Tag Archive: ஓலைச்சிலுவை

ஓலைச்சிலுவை – கடிதம்

அன்பு அண்ணா நாம் இளமையில் பார்த்து வளரும் ஆளுமைகள் நம்முள் நிகழ்த்தும் பாதிப்பு அளப்பரியது. நம்மை அவர்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்கின்றோம். அவர்களாக வாழ விழைகிறோம். அவர்கள் வாழ்வின் மெய்மை நம்முள் எங்கோ படிந்து விடுகின்றது . ஆனால் அவர்களை போன்ற ஒரு புற வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்த போதிலும், அகத்தே நம்மால் அவர்களை எளிதில் சென்றடைய இயல்வதில்லை . அதற்காக அவர்களை விட்டு விலகவும் முடியாது .நம் ஆன்மா விழித்தெழும் தருணம் வாய்க்கும் வரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72038/

ஓலைச்சிலுவை -கேசவமணி

“அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த தெய்வங்க நினைச்சா அப்படி நடக்கட்டு” என்று சிறுவனின் அம்மா, இறந்துபோன தன் கணவனை விட்டுச் செல்லுவது நமக்கு நியாயமாகவே படுகிறது. ஓலைச்சிலுவை பற்றி கேசவமணி அறம் அனைத்துவிவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62991/

சாமர்வெல்

டாக்டர் சாமர்வெல் பற்றிய இந்தக்கட்டுரையை நண்பர் இணைப்பனுப்பியிருந்தார். அக்காலகட்டத்தில் மலையேற்றத்துக்கு ஒலிம்பிக் போட்டியில் இடமிருந்ததும் அதில் டாக்டர் சாமர்வெல் விருதுபெற்றிருப்பதும் ஆச்சரியமளிக்கிறது. சாமர்வெல்லின் மகனுக்கு இப்போது 80 வயது. தந்தையைப்பற்றிய அரிய நினைவுகளுடன் இருக்கிறார். சாமர்வெல் பிரித்தானியராக இருந்தாலும் இந்தியா பெருமையுடன் நினைவுகூரவேண்டியவர். தமிழில் சாமர்வெல் பற்றி ஒரு நல்ல நூலை எவராவது எழுதினால் நிறைவாக இருக்கும். லண்டன் வாழ் நண்பர்கள் எவராவது இதற்கான முயற்சியை எடுக்கலாம். இங்கே இருப்பதை விட அங்கே எளிதாக தகவல்கள் கிடைக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27495/

ஓலைச்சிலுவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கர்த்தரை என் அகம் உணரச் செய்த ஓலைச் சிலுவைக்கு நன்றி. இதைத் தாண்டி, இந்தப் புனைவை வைத்துக்கொண்டு, மத மாற்றம், மிஷனரிகளின் நோக்கம் இவற்றை ஆராய்வது அபத்தமாகப்படுகிறது. [மதத்தையும் வரலாற்றையும் சமூகத்தையும் அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாது என்று ஏதாவது கூறுவீர்கள் – ஆனால், என்னைப் பொறுத்தவரை ஓலைச் சிலுவை எனக்களித்த ஆத்மார்த்த அனுபவத்தைத் தாண்டி எதுவும் தேவை இல்லை- இது என் தரப்பு:) ] அன்புடன் ஸ்ரீனிவாசன் ==================================== சில ஆண்டுகளுக்கு முன்பு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13093/

சாமர்வெல் ஓர் விவாதம்

ஓலைச்சிலுவை பற்றி பல தரப்பிலான விவாங்கள் குழுமத்தில் வந்தன. வழக்கம்போல இங்கும் நான் மத்திம மார்க்கத்தின் ஆள். கிறிஸ்துவை எப்போதுமே இரண்டாகப் பார்க்கலாம். ஒன்று, ஆன்மீகக் கிறிஸ்து. வரலாற்றில் எல்லா ஞானிகளும் சான்றோர்களுக்காகப் பேசியபோது கைவிடப்பட்டவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்குமாக பேசிய முதல் ஞானகுரு, முதல் இறைமைந்தர் அவர். அந்த அம்சமே என்னை அவரிடம் வைத்திருக்கிறது. மிக அந்தரங்கமாக அவரை உணரச் செய்கிறது. கிறிஸ்துவை அறிய சரியான வழி இந்தப் புரிதலே அந்த ஞானகுருவால் உந்துதல் கொண்ட மெய்ஞானிகள் பலர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13168/

ஓலைச்சிலுவை- சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ அன்புள்ள என்று உங்களை அழைப்பேன் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. இனம்புரியாத ஒரு கசப்பு உங்களைப்பற்றி இருந்துகொண்டே இருந்தது. உங்களை ஓர் இந்துத்துவவாதி என்று கேள்விப்பட்டிருந்தத்துதான் காரணம் என்று சொல்லலாம். அது என் மனசிலே இருந்துகொண்டே இருந்தது. நான் சிலகதைகளையும் கட்டுரைகளையும்தான் வாசித்திருக்கிறேன். வாசிக்கும்போதே கசப்பு வந்து பாதியிலேயே நிறுத்திவிடுவேன். நிறைய நண்பர்களிடம் உங்களைப்பற்றி நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். உங்களை தூக்கி வீசுவதற்கான வாதங்கள் ஒன்றும் என்னிடம் இல்லை. இருந்தாலும் உணர்ச்சிகரமாகப்பேசிச் சமாளித்துக்கொண்டு போவேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13028/

ஓலைச்சிலுவை [சிறுகதை] – 3

நீட்சி [ 3 ] அத்தகைய மாமனிதனால் தீண்டப்பட்டும்கூட என் ஆன்மா விழித்தெழாமலேயே இருந்தது. என் எட்டாவது வயதில் அவரிடமிருந்து நான் ஏசுவின் சொல்லைப் பெற்றேன். ஆனால் அது என் பெயரை மட்டுமே மாற்றியது. உள்ளுக்குள் நான் புரளவேயில்லை. மண்ணில் சாமர்வெல்லின் கால்கள் பட்டுச்செல்லும் ஒவ்வொரு தடத்தையும் ஓராயிரம்முறை சென்று முத்தமிடும் நாய்போல இருந்தது என் மனம். அனால் அவர் எனக்கு கொடுத்த பைபிள் வெறும் சொற்களாகவே இருந்தது. என்னை மிஷன்பள்ளியில் நேரடியாக ஐந்தாம் வகுப்பில் கொண்டுசென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12176/

ஓலைச்சிலுவை [சிறுகதை] – 2

தொடர்ச்சி 2 என்னை மதம் மாற்றியவர் நெய்யூரின் புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் தியோடர் ஹோவர்ட் சாமர்வெல். [Dr.Theodore Howard Somervell] ஊரில் அவரை சாமுவல் என்று சொன்னார்கள். நான் அவரது வரலாற்றை தெரிந்துகொண்டது மேலும் நான்கு வருடங்கள் கழித்துதான். அவர் தன்னைப்பற்றிச் சொல்லக்கூடியவரல்ல. செயலே உருவான மனிதர். மிகக்குறைவாகப் பேசக்கூடியவர். எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பார். பைபிள் தவிர வேறொன்றும் வாசிக்காத வெள்ளைகாரர்கள் போல அல்ல. அவருக்கு ஷேக்ஸ்பியர் மேல் தணியாத மோகம் இருந்தது. அவரது மேஜைமேல் எப்போதும் ஷேக்ஸ்பியரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12178/

ஓலைச்சிலுவை [சிறுகதை] – 1

[ 1 ] என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோதுதான் நான் நெய்யூர் ஆஸ்பத்திரிக்கு முதன்முதலாகச் சென்றேன். எனக்கு அந்த ஆஸ்பத்திரி அப்போது ஒரு மாபெரும் ஆச்சரியம். வெள்ளைவெளேரென்று இரட்டைப்பனைகளைப்போல எழுந்த தூண்கள் கொண்ட உயரமான கட்டிடத்தை பிரமித்துப்போய் அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றேன். அதன் உயரமான ஓட்டுக்கூரையின் இரண்டு விளிம்புகளிலும் இரு சிலுவைகள் நின்றன. கட்டிடத்தைசுற்றி நின்ற பெரிய வேப்பமரங்களின் பொன்னிறமான சருகுகள் கூரை முழுக்க விழுந்து கிடந்தன. ஆனால் ஆஸ்பத்திரிமுற்றம் சுத்தமாக கூட்டப்பட்டிருந்தது. வாரியல் கோடுகள் அலையலையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12180/