Tag Archive: ஒழிமுறி

டப்பிங்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தாங்கள் கதை திரைக்கதை அமைத்த மலையாள சித்திரம் ‘ஒழிமுறி’ கண்டேன், மிகச் சிறந்த ஒரு படைப்பு , தமிழிலும் இது போல் படங்களில் தங்களது பங்களிப்பு தொடர வேண்டும். படத்தில் வரும் நீதி அரசர் (ஜெட்ஜ்) கதாபாத்திரத்தின் குரல் அட்சர சுத்தமாக தங்களது குரலாக ஒலிக்கிறதே? தாங்கள் அப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தீர்களா? இணையம் ஊடாக தங்களது பல தரப்பட்ட பேச்சுக்களை கேட்டதினால் தங்களது தமிழ் உச்சரிப்பு மனதில் தனியாக பதிந்துவிட்டது , அக்கதாபாத்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80851/

தாயார் பாதமும் அறமும்

அன்புள்ள ஜெயமோகன் சார், சமீபத்தில் தங்கள் அறம் சிறுகதை தொகுப்பு வாசித்தேன். எல்லா கதைகளும் மனதை நெகிழச்செய்தன.அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் படித்தேன். அதில் பலமுறை வாசித்த கதை தாயார் பாதம். அந்த தொகுப்பிலேயே என்னை மிகவும் ஈர்த்த கதை அதுதான் என நினைக்கிறேன். It was not a straightforward story, but how can it be anything else? ராமனின் கதாபாத்திரம் அவ்வளவு gentle, hesitant, அவன் சுமந்த வடுக்கள் அவ்வளவு ஆழமாக பதிந்தவை, வேறெப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66539/

ஒழிமுறி – இன்னொரு விருது

டி.ஏ.ஷாஹித் நினைவு திரைக்கதை விருதை ஒழிமுறிக்காக பெற்றுக்கொண்டு நேற்றுதான் ஊர் திரும்பினேன். இன்று இன்னொரு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. Inspire Film Awards 2013 அறிவிக்கப்பட்டுள்ளது. ஒழிமுறி சிறந்தபடம் சிறந்த நடிப்பு [லால்] சிறந்த திரைக்கதை [நான்] ஆகிய மூன்று விருதுகளை பெற்றிருக்கிறது. Aimfill Inspire Film Awards கேரளத்தில் திரைப்படங்கள் மற்றும் கட்டிட வரைவாளர்களுக்காக வழங்கப்படும் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. கொச்சியை மையமாகச் செயல்படும் வெவ்வேறு நவீனத் தொழில்முறைக் கலைஞர்களின் கூட்டமைப்பு இது. இது ஒழிமுறி திரைக்கதைக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40677/

ஒழிமுறிக்கு திரைக்கதை விருது

2013-ஆம் வருடத்தில் வந்த சிறந்த திரைக்கதைக்கான டி.ஏ.ஷாஹித் நினைவு விருது ஒழிமுறி படத்துக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான ரஞ்சித் தலைமையிலான குழு அதை தேர்ந்தெடுத்துள்ளது. டி.ஏ.ஷாஹித் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர். 2003-இல் வெளிவந்த பாலேட்டன் அவரது முதல்படம். சென்ற ஆண்டு மறைந்தார். பிரபல திரைக்கதையாசிரியர் டி ஏ ரசாக்கின் தம்பி. இந்தவிருது இவ்வருடம் முதல் வழங்கப்படுகிறது. வரும் அக்டோபர் 13 அன்று ரசாக்கின் சொந்த ஊரான கொண்டோட்டியில் நிகழும் விழாவில் விருது அளிக்கப்படும். ஒழிமுறிக்குக் கிடைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40041/

தேசிய திரைப்பட விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்ற இரண்டு நாட்களாகவே செய்திச்சானல்களில் இதைப்பற்றித்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஒழிமுறி நான்கு பரிசுகளுக்கான இறுதிச்சுற்றில் இருக்கிறது என்று செய்தி போட்டுக்கொண்டே இருந்தனர். கடைசியில் லாலுக்கு சிறந்த நடிகருக்கான நடுவர்களின் சிறப்புப் பாராட்டுக்குறிப்பு மட்டுமே கிடைத்தது. லாலும் மதுபாலும் சற்று ஏமாற்றம் கொண்டிருப்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் நேர்த்தியாகக் கொடுக்கப்படும் விருதுகள்கூட ஒரு குறிப்பிட்ட வகையிலேயே அளிக்கப்படமுடியும். நல்ல படங்களின் ஒரு பட்டியல் உருவாக்கப்படுகிறது. அது குறுக்கப்பட்டு சிறந்த படங்களின் ஒரு சிறிய பட்டியல். அதிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35385/

ஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…

சென்ற 2012 ஆம் வருடத்திற்கான ’கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் அவார்ட்ஸ்’ அறிவிக்கப்பட்டுள்ளது. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டுவரும் இந்த விருது கேரள அரசு விருகளுக்கு நிகரான முக்கியத்துவம் கொண்டது. கேரளத் திரைவிமர்சகர்களின் கோழிக்கோடு, கோட்டயம், திருவனந்தபுரம் அமைப்புகள் கூட்டு சேர்ந்து இதை வழங்குகின்றன. நெடுங்காலம் விருதுகளை அறிவிப்பது மட்டுமே நிகழ்ந்தது. விழாவோ ரொக்கப்பரிசோ ஏதும் இல்லை. ஆனால் அது கறாரான விமர்சக அளவுகோல்களின் படி வழங்கப்பட்டதனால் அதற்குப் பெரும் மதிப்பு உருவானது. சமீபகாலமாக தொலைக்காட்சிகள் மூலம் எல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34922/

ஒழிமுறி- டானியேல்- மலையாற்றூர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் இன்று காலை செய்தித்தாள் வாசித்தபோது அடைந்த அதிர்ச்சி வருத்தம் கொண்டு இதை எழுதுகிரேன் கேரள அரசு விருதுகளைப் பார்த்தபோது தோன்றியவை இவை 1. சிறந்த நடிகருக்கான விருது லாலுக்குக் கிடைத்திருக்கவேண்டும். ஒழிமுறியில் நடிப்பு அவ்வளவு நன்றாக இருந்தது. 2.சிறந்த நடிகைக்கான விருது மல்லிகாவுக்கு ஒழிமுறிக்காகக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் 3. சிறந்த திரைக்கதைக்காக உங்களுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும் * அதன் பின்னர் வாசித்தேன் நீங்கள் ஜே சி டானியேல் பற்றி எழுதிய கட்டுரை மேலும் அதிர்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34652/

ஒழிமுறிக்கு விருது

ஒழிமுறி சென்ற வருடத்திற்கான கேரள அரசு சலச்சித்ர அக்காதமி விருதுகளில் 3 விருதுகளை வென்றுள்ளது. மிகச்சிறந்த இரண்டாவது சிறந்த படத்துக்கான விருது, மிகச்சிறந்த பின்னணி இசைக்கான விருது, மிகச்சிறந்த உடையலங்காரத்துக்கான விருது கேரளத்தில் சமீபத்தில் சிறந்த படங்களுக்காக இவ்வளவு அதிகமான படங்கள் போட்டியிட்டதில்லை. போட்டிக்கு ஜூரி பார்த்த படங்கள் கிட்டத்தட்ட எண்பது. அவற்றில் பன்னிரண்டு படங்கள் விருதுகளின் கடைசிப் பட்டியலில் இருந்தன. ஒழிமுறி சிறந்த படம் [மதுபால்] சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் [லால் ] சிறந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34641/

அகம் மறைத்தல்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் , தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி சொல்லும் முன், தாமதமான என் பதிலுக்கு வருத்தம் தெரிவிப்பதுதான் முறை. தாமதத்திற்கு மூன்று காரணங்கள். முதலாவது, தங்கள் பதில் ‘junk’ பெட்டியில் சென்று சேர்ந்துவிட்டது. தங்கள் முகவரி, என் முகவரித் தொகுப்பில் இருந்தும் இது எப்படி நடந்ததென்று தெரியவில்லை. உங்களின் தளத்தில் (அல்லது, அது எங்களின் தளம்) இதை வெளியிட்டபின் சென்று மின்னஞ்சலில் தேடியதில் இது தெரிந்தது. இரண்டாவது, நாஞ்சில் நாடன் அவர்களின் ‘சூடிய பூ சூடற்க” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33190/

ஒரு சினிமாவே அல்ல

இயக்குநர் பரதனுடன் சேர்ந்து சினிமாக்களில் பணியாற்றிய நாட்களைப்பற்றிப் பேசும்போது பாராட்டுகளைக்கூட பரதன் தனக்கே உரிய முறையில்தான் வெளிப்படுத்துவார் என்று சொன்னார் இசையமைப்பாளர் ஜான்சன். ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு நடிப்பு மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றினால் ‘நல்லது…நீ செய்தது என்று சொல்ல முடியாது’ என்று சொல்வாராம் அவர். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கலந்த ஒரு வரி அது என்றார் ஜான்சன் ஆனால் ஒருவன் தன்னால் செய்ய முடியக்கூடியதன் எல்லையைத் தாண்டிச் செல்வதைத்தான் அவர் சொல்கிறார் என்று நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33047/

Older posts «