Tag Archive: ஒழுக்கம்

முத்தம்

முத்தப்போராட்டம் பற்றி பல கேள்விகள் வந்தன. பொதுவான என் எண்ணங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இவ்விஷயம் போதிய அளவு ஆறிவிட்டது என்பதனால் வம்பாக ஆகாமல் கொஞ்சம் சமநிலையுடன் பேச இப்போது முடியலாம் பொதுவாக பாலியல் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் எல்லாம் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக்கொண்டிருக்கும். அவை மாறாதவை, அழியாதவை என எண்ணுவதைப்போல பேதமை ஏதும் இல்லை. ஐயமிருந்தால் சற்று பின்னால் சென்று நோக்கினால் போதும். இதே தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிக்குச் செல்வது விபச்சாரத்துக்கு நிகர் என்று பேசப்பட்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67062

பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்

ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன். முடிவாக உங்களிடம் கேட்கலாம் என்று எழுதுகிறேன். பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ராஜ்குமார் அன்புள்ள இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56792

கற்பு என்பது…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் கண்ணன். ஓரளவுக்கு உங்கள் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ‘கற்பு’ என்னும் வார்த்தையைக் குறித்துத் தற்செயலாக யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க யோசிக்க அது ரொம்ப மர்மமான வார்த்தையாகப் படுகிறது. கொஞ்சம் மேலோட்டமாகப் பொருள் கூறினால், ஒழுக்கமாக இருந்து வரும் ஒரு பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசியோ அல்லது வேறேதும் செய்து மயக்கியோ ஒருவன் அவளை அடைவானாயின் அது கற்பழிப்பாகலாம். உடனடியாக நினைவுக்கு வருவது ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையில் வரும் சித்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35556

எதற்காக அடுத்த தலைமுறை?

ஜெயமோகன் ஐயா, வெகு நாட்களாக மனதில் இருந்த கேள்வி; உங்களிடம் விளக்கம் கிடைக்கும் எனக் கருதினேன். ஊரைச் சுற்றி ஊழல், பொய், பகட்டு, பொறாமை, லஞ்சம் என அடுத்து அடுத்துத் துரத்தி வந்து நம்மை வலையில் சிக்க வைக்கப் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் அதில் இருந்து விடுபட்டு வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. நேர்மையாக இருக்க வேண்டும் என்று இருக்கும் சில பேருக்கு மிஞ்சிய பட்டம் பிழைக்கத் தெரியாதவர்கள். இப்படி உள்ள கால கட்டத்தில் எதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21376