Tag Archive: ஒரு கணத்துக்கு அப்பால்

ஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு கணத்துக்கு அப்பால் சிறுகதையை இரண்டு முறை படித்தேன். நீலம் நாவல் முடித்துவிட்டு நீங்கள் பித்துநிலையில் நாகர்கோயிலில் அலைந்து திரிந்ததைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அம்மனநிலையில் இருந்து வெளிவருவதற்கு பாலியல் தளத்தைப் பார்த்ததைப் பற்றியும். அப்படி வெளிவந்த பிறகு நீங்கள் எழுதிய சிறுகதையாக இருக்குமோ என்று தோன்றியது. இந்தக் கதையில் வரும் இருவருமே சற்று மனப்பிறழ்வு கொண்டவர்கள்தான். ‘பிறழ்வு’ சற்று கூடுதலான வார்த்தையோ… சோர்வு என்பது சரியாக இருப்பதாகப்படுகிறது. அல்லது அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75782

மீட்சியும் மீளுருவாக்கமும்

அன்புள்ள ஜெ, பெரும்பான்மையானவர்களால் தொடப்படாத ஒரு களம். இணையத்தில் உலாவும் எவரும் நிறைய நேரத்தைச் செலவிடும் இடமாக இருப்பவை இத்தகைய பாலியல் தளங்கள். சமூக வலைத்தளங்கள் பெரும்பான்மை நேரத்தை எடுத்துக்கொள்ளும் வரையில் இணையத்தில் பார்ப்பதில் 80 சதவீதம் இத்தகைய தளங்களாகவே இருந்திருக்கின்றன. இன்றும் பெரும்பாலானவர்களின் வடிகாலாகவும் இத்தளங்கள் செயல்படுகின்றன. உண்மையில் இது பெரும்பணம் புழங்கும் ஓர் தொழில். ஆனால் இக்கதை பாலியல் கிளர்ச்சி கதை அல்ல. உண்மையில் கதையின் தலைப்போடு சேர்த்துப் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75167

உன்னதம் இருவகை

ஆசிரியருக்கு, இக்கதை தனக்குள் பல்வேறு அடுக்குகளை கொண்டுள்ளதைக் காண்கிறேன், ஒரு சிறுகதை படித்தவுடன் வளரத் துவங்க வேண்டும். இது வேர்களாக பரந்து பரவுகிறது, நினைவில் இருந்து மேலும் மேலும் வாசித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். உன்னதம் இருவகைப் பட்டது, முதலாவது பெரிதும் அகவயமானது, அவை நம்மிடம் தன்னியல்பாக உள்ள மனித மேன்மைகளான தாய்மை, கருணை, பெருந்தன்மை போன்றவை. வெளிப்படும் தருணத்தில் அதை தரிசிக்கலாம். இரண்டாவது பெரிதும் புறவயமானது, நாம் ஆவது மட்டும் ஆக்குவது. அவை வலுவான, அமைப்பான உடல், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75165

ஒரு கணத்துக்கு அப்பால் [ சிறுகதை]

அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி செந்நிற அடுக்குகளாக விரிந்திருந்தது. இளநீலநிற நகச்சாயம் பூசப்பட்ட விரல்களால் அவ்விதழ்களின் மேல்நுனியை அகற்றியிருந்தாள். இன்னொரு கையில் கரியநிறமான செயற்கை ஆண்குறி. கீழே ஒரு கணத்துக்கு அப்பால் என்ற வரிகள் மின்னி மின்னி அணைந்தன அப்பா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74658