என்று ஏராளமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் பழமைவாத ஒழுக்கம் என்பது எப்பொழுதும் மனதின் ஒருவழிப்பாதையைப் பற்றி மட்டுமே பேசி வந்துள்ளது. ஒரே ஆணை வாழ்நாளெல்லாம் பூஜித்து வருவது, ஒருவனுக்கு ஒருத்தி, எத்தனையோ பொய் சொல்ல வேண்டிய தருணங்களிலும் வற்புறுத்தி உண்மையே பேசுவது, கோபம் பொத்துக்கொண்டு வரும் போதெல்லாம் அதை அடக்கி வைப்பது, சாந்தமாகப் பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27222

கிரிமினல் ஞானி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…நலமென நம்புகிறேன். முட்டாள்களின் மடாதிபதி என்ற தலைப்பை ஓஷோவின் படத்துடன் பார்த்தவுடன் எனக்கு ஒரு உண்மை புரிந்து போயிற்று…எங்கோ யாரையோ தூண்டுகிறீர்கள் என்று. ஏன் என்றால் உங்களின் இந்து ஞான மரபில் ஆறு தத்துவங்கள் படித்தபொழுது அவர் உலக ஞான மரபை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் என்று எழுதி இருக்கிறீர்கள். அவர் மடத்தில் முட்டாள்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர் முட்டாளாக இருக்க வாய்ப்பே இல்லை. இதை அவர் மீது எனக்கு இருக்கும் நன்றி உணர்ச்சியினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27146

Older posts «